என் இனிய பின்லாந்து நினைவுகள் .....
கலைச்செல்வி இராமநாதன் T
(பயணத்தொடர் கட்டுரை- 13 பாகங்களாக நகரத்தார் மலரில் 2010 நவம்பர் முதல் 13 இதழ்களில் வெளிவந்து பலராலும் பாரா ட்டப் பெற்றது )
Finland ஐரோப்பக்கண்டத்திலுள்ள ஒரு சிறிய நாடு . சிறிது கூட தூசு மாசு இல்லாத , மொத்தம் ஐம்பது லட்சம் மக்கள் தொகை உள்ள , ஓங்கி வளர்ந்த பைன் மரங்கள் காணப்படும் , மிக அழகிய நாடு அது. Singapore போன்று நல்ல அரசாட்சிக்குப் பெயர் பெற்ற நாடு .
ஹெல்சிங்கி விமான நிலையத்தில் முதலில் நம் கண்களில் படுவது "Fill your lungs with pure Air - No pollution city " என்று எழுதப்பட்ட வண்ண மின் பலகை . அது போலவே உண்மையிலேயே அது ஒரு pollution இல்லாத நாடு . இங்கு president ஆக உள்ள பெண்மணி மதிற்பிக்குரிய Taja Halonin அவர்கள் தொடர்ந்து பல ஆண்டுகளாக இதே பதவியில் நீடித்து வருகிறார் . ஆண்டுக்கு ஒரு முறை சுதந்திர தினத்தன்று முக்கிய பிரமுகர்களை எல்லாம் அழைத்து ஒரு பெரிய விருந்து வைத்து , அத்தனை பேர்களுடனும் அசராமல் சிரித்த முகத்துடன் கை குலுக்குகிறார் . இதை நேரடி ஒளிபரப்பாக ,அந்த ஊர் தொலைக்கட்சியில் நாங்கள் எங்கள் இல்லத்தில் இருந்தபடியே பார்த்து ரசித்தோம் .
Finland நாட்டிற்கு முதன் முதலில் நாங்கள் 2005 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் சென்றோம் . அங்கு மூன்று மாதங்கள் எங்கள் மூன்றாவது மகன் கண்ணன் வீட்டில் தங்கியிருந்தோம். பார்க்க வேண்டிய பல இடங்களையும் சுற்றிப் பார்த்துவிட்டு ஜனவரி 10 ஆம் தேதி , என் பேத்தி ஆர்த்தியின் முதல் பிறந்தநாளையும் பின்லாந்துக்காரர்களுடன் மகிழ்வாகக் கொண்டாடிவிட்டு , மறுநாள் தாயகம் திரும்பி வந்தோம் .
பேத்தி ஆர்த்தியின் முதலாம் ஆண்டு பிறந்தநாள் கொண்டாட்டம்
நான் என் முதல் பயணத்தைப் பற்றி இப்போது எழுதிக் கொண்டிருக்கிறேன் . அப்போது நவம்பர் மாதப் பனிப் பொழிவு லேசாகத் துவங்கி இருந்தது . டிசம்பர்
.ஜனவரி எல்லாமே உறை பனிக் காலம்தான் .
அங்கு என் மகன் வசித்த ஊரின் பெயர் "கிர்க்கின்னோமி" . என்ன பெயர் ஒரு மாதிரி இருக்கிறதென்று யோசிக்கிறீர்களா? பெயர் தான் அப்படி , ஆனால் இங்கிருப்பவர்கள் எல்லோரும் அந்த மாதிரி இல்லீங்க ... எல்லாருமே புத்திசாலிகள் தான் ... என்ன ? பல முதியவர்களுக்கும் ,சின்னக் குழந்தைகளுக்கும் கூட , ஆங்கிலம் பேசத் தெரியவில்லை!! ..எல்லாமே பின்னிஷ் மொழியில் தான் பேசுகிறார்கள் !... எனினும் சைகைகள் மூலமே நம்முடன் அன்புடன் அவர்கள் உரையாடுவதும் , ஓரிரு ஆங்கில வார்த்தைகளைத் தெரிந்து வைத்துக்கொண்டு நம்முடன் பேசுவதும், தனிச் சிறப்பு. அன்பை வெளிப்படுத்த மொழி தேவையா? ஒரு சின்னப் புன்சிரிப்பு ,மென்மையான கை குலுக்கல், மௌனமான தலை அசைவு போதுமே !
நானும் , என் துணைவரும் ஸ்வெட்டர் , ஜெர்க்கின், தலைக்கு குல்லா (காதை மறைத்தபடி ) கனமான பேன்ட் , கை உரை , கால் உரை , லெதர் ஷூஸ் , சகிதம்
சந்திர மண்டலத்திற்கு செல்வபர்கள் போல ஒப்பனை செய்துகொண்டு , முகத்திற்கு கிரீம் எல்லாம் தடவிக்கொண்டு , தினந்தோறும் இரண்டு மணி நேரம் , காலையில் வாக்கிங் சென்று வருவோம் . பொறுமையாக இந்த ஒப்பனை களைச் செய்வதற்கே அரை மணி நேரமாவது ஆகும். நம்ம ஊர் மாதிரி நினைத்துக்கொண்டு சும்மா வெளியில் கிளம்பினால் அவ்வளவுதான் ... we will be frozen to death ! ..
நாங்கள் நடந்து சென்ற போது வீதி முழுவதும் வெள்ளைப் பாய் விரித்தது போல எங்கும் ஐஸையே பார்க்க முடிந்தது . வீட்டுக் கூரை களிலெல்லாம் பல அங்குலத் திற்கு ஐஸ், வீதியின் நடுவில் மட்டும் இருந்த ஐஸை பிரத்யே கமாக உள்ள சாதனம் மூலம் அதிகாரிகள் காரில் வந்து அப்புறப்படுத்தி ஓரத்தில் கொட்டிவிடுகின்றனர். ஆகவே நாம் நடுவில் நடப்பதற்கு சற்று எளிதாக உள்ளது. எனினும் முற்றிலும் அந்தப் பனிக்கட்டிகளை அகற்றுவது என்பது இயலாத காரியம் . எனவே நாம் கவனமாகத் தான் நடந்து செல்ல வேண்டியுள்ளது . சற்று வயதானோர் , தம் கைகளில் பக்கவாட்டில் இரண்டு ஊன்று கோல்களை துணைக்கு வைத்துக்கொண்டு நடக்கிறார்கள் . அந்த ஊன்று கோல்களை Nomadic Poles என்று கூறுகிறார்கள் .
(போட்டோ- பின்லாந்து பைன் மரங்கள் நிறைந்த இடம் )
எழுபது வயது மதிக்கத் தக்க பெண்மணி ஒருவர் அந்தப் பனிபடர்ந்த சாலையிலும் அருமையாக நிதானமாக எந்தவித பதட்டமும் இல்லாமல் சைக்கிள் ஒட்டிக்கொண்டு கடைக்கு சென்று காய்கறி வாங்கிக்கொண்டு வருவதைப் பார்த்தபோது வியப்பாக இருந்தது. Flat வீட்டில் வசிப்பவர்கள் கார் நிறுத்து வதற்கென்று ஆங்காங்கே தனியாக கார் பார்கிங்க்ஸ் உள்ளன. இரவில் காரை நிறுத்திவிட்டு காலையில் அலுவலகம் செல்வதற்கு காரை எடுக்கவேண்டு மென்றால், கார் மேலே உள்ள ஐஸ் முழுவதும் தள்ளி விட்டுத் தான் எடுக்கவேண்டும் . கார் நிறுத்துமிடத்தில் ஹீட்டர் உள்ளது . அதற்க்கு மாதம் 7 Euro கட்டணம் . அதைப் பொருத்திவிட்டால் கார் மேலே உள்ள ஐஸ் மெல்ல மெல்ல உருகி கீழே கரைந்து நீராக ஓடுகிறது . ஹீட்டர் வேண்டாம் என்று நினைப்பவர்களும் ஒரு சிலர் இருக்கின்றனர். ஹீட்டர் க்குப் பணம் கட்டியும் அவசரத்தில் அதைப் பொருத்தாமல் இருப்பவர்களும் உள்ளனர் . அப்படி இருக்கும் கார் கள் பனியில் உறைந்திருக்கும்போது அதைக் கார் என்று சொல்வதை விட " ஐஸ் கார்" என்றுதான் சொல்லியாகவேண்டும் .
ஆனால் , நம் ஊரில் காரில் ஏசி இருப்பது போன்று அங்கே அனைத்துக் கார்களிலும் கண்டிப்பாக உள்ளேயும் ஹீட்டர் பொருத்தப்பட்டுத் தான் உள்ளன . ஆக, நாம் எந்த காரில் பயணம் செய்தாலும் காரின் உள்ளே நாம் அமர்ந்திருக்கும் போது , வெளியில் எவ்வளவுதான் நடுக்கும் உறை பனி இருந்தாலும் உள்ளே கத கத வென்று இதமாகத் தான் இருக்கிறது . அதே போல் ஒவ்வொரு வீடுகளிலும் உள்ளே கண்டிப்பாக ஒவ்வொரு அறையிலும் , சமையல் அறையிலும் ஹீட்டர் பொருதப்பட்டிருப்பதால்
வீட்டினுள்ளே குளிர் நமக்குத் தெரிவதில்லை . ஆக வீட்டினுள்ளே இருக்கும்போது இந்தியாவில் இருப்பதுபோல் தான் உணர்கிறோம் .
(போட்டோ : Snow Man உடன் நானும் ஏன் துணைவரும் மகன் கண்ணனும் )
அந்தப் பனி காலத்தில் சின்னப்பிள்ளைகள் மற்றும் பெரியவர்களும் கூட அழகழகாக ஐஸ் பொம்மை (ice man ) செய்து மகிழ்ச்சி அடைகிறார்கள் .பீட் ரூட்டை வட்ட வடிவமாக வெட்டி கண்களாகவும் கேரட்டை நீளமாக வெட்டி மூக்காகவும் செய்து அந்த ஐஸ் மனிதனுக்கு ஒட்டி வைத்து பார்த்து குதூகலித்தது வியப்பாக இருந்தது. நாங்களும் ஐஸ் மனிதன் செய்வதற்கு பாய் போல ஐஸ் ஐ ஓரிடத்திற்கு உருட்டிக் கொண்டுவந்து செய்தோம் ; சுமாராகத்தான் இருந்தது . இரண்டு மூன்று நாட்கள் கழித்து ஜன்னலிலிருந்து எட்டிப் பார்த்தால் ஐஸ் மனிதன் பாதி கரைந்து போயிருந்தான் ! முழு உருவமும் இல்லை; ஏனெனில் முதல் நாள் இரவு சற்றே மழை பெய்யவும்
வெப்ப மாறுபாட்டிலும் ,அந்த ஐஸ் பொம்மை கரைந்து போய்விட்டது.
அன்று தெருக்களை மூடியிருந்த பனிப் பாறைகளும் முக்கால் வாசி கரைந்து போய் வீதியில் உள்ள தரைகள் எல்லாம் கூட தெளிவாகத் தெரிய ஆரம்பித்து விட்டன. இங்கே வேடிக்கையான climate . முதல் நாள் பார்த்தல் ஒரே இருட்டாக இருக்கும். சூரியனே தெரியாது. மறுநாள் ஒரே வெளிச்சமாக இருக்கும் ; சில நாட்களில் பகல் 12 மணிக்கு வானத்தில் சூரியனையும் சந்திரனையும் ஒரு சேரப் பார்க்க முடியும்.
கவியரசு கண்ணதாசன் " தனிமையிலே இனிமைகாண முடியுமா? நள்ளிரவினிலே சூரியனும் தெரியுமா? " என்று பாடல் வரிகள் இயற்றியுள்ளார் ; ஆனால் அவர் பின்லாந்த் போய் பார்த்திருந்தால் ஆகா இரவினிலும் இந்த நாட்டில் சூரியன் தெரிகிறதே என்று ஆச்சர்யப்பட்டிருப்பர் !
Long days in summer எப்போதும் வெளிச்சமாக பகலாகவே இருக்கும் ; long nights in winter எப்போதும் இரவாகவே இருக்கும். பனி காலத்தில் பகல் மூன்று மணிக்கே வீதி களில் விளக்குகள் எரிய ஆரம்பித்து விடுகின்றன . மறுநாள் காலை பத்து மணிக்குத்தான் off செய்கிறார்கள் . பனி காலத்தில் கார்களுக்கு winter Tyre கட்டாயம் ; சறுக்காத டயர்கள் இருந்தால் தான் அந்தப் பனியில் கார்கள் ஓடும் . பின்னர் பனி முடிந்தபின் சாதாரண டயர்கள் பொறுத்த வேண்டும்.
ஹெல்சிங்கி என்பது பின்லாந்தின் தலை நகரம். அங்கு இந்தியர் களுக்கான கடைகள் இருக்கின்றன; வார இறுதி நாட்களில் அங்கு சென்று என் மகன் மருமகளுடன் இந்தியக் காய்கறிகள் மற்றும் பருப்பு எண்ணெய் அரிசி எல்லாம் வாங்கிவருவோம் ; பின்பு எல்லோரும் அமர்ந்து நெட்டில் down load செய்து தமிழ் நாட்டில் நேற்று ரிலீஸ் ஆன புத்தம் புதிய படங்களையும் கூட பார்த்து ரசிப்போம் . நான் விரும்பிய 40 ஆண்டுகளுக்கு முன் வெளிவந்த (1965 )
கர்ணன் படத்தை (சிம்மக்குரலோன் சிவாஜி நடித்த அற்புதமான படமன்றோ)
Net ல் download செய்து டிவியில் பார்த்த போது எனக்கு மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது . அந்த படத்தில் ஒரு காட்சியில் வட்ட வடிவத்தில் சரம் சரமாக கனகாம்பரப் பூ தொங்க விடப் பட்டிருக்கும் . அதே போன்று தான் ஹெல்சிங்கி யில் உள்ள ஒரு பெரிய கடையில் கிறிஸ்துமஸ்ஐ முன்னிட்டு பூக்களுக்குப் பதில் சரம் சரமாக சின்னச் சின்ன வண்ண விளக்குகள் பலப் பல வட்ட வடிவத்தில் தொங்க விடப்பட்டிருந்தன . அது ஒரு கண்கொள்ளாக் காட்சி யாகும் .
கிரிஸ்த்மஸ் திருநாளை வரவேற்பதற்கு ஒரு மாதத்திற்கு முன்னரே அத்தனை கடைகளிலும் அலங்கரிக்கப்பட்ட கண்ணைக் கவரும் கிறிஸ்துமஸ் மரங்கள் வைக்கப்படிருக்கின்றன. பச்சை நிற சின்ன மரம், அதிலே வண்ண வண்ண ஜரிகைத்தாள் மற்றும் சிவப்பு ஆடை அணிந்த கிறிஸ்துமஸ் தாத்தா வும் அந்த மரங்களில் கையில் கோலுடன் தொங்குகிறார் ! மேலும் வெண்மை நிறக் குட்டி தேவதைகளும் இறக்கைகளுடனும் கையில் கோலுடனும் தொங்குகிறார்கள். மிகச் சிறிய கலர் பல்பு களுடன் கிறிஸ்துமஸ் மரங்கள் அலங்காரம் செய்யப்பட்டுச் ஜொலிக்கின்றன ! ஹெல்சிங்கி யின் பல பிரதான வீதிகளில் கூட மேலே பல்வேறு வடிவங்களில் "V " "X " "S " வடிவங்களில் மின்னும் மின் விளக்குகள் நெடுகத் தொங்கவிடப்பட்டிருக்கின்றன. இவ்வளவு ஒரு அழகான , கண்ணையும் கருத்தையும் கவரும், நம்மைப் பரவசத்தில் ஆழ்த்தும் , அலங்காரங்களை , வண்ண வண்ண விளக்குகளை , நான் இதற்கு முன் எங்குமே பார்த்ததில்லை. மேலும் கிறிஸ்துமஸ் சமயத்தில் ஏறத்தாழ ஒரு மாதத்திற்கு அனைத்து வீடுகளிலும் 7 மெழுகு வர்த்திகள் "V " யைத் தலை கீழாக நிறுத்தி வைத்தது போல் , அதாவது கோபுரம் போல் எந்நேரமும் ஏற்றி வைத்திருக்கின்றனர். கேட்டால், அவை உண்மை மெழுகு வர்த்திகள் அல்ல , மெழுகு வர்த்தி போல் வெள்ளை நிறத்தில் செய்யப்பட்ட் உலோக ஸ்டாண்டு என்றும், அதன் நுனியில் எறிவது மின் விளக்குகள் தான் என்றும் , தெரியவந்த போது எனக்கு மிகவும் வியப்பாக இருந்தது. அந்த ஸ்டாண்டுகள் ஒரு அழகிய பூந்தொட்டிக்குள் வைத்து நிறுதப்பட்டிருந்தது!. நாங்கள் வாக்கிங் செல்லும்போதெல்லாம் , அந்தந்த வீட்டிற்கு முன் சற்று நின்று, இந்த அலங்கார விளக்குகளை ரசிக்காமல் சென்றதே இல்லை !
அதே மெழுகு வர்த்தி ஸ்டாண்டு 25 முதல் 50 Euro விற்கு கடைகளில் விற்க்கப்ப்டுவதைப் பார்த்தேன். ஒரு மாதத்திற்கு முன்னரே கிறிஸ்துமஸ் க்கு வேண்டிய அனைத்து அலங்காரப் பொருட்களையும் இங்குள்ள மக்கள் ஆர்வத்துடன் வாங்கிச் செல்கின்றனர் . கிறிஸ்துமஸ் தாத்தா வேடம் அணிந்து , கடை களில் நின்று வேடிக்கை காட்டும் கிறிஸ்துமஸ் தாத்தா விடம் பாகுபாடின்றி அனைவரும் கை குலுக்கியும் , கிறிஸ்துமஸ் தாத்தா வை அணைத்துக்கொண்டு தத்தம் கேமராக்களில் கிளிக்கிக் கொள்ளவும் தவறுவதில்லை !
கிறிஸ்துமஸ் தாத்தா பிறந்த ஊர் லாப்லாந்து ; அது பின்லாந்த் மற்றும் சுவீடன் பிராந்தியத்தில் தான் உள்ளது ; அங்கே பனி படர்ந்த சறுக்கும் மலைச் சிகரங்களும் ,பனி படர்ந்த அடர்ந்த காடுகளும் உலகின் எங்கும் காண முடியாத அதிசயங்கள் ஆகும் . பின்லாந்தில் கிறிஸ்துமஸ் ரெம்ப ஜோராக இருக்குமென்று எப்போதோ கேள்விப்பட்டேன். அது நாட்கள் வாரங்கள் , மாதங்கள், வருடங்கள் எல்லாம் கடந்து என் மகனால் நான் காணும் பாக்கியம் எனக்குக் கிட்டியது , நான் செய்த தவப் பயன் !
Finnish lapland
===================================================================
என் இனிய பின்லாந்து நினைவுகள் .....
பயணக்கட்டுரை -(பகுதி II)
Finland தோன்றிய கதை(வரலாறு ) மிகவும் சுவாரஸ்யமானது ! பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்னால்,பின்லாந்து நாடு முழுவதுமே பனிப் பாறைகளால் மூடப்பட்டிருந்தது. பின்னர் சிறிது சிறிதாக அந்தப் பனிப் பிரதேசம் வெப்பமடைந்து , அந்தப் பனிப் பாறைகள் உருக ஆரம்பித்து ,புல் பூண்டுகள் முளைக்க ஆரம்பித்து ,தெற்கிலிருந்த மிருகங்களும் , பழங்குடி இனத்தினரும் ,வடக்கு நோக்கி நகரலாயினர். பருவநிலை மாற்றத்தால் அங்கு வெப்பம் அதிகரிக்கவே மக்கள் நிலையான சின்ன சின்னக் குடில்களை கடற்கரை ஓரம் கட்டிக்கொண்டு , மிருகங்களை வேட்டையாடுவதும் ,மீன் பிடிப்பதுமான , தொழில்களை மேற்கொண்டு , வாழ்க்கை நடத்தி வந்தனர் . பின்னர் அக்கம் பக்கத்து நாடுகளிலிருந்து மக்கள் இடம் பெயர்ந்து இங்கு வந்து குடியேறவே , நாடு பெருமளவில் வளர்ச்சி அடைய ஆரம்பித்தது.
பின்னிஷ் மொழிக்குத் தந்தை எனக் கூறப்படுபவர் , "மைக்கேல் எக்ரிகோலா ". பின்னிஷ் மொழி எழுத்து வடிவம் பெற்றது 1500 வது ஆண்டில் தான் . இன் நாட்டில் அரசு அங்கீகாரம் பெற்ற இரண்டாவது மொழி ஸ்வீடிஷ் மொழி ஆகும் . சுவீடன் , பின்லண்டின் அண்டை நாடு . மிகவும் குறைவான மக்கள் "சாமி" என்ற மொழியையும் பேசுகின்றனர். ஆக, இம்மூன்று மொழி பேசும் மக்களும் இங்கு ஒற்றுமையாக வாழ்ந்து வருகின்றனர்.
பின்லாந்து பல உயர்தரமான பொருள்களுக்கு பெயர் போனது. மரத்தால் வெள்ளை வெளேரென்ற மெல்லிய தாள்கள் தயாரிக்கப் படுகின்றன. மிக அழகான சிறிய பிளாஸ்டிக் டப்பாக்கள் , விளையாட்டுச் சாமான்கள் , பிளாஸ்டிக் பாய்கள், பிரம்புக்கூடைகள் , எல்லாம் இங்கு தயாரிக்கப் படுகின்றன.
பின்லாந்தின் தேசிய இசைக் கருவியின் பெயர் "கான்ட்டேலே" ; தேசிய விளையாட்டு "பேஸ் பால் "; பின்லாந்து 69 % அடர்த்தியான காடுகளால் சூழப்பட்ட நாடு. இந்த நாட்டைச் சுற்றி கிட்டத் தட்ட 19,௦௦௦ ஆறுகளும் குளங்களும் நீர் நிலைகளும் உள்ளன . இங்கு நம்ம ஊரைப் போல் தண்ணீர் பஞ்சம் கொஞ்சம் கூட கிடையாது. இந்த நாட்டின் தேசிய விலங்கு "கரடி" .
தேசிய மலர் லில்லி ! ஆம் ! அது ஒரு வகையான வெள்ளை அல்லிப் பூ !
" Lily of the valley " என்று செல்லமாக அழைக்கப்படும் இந்தப் நறுமணம் மிக்க பூ இந்த நாட்டுக்கே அழகு சேர்க்கிறது ; It is well known for its sweet and strong smell .
அதனால் தான், ஜீன் செபிலயுஸ் என்ற பின்னிஷ் கதாசிரியர் , தம் கதைகளில் இந்த நாட்டை காதலர் நாடு (Romantic place )என்று பல முறை வருணித்து எழுதி உள்ளார். மேலும் இந்தப் பூ அன்புக்கும் தூய்மைக்கும் அடையாளமாகக் கருதப்படுகிறது. நம்ம ஊர் பூக்கள் ஒரே நாளில் வாடிவிடும் . ஆனால் பின்லாந்து பூக்களோ அந்தவூர் climate காரணமாக பல நாட்கள் வாடாமல் இருக்கும். அங்கு யாரும் அதைத் தலையில் சூடிக் கொள்வதில்லை . பூக்களை பறிக்காமல் செடியிலேயே விட்டுவைக்கிறார்கள் . அதனால் தானோ என்னவோ இந்த நாடே summer இல் பூக்காடாக பூத்துக் குலுங்கி கொள்ளை அழகாய் இருக்கிறது .
பின்னிஷ் நாட்டுச் செலாவணி ஈரோ (EURO ) என்பதாகும். ஒரு ஈரோ என்பது சுமார் ஒன்றரை அமெரிக்க டாலருக்குச் சமம். தற்போதைய புள்ளி விபரப்படி இந்த நாட்டு தலை நகர் ஹெல்சிங்கி யின் மக்கள் தொகை சுமார் 576632 மட்டுமே!. 47 % ஆண்கள் , 53 % பெண்கள் . மக்கள் தொகை வளர்ச்சி ஆண்டு ஒன்றுக்கு சுமார் 1500 க்கும் குறைவே ! உலகிலேயே மிகக் குறைந்த மக்கள் தொகை கொண்ட நாடு பின்லாந்து ! .
![]() |
Tall church of Helsinki |
மிக முக்கியமாக , நான் இங்கு பார்த்து வியந்தது என்னவென்றால் , வீட்டுக்கு வீடு கண்டிப்பாக நாய்க் குட்டிகளைச் செல்லப் பிராணியாக வளர்க்கிறார்கள்.
அதுவும் ஒரே வீட்டில் இரண்டு மூன்று நாய்க் குட்டிகள் கூட வளர்க்கிறார்கள்.
குளிர் காலத்தில் அவைகளுக்கெல்லாம் ஸ்வெட்டர் போட்டு வீதியில் கூட்டிவருகிரார்கள் . ஒரு நாய்க்குட்டி கூட , எலும்பும் தோலுமாய் , என் கண்ணில் தென்படவேயில்லை !. கடைக்குப் போனால் , அவர்கள் வீட்டுச் செல்லப் பிராணிகளுக்கு, டின்னில் அடைத்து வைக்கப்பட்டிருக்கும் , பிரத்யேக உணவுகளை மாய்ந்து மாய்ந்து வாங்கிவிட்டுத் தான், அவர்கள் வீட்டுக்குத் தேவையான மளிகைச் சாமான்களையும் , காய்கறி பழங்களையும், வாங்குகிறார்கள் என்றால் பார்த்துக் கொள்ளுங்களேன் !
ஸ்வீடன் ஒரு பழம் பெருமை வாய்ந்த நகரம் . இங்குள்ள பெண்மணிகள் சாதாரண பிரம்புக் கூடைகளையும் ,வண்ண வண்ண மரக்கூடைகளையுமே காய்கறி வாங்கவும் இதர பொருட்கள் வாங்கவும் ,பயன்படுத்துவதைப் பார்த்த போது, வியப்பாக இருந்தது . ஆனால் , நாமோ , நம் மரக்கூடைகளை எல்லாம் , எப்போதோ பரணியில் தூக்கிப் போட்டுவிட்டு , பிளாஸ்டிக் யுகத்திற்கு மாறி ஆண்டுகள் பலவாகி விட்டனவே ?! மரக்கூடை தவிர மரத்தாலான வர்ணம் பூசப்பட்ட, டிசைன் போடப்பட்ட, சின்னச் சின்ன , அழகிய தடுக்கு களையும் இங்குள்ளோர் ஆர்வத்துடன் வாங்கிப் பயன் படுத்துகின்றனர்.
=====================================================================
என் இனிய பின்லாந்து நினைவுகள் .....
பின்லாந்தில் பொதுவாக பிள்ளைகளுக்கு ஏழு வயது பூர்த்தியான வுடன் தான் பள்ளிப் படிப்பே ஆரம்பமாகின்றது . அப்போது தான் அவர்கள் முதல் வகுப்பில் சேர்த்துக் கொள்ளப் படுகின்றனர். நம்மூரில் Pre school இருப்பது போல் , அங்குள்ள பிள்ளை களும் மூன்று வயதிலிருந்து play school சென்று வருகின்றனர் .ஆனால் பெற்றோர் இருவரும் வேலைக்குப் போவதால் இது பிள்ளைகள் காப்பகம் மாதிரித் தான் . நேரா நேரத்திற்கு சாப்பாடு கொடுத்து, விளையாட விட்டுத் தூங்க வைப்பார்கள்.
பள்ளியில் பிள்ளைகளுக்கு ஆட்டம் பாட்டம் கொண்டாட்டம் தான் ! ஆங்கில , மற்றும் பின்னிஷ் மொழியில் சிறுவர் சிறுமியர்களுக்கு பாடல்களையும் விளையாட்டுடன் , சொல்லிக் கொடுக் கின்றனர். இதில் சிறப்பு அம்சம், சிரிப்பு அம்சம், என்ன வென்றால் , அந்த ஆசிரியை களும்,சேர்ந்து கொண்டு, தம் வயதைக் கூட மறந்து, குட்டி குட்டி பிள்ளைகளுடன், சறுக்கி விளையாடி, ஊஞ்சலில் ஆடி, கை தட்டி ஆடிப் பாடுவதாகும்!
இங்குள்ள பாலர்பள்ளிகள் , 75 % பின்னிஷ் மொழியைத் முதன்மையாகக் கொண்டு இயங்கு கின்றன. 25 % பள்ளிகள் தான் ஆங்கிலத்தில் கற்பிக்கப் படும் பள்ளிகள் ஆகும். பின்னிஷ் பள்ளிகளில் பிள்ளைகள் 7 வது வகுப்பில் தான் ஆங்கிலத்தை கற்க ஆரம்பிப்பதால் , அந்தக் குட்டிப் பிள்ளை களுக்கு ஆங்கிலம் தெரிய வில்லை . நான் , "உன் பெயர் என்ன ?" என்று ஆங்கிலத்தில் கேட்டதற்கு, அந்த குட்டி பிள்ளைகள் பதில் சொல்லாமல் விழிக்கின்றனர் !. சில சமயம், அவர்களின் பெற்றோர் உடன் இருந்தால், பெயரை அவர்கள் தான் கூறுவர்! ஆனால் பெயர்களோ வாயில் நுழையாது ! ஒரு பையனின் பெயர் , ஜெல்லு, இன்னொன்று, சன்க்கி , ... என்ன ஏதாவது உங்களுக்கு சொல்ல வருகிறதா? ... இதாவது பரவா இல்லை , மற்ற பெயர்கள் ... அடேயப்பா ! பல்லை உடைத்தன !
பின்லாந்தில் எங்கு நோக்கினும் அடுக்கு மாடிக் கட்டிடங்கள்தான் உள்ளன . நான்கு மாடியிலிருந்து எட்டு மாடிக் கட்டிடங்கள் வரை உள்ளன. எல்லாவற்றிற்கும் லிப்ட் உள்ளன . அதே சமயம் கீழ் தளத்தில் துணி காயப்போடுவதற்கு தனி யாக அறையும், "சவ்னா " என்கிற உடம்பைச் சூடேற்றும் அறையும் உள்ளது. இந்த சூடேற்றி வியர்வை வரவைக்கும் அறையில் சூடான கற்கள் போடப்பட்டு , அவற்றில் அவ்வப்போது தண்ணீரை ஊற்றுகின்றனர் ; தண்ணீர் சூடான கல்லில் பட்டு ஆவியாகி அந்த அறையில் அமர்ந்திருப்போர் முழுக்க முழுக்க வியர்க்கும் படி செய்கிறது . ஆடை இல்லாமல் அந்த சூடான நீராவி படும்படி அந்த அறைக்குள் நெடு நேரம் அமர்ந்து, எக்கச்சக்கமான வியர்வை வெளியேறியவுடன் வெளியே வந்து "attached " பாத் ரூமில் நன்றாகக் குளிப்பார்கள் ! பின்லாந்த் கிளைமேட்டுக்கு யாருக்கும் வியர்க்காது , எனவே, உடம்பில் உள்ள வியர்வையை வெளியே ற்றுவதர்க்கான அறைதான் இந்த "சவ்னா" ; குளிர் காலத்தில் இதனை அதிகமாகப் பயன் படுத்துவார்கள் . கீழே சவ்நாவில் அமர்ந்துள் ளோரின் படத்தைக் காணலாம்.
"தங்கம் உருக்கி தழல் குறைத்து , எங்கும் பரப்பியதோர் இங்கிதமோ " வென்று மாலை நேர செக்கச் செவேறேன்ர வானத்தைப் பற்றி பாரதிதாசன் வர்ணனை யை நான் நினைத்துப் பார்க்கிறேன் ! " தெருவெங்கும் தும்பைப் பூ நிறத்தில் ஐஸ் ஐ பாய் போல் விரித்துப் பரப்பியதோர் இங்கிதமோ? " என்று இந்த பின்லாந்தைப் பார்த்துப் பாடத் தோன்றுகிறது . ஐஸ் , ஐஸ் , ஐஸ்,எங்கும் ஐஸ், எதிலும் ஐஸ், தொட்டவிடமெல்லாம் ஐஸ், தோன்றுமிடமெல்லாம் ஐஸ், ஐஸ் ; தினந்தோறும் இந்தப் பனியிலும் வாக்கிங் சென்று வந்த போது, ஒருநாள், நானும் என் கணவரும் , பாதையைத் தவறவிட்டு தத்தளித்துக்கொண்டிருந்தோம் . பின்னர் ஐஸ்ல் எங்கள் காலடிச் சுவடுகள் பதிந்திருந்ததைத் தேடி தேடிக் கண்டுபிடித்து ஒரு வழியாக பத்திரமாக வீடு வந்து சேர்ந்தோம் . வெறும் காடு தானே ? எப்படி பாதையை ஞாபகம் வைத்துக்கொள்ள முடியும்? ; நாங்கள் ஒற்றையடிப் பாதையில் வாக்கிங் சென்ற போது , ஓரிடத்தில் தனித் தனியாக மூன்று பாதை களாகப் பிரிந்து சென்றது ! ஆதலால் தான் சற்றே தடுமாற்றம் !
நாய்க்குட்டியுடன் , விளையாட்டு மைதானத்தில் பந்தைத் தூக்கிப்போட்டு அவர்கள் விளையாடுவது, ரசிக்கத் தக்க காட்சி. ஒரு சிலர் விதி விலக்காக பூனைகளையும் இதர மிருகங்களையும் கூட செல்லப் பிராணிகளாக வளர்க்கின்றனர்.
ஒரு நாள் ஹெல்சிங்கியில் உள்ள மிகப் பெரிய mall ஒன்றுக்குச் சென்றோம் ;
அங்கு தனித் தனிக் compartment கடைகளில், உலகத்தில் நாம் அன்றாடம் பயன்படுத்தும் அனைத்துப் பொருட்களையும் வாங்கி வந்து விடலாம். நம்மூரில் வேடிக்கையாகச் சொல்வோமே !..." அப்பா அம்மா தவிர .... "என்று - அது போலக் கையில் காசு மட்டும் இருந்தால் - அத்தனை பொருட்களும் நம் உள்ளங்கையிலே ! அந்த mall ல் நான் பார்த்த விந்தை என்ன வென்றால் , ஒரு கடையில் தனிக் கண்ணாடிக் கேசில் மிகப் பெரிய ஓணான் ஊர்ந்து கொண்டிருந்தது . அதே போன்று தனித் தனியாக தேள் நண்டு மிகப் பெரிய பல்லி, இன்னும் பெயர் தெரியாத ஒரு சில சின்ன சின்ன மிருகங்கள் , அனைத்தும் ஊர்ந்து கொண்டிருந்தன. நாங்கள் ஆச்சர்யத்துடன் கேள்விக்குறியுடன், அவற்றையெல்லாம் வேடிக்கை பார்த்த போது, கடைக்காரர் வந்து , "These are all pet animals . Do you want to bring home any of these ?" என்று கேட்டாரே பார்க்கலாம் ! எங்களுக்குத் தூக்கி வாரிப்ப் போட்டது ! மெளனமாக "வேண்டாம் " என்று தலையை மட்டும் அசைத்துவிட்டு நாங்கள் அடுத்த கடைக்கு நடையைக் கட்டினோம் .
நாய்க்குட்டி, பூனைக்குட்டி, கோழிக்குஞ்சு , சேவல், ஆடு, மாடு, கிளி, புறா, வளர்ப்பது தெரியும். ஆனால் நான் மேலே சொன்னது போன்ற மிருகங்களையும் கூடச் செல்லப் பிராணிகளாக வளர்ப்பதற்கு , ஆயிரத்தில் ஒருவர் எங்கோ இருக்கின்றார் என்பது , அங்கு சென்று தான் நான் அறிந்து கொண்ட உண்மை ! உயிர்களிடத்து அன்பு வேணும் , என்று பாரதியார் பாடியது இந்த அனைத்து வாயில்லா ஜீவன்களையும் சேர்த்துத் தானோ? .
எல்லாம் சரிதான் , ஆனால் நாங்கள் பின்லாந்திலிருந்து ஒரு நாள் பயணமாக கப்பலில் சுவீடன் சென்று அங்குள்ள museum , மற்றும் அரண்மனை எல்லாம் சுற்றிப்பார்த்துவிட்டு வந்தபோது , ஒருவர் மிக லாவகமாக கன்னங்கரேரென பெரிய கரடியை கயிற்றினால் கட்டிக் கூட்டிக்கொண்டு சென்றார் .நாங்கள் பயந்தபோது " Feel free , he is not dangerous " எங்களுக்கு அபயமும் அளித்தார் !
இனி எங்கள் ஸ்வீடன் அனுபவத்தை வரும் பகுதியில் பார்ப்போம் .
==============================================================

பயணக்கட்டுரை - பகுதி -3
கப்பல் பயணம் எனக்கு மிகவும் பிடித்தமான ஒன்று . முதன் முதலில் நான் சிறுமியாக இருந்தபோது 1957 ஆம் ஆண்டு "ரஜீலா" என்ற கப்பலில் சிங்கபூருக்கு பயணமானதும் , பின்னர் 1966 ஆம் ஆண்டு மீண்டும் "ஸ்டேட் ஆப்
மெட்ராஸ் " என்ற கப்பலில் தாயகம் திரும்பி வந்ததும் ,சுவாரஸ்யமான நிகழ்வுகள். அப்போதெல்லாம் ஏழெட்டு நாட்கள் கப்பலில் பயணம் செய்ய வேண்டிவரும் .நடுக் கடலில் வரும்போது கப்பல் ஆட்டம் காணும் .அப்போது முக்கால் வாசி பேருக்கு தலை சுற்றல் வாந்தி வருவதுண்டு. அதற்காக ஊறுகாய் உடன் எடுத்துச் செல்வோரும் உண்டு .நாம் கப்பலில் ஏறி இரண்டு,மூன்று நாட்கள் கழித்துக் கடலைப் பார்க்கும்போது சற்று அச்சமாகக் கூட உணர்வதுண்டு.
அப்போதெல்லாம் விமானக் கட்டணம் மிக அதிகம் என்பதால், பெரும்பாலோர் சிங்கபூரிலிருந்து கப்பலில் தான் தாயகம் வருவார்கள் . ஆக, 1966 ஆம் ஆண்டிற்குப் பின்னர் 40 ஆண்டுகள் கழித்து மீண்டும் கப்பலில் உல்லாசப் பயணம் சென்று ஸ்வீடன் நாட்டைச் சுற்றிப் பார்த்து விட்டு வந்தது எனக்கு அலாதி மன நிறைவைத் தந்தது .
எல்லோரும் கப்பலில் அமர்ந்து அரட்டையடித்துக் கொண்டிருக்க , நான் மட்டும் அமைதியாக ஈஸி சேரில் அமர்ந்து இமை கொட்டாது கடலையே பார்த்துக்கொண்டு , எனக்குத் தெரிந்த ஸ்தோத்திரம் , ஸ்லோகங்களை மனதிற்குள் சொல்லிக் கொண்டு ,அந்தக் கடல் காற்றையும் , அந்தக் கடல் அலைகளின் ஆர்ப்பரிப்பையும் , "ஹோ" வென்ற அந்த இரைச்சலையும் , அந்தப் பொங்கிவரும் கடல் நுரைகளையும், அணு அணுவாக ரசித்துக் கொண்டிருந்தேன். அந்தக் கப்பலில் வெள்ளைக் காரர்கள் ஆண்களும் பெண்களுமாக சேர்ந்து ஒரு ஹாலில் உள்ள அரங்கத்தில் இசைக்கேற்ப நடனமாடி மகிழ்ந்து கொண்டிருந்தனர். எதிரில் மது விற்பனை ஆகிக் கொண்டிருந்தது சிலர் மதுவும், சிலர் குளிர் பானமும், அருந்தியபடியே அந்த நடனங்களை ரசித்துக் கொண்டிருன்தனர் . எனக்கோ , அப்போது " அதோ அந்தப் பறவை போல வாழ வேண்டும் !, இதோ இந்த அலைகள் போல ஆட வேண்டும் !" என்ற பழைய தமிழ் பாடல் வரிகள் நினைவுக்கு வந்தன !
சாப்பாடு Buffet தான் ! அந்தக் கப்பலில் ஓரிடத்தில் சிறிய நீச்சல் குளம் இருந்தது .அப்போது குளிர் காலமானதால் , நீச்சல் குளத்தில் வெது வெதுப்பான நீரில் குழந்தைகள் நீச்சல் அடித்து விளையாடிக் கொண்டிருந்தனர் .அதற்கு தனியாக கட்டணம் வசூலித்தனர். அவர்கள் நீச்சல் அடிக்கும் போது மணி என்னவாக இருக்கும் என்று எண்ணுகிறீர்கள் ? இரவு மணி ஓன்று !. ஆனால் பகல் போல ஜெக ஜோதியாக எங்கு பார்த்தாலும் விளக்குகள் எரிகின்றனவே ?! பின் என்ன குளியலுக்கும் கொண்டாட்டத் திற்கும் கேட்கவா வேண்டும் ? கப்பலுக்குள் உணவு விடுதி , மட்டுமல்லாது , அழகுப் பொருட்கள் , கலைப் பொருட்கள் , சென்ட் , மற்றும் குளிர் பான வகைகள் , மது பானம், நொறுக்குத் தீனி , chips chocolates , ice cream , biscuits ,அனைத்துமே தாராளமாகக் கிடைக்கின்றன .விலை வெளியில் விற்பதை விட கப்பலில் சுமார் 20 மடங்கு அதிகம்! ஒரு நாள் சுவீடனைச் சுற்றிப்பார்த்து விட்டு (முக்கிய மாக ஸ்வீடன் அரண்மனை) மறு நாள் அதே கப்பலில் பின்லாந்து திரும்பி வந்தோம் . ஸ்வீடன் அரண்மனையில் உள்ள அருங்காட்சி அகத்தில் அங்கு பல நூறு ஆண்டுகளுக்கு முன்னர், அந்த நாட்டு மன்னர்கள் மகாராணிகள் ,பயன் படுத்திய ஆடை , அணிகலன்கள் ,குதிரை வண்டிகள் , (8 சக்கரங்கள் கூடியது ), போர் சமயத்தில் பயன் படுத்திய உடுப்புகள் , கத்தி கேடயம், வாள்கள், ஓவியங்கள், அனைத்தும் மிக பத்திரமாகப் பாதுகாத்து , பார்வைக்காக வைக்கப் பட்டுள்ளன .
sweeden palace - சுவீடன் அரண்மனை
![]() |
ஸ்வீடன் ஒரு பழம் பெருமை வாய்ந்த நகரம் . இங்குள்ள பெண்மணிகள் சாதாரண பிரம்புக் கூடைகளையும் ,வண்ண வண்ண மரக்கூடைகளையுமே காய்கறி வாங்கவும் இதர பொருட்கள் வாங்கவும் ,பயன்படுத்துவதைப் பார்த்த போது, வியப்பாக இருந்தது . ஆனால் , நாமோ , நம் மரக்கூடைகளை எல்லாம் , எப்போதோ பரணியில் தூக்கிப் போட்டுவிட்டு , பிளாஸ்டிக் யுகத்திற்கு மாறி ஆண்டுகள் பலவாகி விட்டனவே ?! மரக்கூடை தவிர மரத்தாலான வர்ணம் பூசப்பட்ட, டிசைன் போடப்பட்ட, சின்னச் சின்ன , அழகிய தடுக்கு களையும் இங்குள்ளோர் ஆர்வத்துடன் வாங்கிப் பயன் படுத்துகின்றனர்.
=====================================================================
என் இனிய பின்லாந்து நினைவுகள் .....
பயணக்கட்டுரை பகுதி 4
பின்லாந்தில் பொதுவாக பிள்ளைகளுக்கு ஏழு வயது பூர்த்தியான வுடன் தான் பள்ளிப் படிப்பே ஆரம்பமாகின்றது . அப்போது தான் அவர்கள் முதல் வகுப்பில் சேர்த்துக் கொள்ளப் படுகின்றனர். நம்மூரில் Pre school இருப்பது போல் , அங்குள்ள பிள்ளை களும் மூன்று வயதிலிருந்து play school சென்று வருகின்றனர் .ஆனால் பெற்றோர் இருவரும் வேலைக்குப் போவதால் இது பிள்ளைகள் காப்பகம் மாதிரித் தான் . நேரா நேரத்திற்கு சாப்பாடு கொடுத்து, விளையாட விட்டுத் தூங்க வைப்பார்கள்.
பள்ளியில் பிள்ளைகளுக்கு ஆட்டம் பாட்டம் கொண்டாட்டம் தான் ! ஆங்கில , மற்றும் பின்னிஷ் மொழியில் சிறுவர் சிறுமியர்களுக்கு பாடல்களையும் விளையாட்டுடன் , சொல்லிக் கொடுக் கின்றனர். இதில் சிறப்பு அம்சம், சிரிப்பு அம்சம், என்ன வென்றால் , அந்த ஆசிரியை களும்,சேர்ந்து கொண்டு, தம் வயதைக் கூட மறந்து, குட்டி குட்டி பிள்ளைகளுடன், சறுக்கி விளையாடி, ஊஞ்சலில் ஆடி, கை தட்டி ஆடிப் பாடுவதாகும்!
இங்குள்ள பாலர்பள்ளிகள் , 75 % பின்னிஷ் மொழியைத் முதன்மையாகக் கொண்டு இயங்கு கின்றன. 25 % பள்ளிகள் தான் ஆங்கிலத்தில் கற்பிக்கப் படும் பள்ளிகள் ஆகும். பின்னிஷ் பள்ளிகளில் பிள்ளைகள் 7 வது வகுப்பில் தான் ஆங்கிலத்தை கற்க ஆரம்பிப்பதால் , அந்தக் குட்டிப் பிள்ளை களுக்கு ஆங்கிலம் தெரிய வில்லை . நான் , "உன் பெயர் என்ன ?" என்று ஆங்கிலத்தில் கேட்டதற்கு, அந்த குட்டி பிள்ளைகள் பதில் சொல்லாமல் விழிக்கின்றனர் !. சில சமயம், அவர்களின் பெற்றோர் உடன் இருந்தால், பெயரை அவர்கள் தான் கூறுவர்! ஆனால் பெயர்களோ வாயில் நுழையாது ! ஒரு பையனின் பெயர் , ஜெல்லு, இன்னொன்று, சன்க்கி , ... என்ன ஏதாவது உங்களுக்கு சொல்ல வருகிறதா? ... இதாவது பரவா இல்லை , மற்ற பெயர்கள் ... அடேயப்பா ! பல்லை உடைத்தன !
பின்லாந்தில் எங்கு நோக்கினும் அடுக்கு மாடிக் கட்டிடங்கள்தான் உள்ளன . நான்கு மாடியிலிருந்து எட்டு மாடிக் கட்டிடங்கள் வரை உள்ளன. எல்லாவற்றிற்கும் லிப்ட் உள்ளன . அதே சமயம் கீழ் தளத்தில் துணி காயப்போடுவதற்கு தனி யாக அறையும், "சவ்னா " என்கிற உடம்பைச் சூடேற்றும் அறையும் உள்ளது. இந்த சூடேற்றி வியர்வை வரவைக்கும் அறையில் சூடான கற்கள் போடப்பட்டு , அவற்றில் அவ்வப்போது தண்ணீரை ஊற்றுகின்றனர் ; தண்ணீர் சூடான கல்லில் பட்டு ஆவியாகி அந்த அறையில் அமர்ந்திருப்போர் முழுக்க முழுக்க வியர்க்கும் படி செய்கிறது . ஆடை இல்லாமல் அந்த சூடான நீராவி படும்படி அந்த அறைக்குள் நெடு நேரம் அமர்ந்து, எக்கச்சக்கமான வியர்வை வெளியேறியவுடன் வெளியே வந்து "attached " பாத் ரூமில் நன்றாகக் குளிப்பார்கள் ! பின்லாந்த் கிளைமேட்டுக்கு யாருக்கும் வியர்க்காது , எனவே, உடம்பில் உள்ள வியர்வையை வெளியே ற்றுவதர்க்கான அறைதான் இந்த "சவ்னா" ; குளிர் காலத்தில் இதனை அதிகமாகப் பயன் படுத்துவார்கள் . கீழே சவ்நாவில் அமர்ந்துள் ளோரின் படத்தைக் காணலாம்.
(முற்றிலும் மரத்தால் கட்டப்பெற்ற சவ்னா என்கிற நீராவி அறை )
புதிதாகக் கட்டப்படும் வீடுகள் அப்பார்ட் மென்ட்கள் எல்லாவற்றிலும் சவ்னா கட்டாயமாக உள்ளது . அடுக்கு மாடி கட்டிடங்கள் தவிர , சில சிறிய, பெரிய, அழகிய, தனி வீடுகளும் இங்கே உள்ளன. இந்த வீடுகளில் கார் நிறுத்தவும் இட வசதி உள்ளது. இங்கேயும் அமேரிக்கா போல வீடுகளில் பல்லி, ஈ ,எறும்பு , கரப்பான் பூச்சி ,கொசு, தொல்லை ஏதும் இல்லை ! எல்லா வீடுகளிலும் சமையலுக்கு எலெக்ட்ரிக் ஸ்டவ் தான் . Gas அடுப்புக் கிடையாது. குளிர்ந்த நீருக்கும் , சுடு தண்ணீருக்கும் , தனித் தனி பைப்கள் உள்ளன . 24 மணி நேரமும் சுடு தண்ணீர் வருகிறது . இந்நாட்டில் காற்று மட்டும்தான் pollution free என்று எண்ண வேண்டாம் ! தண்ணீரும் மிக மிகச் சுத்தமாக உள்ளது. அந்த மாதிரித் தண்ணீர் உலகில் வேறங்கும் கிடைக்காது. ஒரு வீடு பாக்கி இல்லாமல் எல்லா வீடுகளிலும் கண்ணாடி ஜன்னல்கள் தான் உள்ளன. அந்தக் கண்ணாடி ஜன்னல்கள் அருகே அமர்ந்து கீழே கொட்டிக்கிடக்கும் ஐஸ்-ஐ பார்த்துக் கொண்டே தான் நான் தினசரி உணவருந்துவது வழக்கம் . இங்கு மாவு ஆட்டிக் கரைத்து வைத்தால் புளிப்பதர்க்கு மூன்று நாட்கள் ஆகும்.
"தங்கம் உருக்கி தழல் குறைத்து , எங்கும் பரப்பியதோர் இங்கிதமோ " வென்று மாலை நேர செக்கச் செவேறேன்ர வானத்தைப் பற்றி பாரதிதாசன் வர்ணனை யை நான் நினைத்துப் பார்க்கிறேன் ! " தெருவெங்கும் தும்பைப் பூ நிறத்தில் ஐஸ் ஐ பாய் போல் விரித்துப் பரப்பியதோர் இங்கிதமோ? " என்று இந்த பின்லாந்தைப் பார்த்துப் பாடத் தோன்றுகிறது . ஐஸ் , ஐஸ் , ஐஸ்,எங்கும் ஐஸ், எதிலும் ஐஸ், தொட்டவிடமெல்லாம் ஐஸ், தோன்றுமிடமெல்லாம் ஐஸ், ஐஸ் ; தினந்தோறும் இந்தப் பனியிலும் வாக்கிங் சென்று வந்த போது, ஒருநாள், நானும் என் கணவரும் , பாதையைத் தவறவிட்டு தத்தளித்துக்கொண்டிருந்தோம் . பின்னர் ஐஸ்ல் எங்கள் காலடிச் சுவடுகள் பதிந்திருந்ததைத் தேடி தேடிக் கண்டுபிடித்து ஒரு வழியாக பத்திரமாக வீடு வந்து சேர்ந்தோம் . வெறும் காடு தானே ? எப்படி பாதையை ஞாபகம் வைத்துக்கொள்ள முடியும்? ; நாங்கள் ஒற்றையடிப் பாதையில் வாக்கிங் சென்ற போது , ஓரிடத்தில் தனித் தனியாக மூன்று பாதை களாகப் பிரிந்து சென்றது ! ஆதலால் தான் சற்றே தடுமாற்றம் !
அப்போது, என் நினைவுக்கு வந்தது என்ன தெரியுமா? - சில ஆண்டுகளுக்கு முன் USA யில் Petrified Forest என்ற அடர்ந்த காடுகள் அடங்கிய , மிகப் பழமை வாய்ந்த கல்லாகிப்போன மரங்கள் அடர்ந்த பகுதியில் , நானும் என் துணைவர், மூத்த மகன் திருநாவு ,பேரன் வினீத் , ஆகிய நால்வர் மட்டும் தனியாக நடந்து வந்து கொண்டிருந்தோம் . கூடத் துணைக்கு வேறு யாருமே இல்லை ! அப்போது என் பேரன் கேட்டான் ," If we get lost in this deep forest, who will help us to find our way? Will these trees help us? ..will these mountains help us?.." ஆள் நடமாட்டம் இல்லாத காடுகளில் பின்லாந்தில் நடுக்கும் போதெல்லாம் என் பேரன் கேட்ட இந்தக் கேள்வி நிச்சயம் எனக்கு ஞாபகம் வரும்.
அமெரிக்காவில் உள்ளவர்கள் எல்லோருமே மிகவும் தோழமையுடன் பழகினார்கள் . " Have a nice day " , "Hai " என்றெல்லாம் கை அசைத்துக் கூறி, மிகவும் தெரிந்தவர்கள் போல் வாஞ்சையுடன் பழகினார்கள். ஆனால் பின்லாந்தில், "இந்த நாட்டு மக்கள் மட்டும் ஏன் இப்படி பாரா முகமாக இருக்கிறார்கள்?" என்று நினைத்தது தான் தாமதம் ,சொல்லிவைத்தார்ப் போல் ஒரு பின்னிஷ் காரர் என் எதிரில் தற்செயலாக வந்தவர் , என்னைப் பார்த்து, " This Snow is good for walking , have a nice day !" என்று மலர்ந்த முகத்துடன் கூறிக் கை அசைத்து சென்றது எனக்கு மிகவும் மகிழ்வாக இருந்தது .
2005 நவம்பர் மாதம் , 25 ஆம் தேதி நான் மறக்க இயலாத தினம் ! அன்று தான் பின்லாந்தில் Ice மழையைப் பார்த்து நான் வியந்தது ! முதல் நாள் குளுகுளு வென்றும், மழை பெயகிறார்ப் போலவும் climate இருந்தது. ஆனால் Nov 25 அன்று ஐஸ் மழை காலையிலிருந்தே பெய்யத் துவங்கியது . அதி காலை எழுந்ததிலிருந்தே ஜன்னல் அருகே அமர்ந்து அந்தக் கண் கொள்ளாக் காட்சியை ரசிக்கத் துவங்கிவேன். சின்னச் சின்ன வெள்ளை இறகுகள் போன்று மேலே வானிலிருந்து பனித் துகள்கள் , கீழ் நோக்கி பூமியில் மெது மெதுவாக அசைந்து அசைந்து விழ ஆரம்பித்தன ! புல்வெளி , பைன் மரங்கள் அதன் இலைகள் , அனைத்துமே பனிக் கட்டிகளால் மூடப்பட்டு , அந்தத் தெருவெல்லாம் ஐசால் மூடப்பட்டு , பார்ப்பதற்கு மிக ரம்யமாக இருந்தது. தியானிப்பது போன்று, அந்தச் சூழல் மனதுக்கு நிம்மதி யளித்தது . தேவர்கள் விண்ணிலிருந்து எனக்காக வெள்ளைப் பூமாரி பொழிந்தனரோ என்பது போன்ற உணர்வு எனக்குள் தோன்றியது ! "வெள்ளிப் பனி மலை மீதுலாவு வோம் !" என்ற பாரதி யின் வரிகள் நினைவில் ஓடிய அந்த நிமிடத்தில் " இப்போது இந்தப் பின்லாந்த் பனியைப் பாரதி பார்த்தல் எப்படி அற்புதமாகப் பாடியிருப்பார் என்றும் நினைக்கத் தோன்றியது .
பின்னிஷ் பத்திரிக்கைகள் சில , விளம்பரத்திற்காக இலவசமாகவே நம் வீடு தேடி வருகின்றன . உணவுப் பொருட்களிலிருந்து ,எல்லாப் பொருட்களும் அதன் படத்துடன் விலையும் ,எந்தக் கடையில் விற்பனை ஆகின்றன என்பன பற்றியெல்லாம் அந்தப் பத்திரிக்கைகள் விபரமாகத் தெரிவிக்கின்றன.
தொலைக்கட்சிகள் அனைத்தும் பின்னிஷ் மொழியில் தான் , எனினும் BBC
செய்திகள் ஆங்கிலத்தில் பார்க்க முடிந்தது . அங்கு டிசம்பர் ஆறாம் நாள் சுதந்திர தினம் . அன்று அலுவலகங்கள் பள்ளிகள் எல்லாமே விடுமுறை. .கடைகளும் மூடி இருந்தன . சுதந்திர தினத்திற்கு அடையாளமாக அந்நாட்டு தேசியக்கொடி (வெள்ளை நிறத்தில் ஊதா கிராஸ் ) பெரும்பாலான கட்டிடங்களிலும் வீடுகளிலும் கூட சுதந்திர தினத்தை வரவேற்பதற்காக பறக்க விட்டிருக்கின்றனர் . "தர்ஜாகாரினா ஹலோனின்" என்ற பெண் குடியரசுத் தலைவருடன்(பின்லாந்தின் 11 ஆவது president ) பலரும் அன்று அரசாங்க மாளிகையில் கை குலுக்கி தங்கள் மகிழ்ச்சியைத் தெரிவித்த பின்னர் ( இரவு மணி 7 லிருந்து 9 மணி வரை ) அனைவருக்கும் விருந்தும் கொடுக்கப்படுகின்றது . இவை அனைத்தும் அந்நாட்டு தொலைக்கட்சியில் நேரடியாக ஒளி பரப்பப் படுகின்றது.பார்த்து ரசித்தோம் ..
இங்குள்ளோர் சமையலுக்கு மிகவும் விரும்பிப் பயன்படுத்துவது மங்கு மற்றும் கண்ணாடிச் சாமான்களைத தான் . பல கடைகளில் கப் அண்ட் சாசர் , தட்டுகள் , ஓவனில் வைக்கக்கூடிய சிறிய பெரிய , மங்கு கண்ணாடிச் சாமான்கள் எக்கச்சக்கமாய் மிக நேர்த்தியாக அடுக்கி வைக்கப்பட்டிருக்கின்றன . நிச்சயமாக , நம்மூரை விடப் பத்து மடங்கு , இருபது மடங்கு விலை அதிகம் தான் . ஆசைக்காக ஒரு சில மங்கு கண்ணாடிச் சாமான்களை வாங்கினாலும் , அவற்றைப் பழுது படாமல் துணியைச் சுற்றி நம்மூர் கொண்டுவரவேண்டும் .. சில மங்கு சாமான்களில்
(பெரிய Bowl ) உருளைக்கிழங்கு , சீனி, பாப்கார்ன் , வெங்காயம், என்று ஆங்கிலத்தில் எழுதப்பட்டுள்ளது . அந்த எழுத்துக்கள் அழிக்க இயலாது ..அந்தந்தப் பொருட்கள் அதில்போட்டுவைக்கலாம் . இங்குள்ளோர் பிரத்யோகமான அடி கனமான கண்ணாடிப் பாத்திரங்களை அடுப்பில் கூட வைத்து சமையல் செய்யப் பயன் படுத்துகின்றனர் .
கடைகளில் , அன்னப்பட்சி , குதிரை , பறவை, மீன் , கரடி, மான் , மயில், மற்றும் பல்வேறு பூக்கள் வடிவத்தில் மிகச் சிறிய கண்ணாடிச் சாமான்களும் உள்ளன. ஒரு சில கடைகளில் தரமான எவர் சில்வர் பாத்திரங்களும் விற்பனைக்கு இருந்தன .. நம் திருச்சி 'ரத்னாவில்' மங்கள் & மங்கள் இல் கிடைக்காத சாமான்களா என்று நினைத்தேன் . ஏதாவது ஒரு பாத்திரதிலாவது " Made in india " என்று எழுதப்பட்டிருக்கிறதா என்று தேடித் தேடிப் பார்த்தேன் , No, எனக்குக் கிடைத்தது ஏமாற்றமே ! " Made in பின்லாந்த், பிரான்ஸ் ஜெர்மனி , சைனா , என்று தான் இருந்தது . ஆனால் USA வில் முக்கால் வாசிப் பொருட்களில் Made in India, Bangla Desh, Pakistan" என்று தான் எழுதப்பட்டிருந்தன .
ஒரு கார் ஷோ ரூமிர்க்குச் சென்ற போது விலை இந்திய ரூபாயின் மதிப்புப்படி சுமார் 75 லட்ச ரூபாய்க்கு விற்பனைக்கு ஒரு கார் வைக்கப்பட்டிருந்தது . சும்மா வழு வழு , வென்று, மினு மினு வென்று கண்ணைப் பறித்தது அந்தக் கார். "Espoo " என்ற ஊரில் கடைக்குச் சென்ற போது , ஒரு மாலில் சின்னக் கடை ஒன்று " பாம்பே எக்ஸ்பிரஸ்" என்ற பெயரில் இருந்தது. அதில் இருந்த இரண்டு வடஇந்தியப் பெண்கள் எங்களைப் பார்த்த வுடனேயே "ஹலோ" என்று முக மலர்ச்சியுடன் வரவேற்றனர். அந்தக் கடையில் நம் இந்திய இனிப்பு, கார வகைகள், அனைத்துமே விற்கப்படுகின்றன.அதுவும் அந்த முந்திரிப்பருப்பு பர்பி , இன்னும் நாவில் இனிக்கிறது.. அதே போல் பின்லாந்த் தலைநகரத்தில் "மகாராஜா" என்ற நம் திருசசிக் காரர் நடத்தும் மளிகைக் கடையில் நம் தென் இந்தியப் பருப்பு வகைகள், சாம்பார் பொடி,மசாலா சாமான்கள் அனைத்துமே கிடைக்கின்றன . அவர் வணக்கம் என்று கூறி எங்களை இன்முகத்துடன் வரவேற்றுப் பேசினார்
.

====================================================================
என் இனிய பின்லாந்து நினைவுகள் ...
பயணக்கட்டுரை -பகுதி 5
நம் வீட்டினரைத் தவிர தமிழ் பேசுபவர்கள் வேறு யாரையும் பார்க்க முடியவில்லையே என்று நினைத்துக்கொண்டிருக்கும்போதே ஓர் ஆச்சரியம் ! ஆம் !ஹெல்சிங்கியில், மிகப் பெரிய எலெக்ட்ரானிக் சாதனங்கள் விற்கும் ஓர் கடைக்குப் போனபோது , ஓர் இளைஞர் எங்களைப் பார்த்து புன்னகை பூத்தபோது, " நீங்கள் தமிழா? " என்று என்னால் கேட்காமல் இருக்க முடியவில்லை . ஆம் , Hydrabad லிருந்து ப்ராஜெக்ட் செய்வதற்காக மூன்று மாதங்களுக்கு இங்கு வந்துள்ளேன் . நான் நகரத்தார் , கண்ட வராயன் பட்டி ;என் பெயர் மணிகண்டன் . இனிமேல் தான் திருமணம் ." என்று தன்னைப் பற்றிய விவரங்களை அவர் கூறியபோது உண்மையிலேயே மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது. அந்த இளைஞருடன் மேலும் ஐந்தாறு தென்னிந்திய இளைஞர்களும் இருந்தார்கள். அவர்கள் ஆந்திரா கர்நாடகா பகுதியைச் சேர்ந்தவர்கள். இந்த மாதிரி பல தென்னிந்திய இளைஞர்களைச்
சந்தித்து பேசும் வாய்ப்பு ஒரு சில கடைகளில் எங்களுக்குக் கிட்டியது . ஆக, நம் இந்திய இளைஞர்கள் இங்கு பல பெரிய நிறுவனங்களில் திறம்படப் பணியாற்றுவது நிச்சயம் பெருமைக்குரிய விஷயம் தான் !
இங்கே எனக்கு கிடைத்த மிகப் பெரிய ஆச்சர்யம் என்னவென்றால் , ஒரு பின்லாந்துக்காரர் , நாங்கள் தமிழர்கள் என்று தெரிந்து கொண்டு ,முழுக்க முழுக்க மிகப் பிரியமாக , வாஞ்சையுடன் , எங்களோடு, கொஞ்சு தமிழில் உரையாடியதுதான் . " நா அஞ்சு முறை இந்தியா வந்திர்க்கேன் , திரும்பியும் வர போறேன் ; எனக்கு இந்தியா ரெம்ப பிடிக்கும், நா இங்கே காலேஜில் லெக்சரரா இருக்கேன் .காஞ்சிபுரம் சென்னைக்கு நான் வர்வேன் " என்று அவர் கூறியபோது வியப்பாக இருந்தது. இதில் ஒரு வேடிக்கை என்னவெனில் , நாங்கள் அவரிடம் ஆங்கிலத்தில் கேள்வி கேட்டபோதும் , அவர் சளைக்காது தமிழிலேயே பதில் கூறியது தான். அவர் பேரைக் கேட்டபோது, என் உண்மைப் பெயர் "யூறேன்" ஆனால் நான் மாற்றி வைத்துக்கொண்ட பெயர் "தனசேகரன் " என்றாறே பார்க்கலாம் ....! Hats off to Finland தனசேகரன் ! அவருடன் சேர்ந்து நானும் , என் துணைவரும், என் புதல்வனும், மறக்காமல் புகைப்படம் எடுத்துக்கொண்டோம்.
"பங்களா தேஷ்" காரர்கள் பலர் இங்கே, உணவகங்கள் நடத்திவருகின்றனர். அவர்களில் ஒரு சிலர் நம் இந்திய உணவு வகைகளையும் , வேறு சிலர், மேற்கத்திய உணவு வகைகளையும், "பிசா" போன்றவைகளையும் தயாரித்துக் கொடுத்து , அங்கு உடன் பணியாற்ற , சில பின்னிஷ் இளைஞர்களையும் , யுவதி களையும் , நியமித்து , நல்ல வருமானம் ஈட்டி வருகின்றனர். எங்களைப் பார்த்த போது "நமஸ்தே " என்று கை கூப்பி வரவேற்று அன்புடன் உபசரித்தனர் .
பின்லாந்தில் , "ஹரே கிருஷ்ணா " இயக்கத்தினர் நடத்தும் , பிரபலமான "இஸ்கான்" கோவில் உள்ளது. இங்குள்ளவர்கள், கோவிலை முன்னின்று நடத்துபவர்கள், நித்ய பூஜை செய்பவர்கள், அனைவரும் பின்னிஷ் காரர்களே என்பது குறிப்பிடத்தக்கது. ஆகும். அவர்கள் துணைவியாரும் ஆக்கபூர்வமாக ஈடுபட்டு இந்த இயக்கத்தில் செயலாற்று கின்றனர். பெண்கள் சேலை குங்குமத்துடன் மங்களகரமாகக் காணப்படுகின்றனர் .ஆண்கள் நாமத்துடனும், வேஷ்டி துண்டுடனும், குடுமியுடனும் காணப் படுகின்றனர். .
அவர்களில் பலர் சமஸ்க்ருதம் கற்று மிக அருமையாக, சுலோகங்களும் ,
ஸ்தோத்திரங்களும் சொல்லி வழிபாடு நடத்துகின்றனர். காலையிலும் மாலையிலும் , ஒரு குறிப்பிட்ட நேரத்தில் , நாம் சென்று, கிருஷ்ணரைத் தரிசிக்கலாம் . நாம் கோவிலின் உள்ளே சென்றதும் , "ஓம் ஷாந்தி! ஓம் ஷாந்தி !" என்று ஒலிநாடா வழியாக சில அமைதியான சுலோகங்களும் , சந்தனத்தின் மனமும் , நம்மை தெய்வீக உலகுக்கு அழைத்துச் செல்லுகின்றன . பூஜை முடிந்த பின்னர் , சர்க்கரை பொங்கல் பிரசாதமாகத் தருகிறார்கள் .நம் தெய்வத்தை மிகவும் பய பக்தியுடன் அவர்கள் வழிபடுவது பார்க்க வியப்பாக இருந்தது .இதில் முக்கிய அம்சம் என்னவென்றால் இந்த "ஹரே ராமா , ஹரே கிருஷ்ணா " இயக்கம் உலகெங்கிலும் வியாப்பித்து உள்ளதுதான் . !
இங்கு உள்ளவர்கள் யாரும் தங்க நகைகள் அணியவில்லை. மிஞ்சி மிஞ்சிப் போனாலும் ஆண்களுக்கும் சரி , பெண்களுக்கும் சரி, ஒரு கைக் கடிகாரமே அதிக பட்ச ஆபரணம் ! அவர்களுக்கு தேவையானது எல்லாம் குளிர்கால ஆடைகள் . அதற்கு எவ்வளவு வேண்டுமானாலும் செலவு செய்யத் தயாராக உள்ளார்கள் .குளிர் காலத்திற்குத் தேவைப்படும் , ஷூஸ் . சாக்ஸ் , கேப் ,.மப்ளர் , கிளவுஸ் , ஸ்வெட்டர் , ஜெர்க்கின் , எனப்படும், ஆடைகளைப் பார்த்துப் பார்த்து , தேர்வு செய்து வாங்குகின்றனர். ஷூ க்களில் கூட இத்தனை வகை உண்டு என்பது இதுவரை எனக்குத் தெரியாது. !
சாதாரண கனமான துணி ஷூ , ரப்பர் , பிளாஸ்டிக் , லெதர்,ஷூ என்று எத்தனை எத்தனை வகைகள் ! என்ன என்ன விலை ! ரூபாய் ஆயிரத்திலிருந்து பதினைந்து ஆயிரம் வரை கூட மிகக் கனமான , ஐசில் நடக்கும்போது சறுக்கி விழாதபடியான ஷூக்கள் விற்கப்படுகின்றன. ஜெர்க்கின் எனப்படும் ஓவர் கோட் பல ஆயிரம் ரூபாய்க்கு விற்கப்படுகிறது. , நாங்கள் நம் தலைநகர் டெல்லிக்கு 'விசா' பெறச் சென்றபோது அங்கேயே எங்களுக்குத் தேவையான ஜெர்க்கின் ஸ்வெட்டர் எல்லாம் முன் எச்சரிக்கையாக வாங்கிக்கொண்டு சென்றது ஒரு விதத்தில் நல்லதாகப் போயிற்று. ஏனென்றால் இங்கு பலமடங்கு விலை குறைவாக வாங்கினோம் .
டெல்லியில் உள்ள பின்லாந்து தூதுவரகத்தில் நானும் என் கணவரும் மேலும் இரண்டு வடநாட்டுப் பையன்களும் மட்டும் தான் விசா பெறுவதற்காக வரிசையில் நின்றோம் . ஆனால் அங்கே அமெரிக்கத் தூதுவரகத்தில் பார்த்தால் ஒரு நீண்ட கியூ .. இளைஞர்கள் போட்டி போட்டுக்கொண்டு நிற்பதைப் பார்த்தால் பரிதாபமாக இருந்தது ."என்ன வளம் இல்லை இந்த திருநாட்டில்? , ஏன் கையை ஏந்தவேண்டும் வெளிநாட்டில்? "
என்ற பாடல் வரிகள் நினைவுக்கு வந்தன அதே சமயம் , " நம் பிள்ளைகளும் வெளிநாட்டில் தானே இருக்கிறார்கள் , நமக்கு ஒரு நியாயம், மற்றவருக்கு ஒரு நியாயமா? என்று நினைத்து சமாதனம் அடைந்தேன் !
பின்லாந்தில் நானும் என் கணவரும்
பின்லாந்தில் "எஸ்பூ" என்ற ஊரில் ஒரு கடையில் சந்தித்த 35 வயது பின்லாந்து இளைஞர் ஒருவர் , ஆங்கிலத்தில் "நான் இந்தியா வந்துள்ளேன் .. எனக்கு கேரளா ரெம்பப் பிடிக்கும் , நான் மாதா அமிர்தானந்தமாயின் சிஷ்யன் , என் இரண்டு வயதுப் பெண்ணுக்கு "பூர்ணா" என்று மாதா பெயரிட்டிருக்கிறார்கள் " என்று கூறிவிட்டு அவர் கையில் கட்டியிருந்த கடிகாரத்தை எங்களிடம் காட்டினார் ;
அதில் மாதா அமிர்தானந்தமாயியின் படம் இருந்தது!
இந்த பின்லாந்த் தேசத்தில் முடி வெட்டிக்கொள்வதர்க்குக் கூட Appointment
வாங்கிக்கொண்டு தான் saloon செல்ல வேண்டியுள்ளது . முடி வெட்டக் குறைந்த கட்டணம் 10 euro (650 ரூபாய் ). முடி திருத்துவது என்னவோ பெரும்பாலும் பெண்கள் தான். மிக அழகாக ஸ்டைலாக வெட்டுவதென்றால் இன்னும் கூடுதல் கட்டணம்.
படம்: பின்லாந் விமான நிலையத்தில் ஒரு வயது பெயர்த்தி ஆர்த்தி யுடன் என் கணவர்
10 Jan 2006 என் பேத்தி ஆர்த்தியின் முதல் பிறந்தநாள் ! என் மகன் கண்ணனுடன் Ericson கம்பனியில் வேலை பார்க்கும் Finninsh நண்பர்கள்
அனைவருடனும் சேர்ந்து என் பேத்தி பிறந்த நாளை வெகு விமரிசையாகக் கொண்டாடினோம் . எல்லாருடனும் புகைப்படம் வீடியோ எடுத்துக்கொண்டு
மறுநாள் ஜன 11 இல் தாயகம் திரும்பி வந்தோம் .
இதுவரை நான் எழுதியதெல்லாம் எங்கள் முதல் Finland பயணம் பற்றித்தான் . இனி எழுதப்போவது எங்கள் இரண்டாவது பின்லாந்த் பயணம் பற்றி . எங்கள் இரண்டாவது பயணம், வசந்த காலத்தில் June/July மாதத்தில் 2009 ஆம் வருடம் தொடங்கியது . சரியாக மூன்றரை ஆண்டுகட்குப் பின்னர் மீண்டும் பின்லாந்த் செல்ல நினைத்ததுமே , என் மகன் "சென்ற முறை உரை பனிக்காலத்தில் வந்து பின்லாந்த் பார்த்தீர்கள் , இந்த முறை நல்ல பூத்துக்குலுங்கும் வசந்தத்தில் வாருங்கள் " என்று தான் கூறினார்.

அதன் படி தெருவெங்கும் நல்ல சீசனில் ஊட்டி கொடைக்கானல் போல எங்கு பார்த்தாலும் பூப்பூவாய் கலர் கலராய் , பூத்துக்குலுங்கும் . 2009 June இல் எங்கள் இரண்டாம் பின்லாந்த் பயணம் தொடங்கியது . அந்த இனிய நினைவுகளை பற்றியும் எழுதத் துவங்கவா? நீங்கள் படிக்கத் தயாரா?
விளம்பர பாணியில் கேட்டல் , "நான் ரெடி ! நீங்க ரெடியா?"
===============================================================
என் இனிய பின்லாந்து நினைவுகள் ...
பயணக்கட்டுரை -பகுதி 6

இந்த முறை என் பேத்தி ஆர்த்தி வளர்ந்து பள்ளிக்குச் சென்று
கொண்டிருந்தாள் ! இரண்டாவது பேத்தி பார்த்தி பிறந்து ஆறு ஏழு மாதம் .
என் பேத்தி சென்று வந்த ஸ்கூல் ஒரு Play School ! இங்கு பிள்ளைகளை ஏழு வயதில் தான் பள்ளியில் சேர்க்கமுடிகிறது என்று முன்னரே எழுதி இருந்தேன் . என் பேத்தி பயின்ற ஆங்கில வழி Play school ஆசிரியை பெயர் " "Katti". அவரிடம் பேசிகொண்டிருக்க நேர்ந்தபோது நான் கேட்டேன் . " எங்கள் நாட்டில் ஐந்து வயதில் முதல் வகுப்பில் சேர்த்துக் கொள்கிறார்களே ? இங்கு மட்டும் ஏன் ஏழு வயது வரை முதல் வகுப்பில் சேர்க்க மறுக்கிறார்கள் ? " என்று கேட்டேன் . அதற்க்கு அவர் சொன்ன பதில் என்ன தெரியுமா ?
ஏழு வயது வரை பிள்ளைகள் கட்டுப்பாடின்றி பட்டாம் பூச்சிகள் போல் ஆடி, பாடி, துள்ளிக் குதித்து , சிரித்து மகிழ்ந்து ,விளையாடட்டுமே ! இதுதானே விளையாடும் பருவம், பின்னால் 24/26 வயது வரை, இளங்கலைப் பட்டம், முதுகலைப் பட்டம், ஆய்வுப் பட்டம் , என்று படிக்கத்தான் போகிறார்கள் !
இந்தச் சின்னஞ்சிறு வயதில் தானே இப்படியெல்லாம் விளையாட முடியும் !
Let them play for some years!" என்ற அவரது பதிலில் ஏதோ ஒரு நியாயம் ஒளிந்து கொண்டிருப்பது மட்டும் நன்றாகப் புரிகிறது .
அந்த ஆசிரியை கூறியது சரியா? தவறா? என்பதை உங்கள் ஆராய்ச்சி முடிவுக்கே விட்டுவிடுகிறேன் . அனால் இந்த தருணத்தில் , உலக புள்ளி விவரப்படி , "உலகில் தலை சிறந்த பள்ளி கல்வி அளிக்கும் நாடு பின்லாந்து " என்பதை நினைவூட்டக் கடமை பட்டுள்ளேன் .
அங்கே நடந்த ஒரு சிரிக்க வைக்கும் சம்பவம் , பெற்றோர் ஆசிரியர் குழந்தைகள் அனைவரும் கலந்துகொண்ட அந்தப் பள்ளி ஆண்டு விழா ! அந்த விழா விற்கு எங்கள் பேத்தியுடன் நாங்களும் சென்றிருந்தோம். அதில் ஒரே பாட்டை பல மொழிகளிலும் எல்லாக் குழந்தைகளும் சேர்ந்து இசைத்தார்கள் ! ஏனென்றால் அந்தப் பள்ளியில் பயிலும் பிள்ளைகள் சிலர் பின்னிஷ் அல்லாத , ஜெர்மன் , பிரான்ஸ் ,சீனா, ஜப்பான் மற்றும் என் பேத்தி ஒருத்தி மட்டும் இந்தியா- தமிழ்! , இப்படி பல நாட்டுப் பிள்ளைகள் ஆவர் . பல வண்ணப் பூக்கள் போல, அந்த பல நாட்டு பிஞ்சுகள் , குட்டி பையன் களும், குட்டிப் பெண்களும், ஏதேதோ பாடி, நடித்துக்காட்டி, இடுப்பை வளைத்து ஆடினார். "Next our children will sing in Tamil , one of the most reputed south Indian languages" என்று அந்தப் பள்ளித் தலைமை ஆசிரியை பார்பரா ஸ்டீபன் அறிவித்ததும் அந்தப் பிஞ்சுகள் எல்லாம் இனிய குரலில் கொஞ்சு தமிழில் பாடினார்கள்
" தன்கூரியா தன்கூரியா
தம்பி ஜான் ! தம்பி ஜான் !
கால மணி அடிக்குது கால மணி அடிக்குது
தம்பி ஜான் ! தம்பி ஜான் !"
-இதில் உங்களுக்கு ஏதேனும் புரிகிறதா? இது தமிழ் version ! பின்லாந்த் பாலர் பள்ளியில் ஒலித்த தேமதுரத் தமிழ் ஓசை ! ஆங்கிலப் பாடல் ஒன்றை இப்படித் தமிழில் பாடி ஆடினார்கள் !
அந்த ஆங்கிலப் பாடல் வரிகள் இதோ ,
'Are you sleeping ? Are you sleeping?
Brother Jhon, Brother Jhon...
Morning bells are ringing, Morning bells are ringing,
Brother Jhon, Brother Jhon..."
'தூங்குறியா?" என்பது தான் " தன்கூரியா " என்று அவர்கள் உச்சரித் தார்கள் என்பதை என் மருமகள் எனக்குப் புரிய வைத்த பின்னர் என்னால் நெடு நேரம் சிரிப்பை அடக்க முடியவில்லை . அதிலும் இந்தப் பாடலுக்கு தமிழ் மொழி பெயர்ப்புச் செய்து கொடுத்ததும் என் மருமகள் தான் என்பதை அறிந்து விழுந்து விழுந்து சிரித்தோம் !
பின்லாந்தில் பொழுது போக்கிற்காக , நூலகம் சென்று ஆங்கிலப் புத்தகங்களை எடுத்துப் படிக்கும் வழக்கத்தை வைத்திருந்தேன் .அங்கு பின்னிஷ் மொழி புத்தகங்கள் தான் அதிகம், ஆங்கில மொழிப் புத்தகங்கள் மிகக் குறை வாகவே இருந்தன. நான் தேடிய பல புத்தகங்கள் கிடைக்கவில்லை . அப்போது அங்கே வேலை செய்த பெண்மணியும் சரி,
செபாஸ்டியன் என்ற இளைஞனும் சரி ," உங்களுக்கு தேவையான புத்தகங்களின் பெயரை எழுதித் தந்தால் நாங்கள் வேறு எந்த நூலகத்திலிருந்தாவது பெற்றுத் தர முயற்சி செய்வோம் . உங்கள் E-mail id
கொடுத்தால் நாங்கள் தகவலைத் தெரிவிப்போம் !" என்று வலியக் கூறியது என்னை வியப்பில் ஆழ்த்தியது.
நான் பல ஆண்டுகளுக்கு முன்னால் படித்து ரசித்த " Far from the Maddling Crowd", by Thomas Hardy, "Invisible Man" By H.G. Wells, "Great Expectations" by charles Dickens
மற்றும் நான் இதுவரை படித்தே இராத , நோபல் பரிசு பெற்ற நம் தேசியக்கவி இரவீந்திரநாத் தாகூரின் ஆங்கில கீதாஞ்சலி - ஆக இந்த 4 புத்தகங்களும் வேண்டும் என்று நான் எழுதிக் கொடுத்து என் மகன் கண்ணனின் E-mail id , கொடுத்துவிட்டு வந்த மூன்றாவது நாள் பார்த்தால் , என் மகன் ஈமெயில் id க்கு , " Please come and get all the 4 books, they are ready. " என்று பதில் வந்திருந்தது. எனக்கோ ஒரே ஆச்சர்யம். இப்படியும் கூட பொறுப்புணர்வுடன் அடுத்தவர் களுக்காக இறங்கி வந்து செயல்படுபவர்களும் இருக்கிறார்களே என்று! . சென்றேன், பார்த்தேன், பெற்றேன், படித்தேன், ரசித்தேன் , சிரித்தேன் , மகிழ்ந்தேன், லயித்தேன், ....அவர்களுக்கு நெஞ்சார்ந்த நன்றி கூறினேன்,. இதென்ன கண்ணதாசன் போல தேன், தேன் என்று முடித்திருக்கேறேன் என்று எண்ணுகிறீர்களா? .

நான் கண்ணதாசனின் பரம ரசிகை அல்லவா? .. ஆக அந்தப் பாதிப்பு எப்போதும் என்னுள் இருக்குமல்லவா?
இந்த ஜூன் , ஜூலை, மாதங்களில் பார்த்தால் தெருவெல்லாம் வண்ணப்பூக்கள் மயம். உதகைக் கண்காட்சி போன்று, வெவ்வேறு நிறங்களில் , மிகப் பெரிய ரோஜாப்பூ , Tulip பூ , மற்றும் எனக்குப் பெயர் தெரியாத பல்வேறு பூக்கள். பூத்துக் குலுங்கி கொள்ளை அழகை வாரி இறைக்கின்றன. இந்த அழகை எந்த விழியில் கொண்டு செல்வோமோ ??
என்று கூட பாடத் தோன்றியது. அங்கிருந்த அந்த இரண்டரை மாதங்களில் இந்த வண்ணப் பூக்களின் அழகை ரசிக்கவும், அதன் நறுமணத்தை நுகரவும், நான் ஒரு போதும் தவறியதில்லை. என் துணைவர் எல்லாவற்றையும் புகைப்படம் எடுத்து , CD யில் சேமித்து வைத்துள்ளார்.
(படங்களில் பின்லாந் வீதியில் பூத்து குலுங்கும் வண்ண மலர்களும் கொஞ்சி மகிழும் அன்பு பேத்தி களுடன் நானும் ...)
அங்கு தெருவுக்குத் தெரு தவறாமல் விளையாட்டுத் திடல் இருக்கிறது .
மிகவும் children friendly country. அங்கு தெருவுக்குத் தெரு , சிறு குழந்தைகளுக்கு, சறுக்கு, ஊஞ்சல் ,ஆடு குதிரை, எல்லாம் உண்டு. மேலும் ஓரிடத்தில் சதுர வடிவில் குழி வெட்டி பிள்ளைகள் மண் அள்ளி விளையாடுவதற்காக தூய ஆற்று மணலையும் நிரப்பி வைத்திருப்பார்கள் . அந்தக் குட்டிப் பிள்ளைகள் , அங்கு வேக வேகமாக , ஊஞ்சல் ஆடுவதையும், அந்த ஆற்று மணலை அள்ளி கையில் வைத்திருக்கும் Mould களினால் வித விதமமான ஆமை , நாய்க்குட்டி, பூனைக்குட்டி, செய்வதை எல்லாம், பார்க்க வேண்டுமே ! ..." ஆஹா ! இந்த பின்லாந்த் அரசாங்கம் பிள்ளைகளுக்கு எவ்வளவு தூரம் முக்கியத்துவம் கொடுக்கிறது!" என்று வியந்து போனேன். இந்த நாட்டின் எல்லாப் பிள்ளைகளுக்கும் மூன்று வயது வரை நாப்கின் , உணவு, மருந்து, எல்லாமே அரசாங்கம் இலவசமாக கொடுக்கிறது, பின்னர் பள்ளிப்படிப்பிற்கும் பாதி சம்பளம் வரை மணியம் கொடுக்கிறது .பிள்ளைகளை நல்ல விதமாக வளர்த்து நல்ல குடிமக்களாக ஆக்கிக்கொள்ள வேண்டிய சூழ்நிலையை ஆரம்பத்திலேயே உருவாக்கிக்கொடுப்பதில் அதிக அக்கறை எடுத்துச் செயல் படுகிறது பின்லாந்த் அரசு.
இங்கு இந்த சீசனில் , Blue Beries , எனப்படும் கரு நீல பெர்ரி பழ செடிகள் ஆங்காங்கே காணப்படுகின்றன .கையில் உரை போட்டுக்கொண்டு, நாங்கள் மெனக்கெட்டு அதைப் போய் பறித்து , லேசாக உப்புப் போட்டு,
சுவைத்துச் சாப்பிடுவதுண்டு. என் கணவர் தான் ஸ்கூல் படிக்கும் போது ஈச்சங்காய் பறித்தது போல் இருக்கிறது என்று தன மலரும் நினைவுகளைப் பகிர்ந்துகொண்டே Blue beries பறித்து உதவினார். நான் சிங்கப்பூரில் படித்ததால் ஈச்சங்காய் பிடுங்கிய அனுபவம் ஏதும் இல்லை !! இந்த ப்ளூ பெரீஸ் நாங்கள் பறிக்கும் போது என் இரண்டு வயது பேத்தி பாரதியும் வந்து பறிப்பதுண்டு. அது ஸ்ரீராமருக்கு அணில் உதவிய போல இருந்தது. ப்ளூ பெரீஸ் இலேசான இனிப்பு புளிப்பு கலந்த சுவை உடையது. இது வைட்டமின் அயன் சத்து நிறைந்தது என்கிறார்கள்.
ஒரு நாள் வழக்கம் போல் நாங்கள் ப்ளூ பெரிஸ் பறிக்கச் சென்ற போது, ஒரு சுவையான சம்பவம் நிகழ்ந்தது. பக்கத்தில் ஐந்தாவது மாடியிலிருந்து எங்களை வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்த ஒரு 60 வயது மதிக்கத் தக்க Finnish பெரியவர் ஒருவர், விறு விறு வென்று கீழே இறங்கி வந்து எங்களிடம் ஒரு பாத்திரத்தை நீட்டினார். அந்தப் பாத்திரத்தில் சுமார் அரைக் கிலோ ப்ளூ பெரீஸ் இருக்கலாம், அதை அப்படியே எங்கள் கையில் வைத்திருந்த பாத்திரத்தில் கொட்டிவிட்டு , கையை அசைத்துப் புன்னகைத்து விட்டு , எங்கள் நன்றியையும் சிரித்த முகத்துடன் கேட்டுக்கொண்டே அமைதியாக திரும்பிச் சென்றார் . இது நாங்கள் யாரும் சற்றும் எதிர்பாராமல் நிகழ்ந்ததால், எங்களுக்கு மகிழ்ச்சி ! அன்று பழம் பறிக்கும் வேலை மிச்சம் என்று வீடு திரும்பினோம் ! இதே ப்ளூ பெரீஸ் உரம் போட்டு, வணிக ரீதியாக பயிரிட்டு வளர்ப்பது , நல்ல குண்டு குண்டாக பெரிதாக கடைகளில் பார்க்க முடிகிறது ! அது ஒரு பவுண்டு 4 Euro விற்கு விற்கிறார்கள் !
இதே மாதிரி செக்க செவேலென்று , பல ஏக்கரில் பயிரிடப்பட்டிருந்த ஸ்ட்ராபெரீஸ் தோட்டத்திற்குச் சென்று நாங்களே பழம் பறித்துக் கொண்டுவந்து விலைக்கு வாங்கிவந்தது ஓர் இனிய அனுபவம். பழம் பறிக்கும்போதே ருசி பார்த்த அனுபவங்களும் வேடிக்கையானது .
பின்லாந்து ஸ்ட்ராபெரி தோட்டத்தில் பேத்திகள் ஆர்த்தி பார்தி யுடன் நானும் என் கணவரும்
ஏராளமான ஸ்ட்ராபெரி பழங்கள் செடியிலேய பழுத்து பறிக்க ஆளில்லாமல் தன்னால் கீழே விழுந்து கிடந்தது வீணாவதைப் பார்த்தால் சற்றே வருத்தமாகவும் இருந்தது .ஜனத்தொகை குறைவாக உள்ள நாட்டில் எந்த வேலைக்கும் குறைந்த சம்பளத்தில் நம் ஊரைப் போல் ஆள் கிடைக்காது . அதனால் தான் பொது மக்களையே நேரடியாக வந்து பழம் பறித்து விலைக்கு வாங்கிக்கொள்ளுமாறு விளம்பரம் செய்கிறார்கள் . இதற்கு "Strawberry picking" என்று பெயர். ஞாயிற்றுக் கிழமைகளில் பொழுது போக்காக பிள்ளைகளைக் கூட்டிக்கொண்டு "Strawberry Picking" செல்வது ஒரு பிக்னிக் போய்வந்தது போன்ற மகிழ்ச்சியைத் தந்தது.

சரி, இனிப் பழங்களை விட்டு விட்டு வீட்டு விஷயம் பற்றிப் பார்ப்போம் .
இங்கு சொத்து விலைகள் ரெம்ப அதிகம் . இங்கு சொந்தமாக வீடு வாங்க வேண்டுமென்றால் முதலில் சம்பந்தப் பட்டவர்களிடம் வீட்டைப் பார்ப்பதற்கு தொலைபேசியில் அப்பாயின்ட்மென்ட் வாங்க வேண்டும். (வீடு விற்பனை விபரம் தான் விலாவாரியாக பத்திரிக்கையில் உள்ளதே !) சரியாகக் குறித்த நேரத்தில் நாம் அங்கு சென்றல் , வீட்டு ஓனர் / குடியிருப்பவர் , நாம் பார்பதற்கு வசதியாக வீட்டை அழகு படுத்தி வைத்துவிட்டு வெளியில் சென்று விடுக்கின்றனர் . பொறுப்பாக அங்கு வீட்டுத் தரகர் பெண்மணி ( Authorized broker)
மட்டும் நமக்காக அங்கே காத்துக்கொண்டிருக்கிறார் . அந்த வீட்டைப் பற்றிய அனைத்து விபரங்களும் , பிளான் , கட்டிட அமைப்பு, எப்போது கட்டப்பட்டது, எவ்வளவு தொலைவில் பள்ளிக்கூடம் உள்ளது, மால், மருத்துவமனை ,எங்கு உள்ளது, என்பது போன்ற அனைத்து விபரங்களையும் அந்த ப்ரோக்கர் பெண்மணி அழகாக ஆங்கிலத்தில் கூறுகிறார் . ஆனால அந்த நேரத்தில் வீட்டிற்கு சொந்தக்காரகள் யாரையும் நாம் பார்க்க முடியவில்லை . அவர்கள் தத் தம் பிள்ளைகளைக் கூட்டிக்கொண்டு குடும்பத்தோடு அந்த ஒரு மணி நேரத்திற்கு எங்கேயாவது வெளியில் ஊர் சுற்றப் போய்விடுகின்றனர் . வீடு ரெம்பத் தூய்மையாக எல்லாம் அதது இருக்கவேண்டிய இடத்தில் (அடுப்படியில் இருந்து ஹால், பிள்ளைகள் விளையாடும் அறை, டிவி ரூம் முதற்கொண்டு) எல்லாம் ஒழுங்காக அடுக்கி வைக்கப்பட்டுள்ளது . எதையும் தொடாமல் தான் நாம் பார்க்க வேண்டும் ."Please don't touch any of these" என்று அந்தப் ப்ரோக்கர் பெண்மணி அன்பாக வேண்டுகோள் விடுக்கிறார் . எல்லா விபரமும் அடங்கிய pamphlet ஒன்றைக் கொடுத்து " If you are interested Please contact me" என்று கூறினார்.
நாங்கள் சென்றபோது , எங்களைப் போலவே வேறு சிலரும் அந்த வீட்டைப் பார்க்க அதே நேரத்தில் வந்திருந்தனர் வீடு கட்டப்பட்டு பல வருடங்கள் ஆனவையும் கூட , நன்றாக பராமரிக்கப் பட்டு இப்போது கட்டப்பட்டவை போல தோற்றமளித்தன . அதில் சகல வசதிகளும் கூட இருந்தன. நாங்களும் உடன் இருந்து என் மகனுக்காக பல வீடுகள் பார்த்து , மனதுக்குப் பிடித்து தேர்வு செய்த ஓர் அழகிய இல்லத்தை பின்லாந்தில் என் மகன் கண்ணன் வாங்கியது எங்களுக்கு மிகவும் மகிழ்வான விஷயம் . இறைவனின் கருணை.!
பின்லாந்தில் முதன் முதல்லாக ஒருவர் வாங்கும் முதல் வீடிற்கு பத்திரப் பதிவு செலவை பின்லாந்த் அரசாங்கம் இலவசமாக அளிக்கிறது (அதாவது No Registration charges for the First Property) ஒருவர் இரண்டாம் முறையோ , அதற்கு மேலோ வீடு வாங்கினால் பத்திரப் பதிவு சார்ஜ் உண்டு .
இங்கு பள்ளியில் படிக்கும் பிள்ளைகள் பகுதி நேர வேலையாக, மே , ஜூன் , போன்ற விடுமுறை மாதங்களில் பேப்பர் போடுகிறார்கள்!, தபால் போடுகிறார்கள்! . ஏன்?... , ஆங்கங்கே உள்ள பார்க்களில் புல்கூட வெட்டுகிறார்கள்!. கடைகளில் பில் போட்டு பணம் வாங்குகிறார்கள் . ஆண் பெண் வேறுபாடு இன்றி எல்லாப் பிள்ளைகளுமே பொறுப்போடு வேலை செய்கிறார்கள் . தபால் போடும் Jhon (சுமார் 17 வயது இருக்கும்) " ஹாய் ஆண்டி " என்று கை அசைத்து விட்டு விறுவிறு வென்று வீட்டுக்கு வீடு சைக்கிளில் சென்று தபால் போடுவதைப் பார்க்கவேண்டுமே ! விடுமுறை நாட்களில் வீட்டில் சும்மா இருக்க முடியவில்லை , அதனால் தான் தபால் போடுகிறேன் " என்று கேட்டதற்கு விளக்கமும் கூறினான் !
பின்லாந்திலிருந்து , பக்கத்தில் உள்ள எஸ்டோனியா என்ற சிறிய நாட்டிற்கு கப்பலில் சுற்றுலாச் சென்றோம். அதன் தலைநகர் Tallin என்ற கடற்கரை சார்ந்த நகரம் . மிகப் பழமையான அந்த நகரின் தேவாலயம் பிரசித்தி பெற்றது. அங்கு Newyork நகர் குறுகட் street போன்ற குறுகிய வீதிகளைப் பார்க்கலாம்.
எஸ்டோனியா நகரை சுற்றிப்பார்ப்பதற் காக வந்திருந்த ஓர் ஜெர்மானிய இளம் தம்பதியினர் என் பச்சை நிற பட்டுச் சேலை நன்றாக இருப்பதாககூறி என்னையும் என் பேத்தியையும் சேர்த்து புகைப்படம் எடுத்துக்கொண்டனர்.
Tallin இல் "நமஸ்கார்" என்ற உணவகம் இருந்தது . ஆனால் உள்ளே நுழைந்தால் இந்திய உணவுகள் ஏதும் இல்லை. ஏமாற்றமாக போய்விட்டது .
மேலே குடை போன்ற கூரை போட்ட திறந்த வெளி உணவக மேஜையில் அமர்ந்து அந்த நாட்டு அசைவ உணவுவகைகளை, கூட வந்தவர்கள், அனைவரும் விரும்பிச் சாப்பிட்டனர். எங்களுடன் வந்த மல்லியத்தை சேர்ந்த (மயிலாடுதுறைக்கு அருகே உள்ள சிற்றூர் ) அரவிந்த் - அனிதா தம்பதியினர் , அவர்கள் ஒரு வயது குட்டி பையன் சுட்டிப் பயல் மிதுன் , என் கணவர் , மகன் , பேத்தி , மருமகள் அனை வரும் அந்த நாட்டு உணவை சுவைத்து மகிழ்ந்தனர் . நான் மட்டும் சைவ உணவுக்காக ஏங்கினேன்! . ஒரு வழியாக Bread பிஸ்கட் என்று கையில் இருந்ததை வைத்து சமாளித்தேன் .
Tallin நகரை டூரிஸ்ட் பஸ் மூலம் சுற்றிப் பார்த்தோம் . சில இடங்களுக்கு நடந்தே சென்றோம் . அப்போது தன் ஒரு வயது குட்டி பையன் மிதுனை , அனிதா ப்ராமில் வைத்து தள்ளிக்கொண்டே வந்தார் . அத்துடன் கூடவே பாடிக்கொண்டும் வந்தார். நிலா நிலா ஓடிவா , அம்மா இங்கே வா வா , துள்ளிக் குதிக்குது கன்னுக்குட்டி, என்று பல Rhymes தன இனிய குரலில் பாடிக்கொண்டு வந்த போது ,அந்த குட்டி பையன் அதை ரசித்துக் கேட்டுக்கொண்டே வந்ததை நான் கவனித்தேன் . எந்த வித சத்தமும் போடாமல் அமைதியாக பாட்டை ரசித்த படி கேட்டுக் கொண்டிருந்தான் . ஆனால் அனிதா பாட்டை நிறுத்தி விட்டு எங்களுடன் பேச முற்பட்ட போது அந்த பையன் சிணுங்க ஆரம்பித்து விட்டான் . இது எனக்கு வேடிக்கையாக இருந்தது . Anitha , you are doing a good job , carry on ,with your song "
என்று கூறினேன் . "அவன் நல்லவனாவதும் ,தீயவனாவதும் அன்னை வளர்ப்பினிலே " என்ற பாடல் வரிகளை நினைவூட்டினேன் .
ஹெல்ஸின்கியில் தெருவில் நடந்த அந்நாட்டு நடன ஊர்வலம்
Samba festival - originally from Brazil followed worldwide now a days
=====================================================================================
என் இனிய பின்லாந்து நினைவுகள் .
பயணக்கட்டுரை - பகுதி 7
Finland லிருந்து,15 நாட்கள் விடுப்பு எடுத்துக் கொண்டு என் மகன் கண்ணன் எங்களை Europe tour , பிரான்ஸ், இத்தாலி ,ரோம் ஆகிய நாடுகளுக்கு சுற்ற்றுலா அழைத்துச் சென்றார் . அது எங்களுக்கு இனிமை யிலும் இனிமை சேர்த்ததை போன்று அமைந்தது .
France நாட்டில் பெண்கள் மிக அழகாக இருப்பார்கள். வாசனை திரவியங்கள் அதிகம் உபயோகிப்பார்கள் . மது வகைகளும் , வாசனை திரவியங்களும் இங்கு தண்ணீர் பட்ட பாடு என்று கேள்விப்பட்டிருக்கிறேன் , ஆனால் நேரில் போய் பார்த்த போது அப்படியே மலைத்துப் போனேன் . அப்சரஸ் போன்ற பெண்கள் அப்படி ஒரு அழகு சந்தனத்தில் கடைந்து எடுதார்போன்ற நிறம், செதுக்கினார் போன்ற மூக்கு , நம்மை சுண்டி இழுக்கும் நீல நிறக் கண்கள் , ஒல்லியான கட்டுக்கோப்பான , உடல் வாகு , - அப்படியே பிரமித்துப் போனேன் ! கண்ண தாசனும் வைரமுத்துவும் உடன் இருந்தால் என்னவெல்லாம் கவிதை தோன்றும் என்று நினைத்துப் பார்த்தேன் ! எனக்கே கவிதை தோன்றியது என்றால் பார்த்துக்கொள்ளுங்களேன் !!.
" நீல நயனகளில் ஒரு நீண்ட கனவு வந்ததே..." என்று பாடல் வரிகள் அந்த பூலோக ரம்பை களைப் பார்த்த வுடன் என் மனதில் பளிச்சிட்டது !
ஆனால் அந்த இள மங்கையர்கள் தத்தம் காதலர் களுடன் Public ஆக வீதி களில் கொஞ்சி குலவுவது அருவெறுப்பாக இருந்தது .. அந்த தேசத்தில் யாரும் அதை பற்றி எதையும் கண்டு கொள்ளவே இல்லை .
பிரான்ஸ் Eiffel tower உலக அதிசயம் . இது France தலை நகரமான Paris நகரின் அடையாள சின்ன மாக திகழ்கிறது . வெறும் எக்கு கம்பிகளால் மட்டுமே கட்டப்பட்ட இந்த கோபுரம் பாரிஸில் 1889 இல் ஒரு உலக பொருட்காட்சிக் காக பிரான்ஸின் தொழில் நுட்பத் திறனை வெளிப்படுத்தும் நோக்கத்தோடு . அந்த பொருட்காட்சியின் நுழை வாயிலாகக் கட்டப்பெற்றது . இதை வடிவமைத்தவர் பெயர் Gustave Eiffel . அவர் பெயராலேயே இந்த tower புகழ் அடைந்தது . இவர் தான் USA லிபர்ட்டி statue வின் உட் கட்டமைப்பை வடிவமைத்தார் . 1886 முதல் மூன்று ஆண்டு களில் கட்டி முடிக்கப் பெற்றது Eiffel tower . இந்த கோபுரத்தின் உட்புறம் லிப்ட் மூலம் உச்சி வரை ஏறி செல்ல வசதி உள்ளது . 1005 அடி உயரம் உள்ளது . உச்சி வரை ஏறிச் சென்று இரண்டு தளங்களில் நின்று paris நகர் முழுவதையும் பார்த்து ரசித்தோம் . கண் கொள்ளாக் காட்சி அது ! கோபுரத்தின் முதல் தளத்தில் ஒரு பகுதியில் Thomas alwa Edison உடன் Gustave Eiffel உரையாடிக்கொண்டு இருப்பதை போன்ற மெழுகு பொம்மை கண் காட்சி யாக வைக்கப்பட்டுள்ளது .அது மிக தத்ரூப மாக இருந்தது . 1889 ஆம் ஆண்டில் தன் கண்டு பிடிப்புகளில் ஒன்றான போட்டோ கிராப் ஐ Eiffel க்கு Edison கொடுப்பது போன்ற சித்திரங்கள் அமைக்கப் பட்டுள்ளன . அந்த குளிர் அறையில் அவர்கள் இருவரின் தலை முடிகள் அசைவது கூட இயற்கையாய் தெரிகிறது . அந்த இரு விஞ்ஞானி களும் மனித குலத்திற்கு விலை மதிப்பற்ற பொக்கிஷங்கள் ஆவர்.
அந்த மகத்தான மா மனிதர் களை மனதார நினைவு கூர்ந்து நன்றிப் பெருக்குடன் ஒரு கணம் பெருமூச்சு விட்டேன் ! Eiffel Tower முதல் தளத்தில் ரெஸ்டாரண்டும் , நினைவு பொருட்கள் விற்கும் கடையும் உள்ளன . Eiffel கோபுர படங்கள், பொம்மைகள் , சாவி கொத்துகள். எல்லா வற்றிலும் Eiffel tower ! பீங்கான் தட்டுகள் , பனியன்கள் , Eiffel டவர் படத்துடன் எல்லாமே ஒரு Euro முதல் 10 Euro விற்கும் அதிகமாகவும் விற்கிறார்கள் . அங்கு வந்த தற்கு ஞாபகர்த்தமாக எதையாவது வாங்கவேண்டுமே என்று எல்லோரும் Eiffel tower படத் துடன் கூடிய பொருட்களை வாங்கி செல்கின்றனர் .
இங்கு தினந்தோறும் இரவு 10 மணியி லிருந்து 10.10 வரை lighting போடுகிறார்கள் . Tower முற்றிலும் வண்ண ஒளி விளக்குகள் . தூரத்திலிருந்து பார்ப்பதற்கு கொடுத்து வைத்திருக்கவேண்டும் . அவ்வளவு கொள்ளை அழகு , ஒளி விளக்குகள் விட்டு விட்டு பிரகாசமாக மின்னி மின்னி எறிகிறது பார்த்துக்கொண்டே இருக்கலாம். கூடவே இசையும் ஒலிக்கின்றது . இரவு lighting பார்ப்பதற் கென்றே மைதான திற்கு சென்றோம்.
பகலில் Tower இன் கீழே நின்று கொண்டிருக்கும் போது எக்கச்சக்கமான புறா க்கூட்டம் சுற்றிலும் இருந்தன . என் பேத்தி கள் இருவருக்கும் ஒரே குதூகலம் . எனக்காக வைத்திருந்த bread முழுவதையும் புறாக்களுக்கு கொஞ்சம் கொஞ்சமாக பிய்த்து பிய்த்து போட்டார்கள் , அவை அனைத்தும் எங்களை சுற்றி கூட்டமாக வந்து சாப்பிட்டன.
ஒரு பக்கத்தில் சைனா காரர் போன்று மூக்கு சப்பையான மிகவும் வயதான கிழவர் ஒருவர் circus
காட்டிக் கொண்டிருந்தார். நடனமாடிக்கொண்டே பந்தை கீழே விழாமல் லாவகமாக தூக்கிப் போட்டு பிடித்தார் . அவர் கூடவே, மற்றும் இருவர், அதற்கு இணையாக drum போன்ற இசை வாசித்தனர் . அந்த drum முற்றிலும் மரத்தால் செய்யப் பட்டிருந்தது . அதில் நீண்ட மரக் குசிகளை தட்டி வெவ்வேறு ஒலி எழுப்பிக்கொண்டிருந்தனர் . குறிப்பாக ,அவர்கள் வயதை வைத்துப் பார்க்கும்போது அந்தக் காட்சி வித்தியாச மான உணர்வை ஊட்டியது . இந்த வயதில் இவர்களுக்கு இவ்வளவு உற்சாகமா ? இவ்வளவு எனெர்ஜியா ? என்று நினைக்கத் தோன்றியது .
Eiffel tower இன் உச்சியிலிருந்து Paris நகரத்தைக் காணும் பாக்கியம் நான் செய்த புண்ணியம் என்றே கருது கின்றேன் . அங்கிருந்தவாரே ரிவர் Thames முழுமையாகத் தெரிந்தது . அங்குள்ளோர் Thames நதியை Sames என்று உச்சரிக்கின்றனர் . ஷேக்ஸ்பியர் நாடகங்களில் வெகுவாக Thames நதிக் கரை யின் அழகு விவரிக்கப் பட்டுள்ளது.
Paris இல் அடுத்து நாங்கள் பார்த்து வியந்து அனுபவித்த இடம் "Disney World ".
அச்சு அசலாக அனைவரையும் குறிப்பாக குழந்தைகளை கொள்ளை கொள்ளும் அந்த டிஸ்னி வேர்ல்ட் நாங்கள் அமெரிக்காவில் Florida மாகாணத்தில் பார்த்தது போலவே இருந்தது. கொஞ்சமும் மற்றம் இல்லை .
அந்தத் தனி உலகைச் சுற்றிப் பார்த்து மகிழ்ந்தது பெரும் பேறு !
Disney யில் நான் மிகவும் ரசித்த பகுதி Sea World. "Sail with friends and Cruise with whom you have never sailed before " என்று எழுதப் பட்டிருந்த boating கண் காட்சி இரண்டு முறை பார்த்து பார்த்து மகிழ்ந்தேன் . சிறிய செயற்கை ஓடை யில் மோட்டார் போட் மூலம் நாம் பயணம் செய்ய, Boat நம்மை ஒரு குகைக்குள்
பயணிக்க வைக்கிறது. ஏதாவது திகில் இருக்குமோ என்று முதலில் பயந்தேன், அனால் உள்ளே சென்றால் ஒரு ஸ்வர்க லோகமே இருந்தது! குகையின் இரு மருங்கிலும் வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட ஒவ்வொரு தேசத்தின் கலாச்சாரத்தை விளக்கும் பொம்மைகள் மின்சாரத்தால் இயங்கி நம்மை மகிழ்ச்சி பரவசத்தில் ஆழ்த்தின . பொம்மைகள் இனிமையாக பாட்டு பாடியும் நடனமாடியும் ,கை கால் களை, இசைக்கு ஏற்ப. ஆட்டி ஆட்டி ,அசைத்து, படுவது போல இசைக்கு ஏற்ப வாயையும் அசைத்து ,நம்மை வரவேற்று அசத்து கின்றன . அது மிக மிக அறிய விந்தையான காட்சியாகும் .
அங்கே நம் இந்திய பொம்மைகள் பைஜாமா , ஜிப்பா , தலைபாகை யுடன் பஞ்சாபிக் காரர்களைப் போன்றும் , பெண் பொம்மைகள் குஜராத்தி ஸ்டைலில் சேலை கட்டிக் கொண்டும் , தலையில் குடம் வைத்துக்கொண்டும் , நெற்றியில் அழகாக பிந்தி பொட்டு வைத்து , கால்களில் கொலுசு போட்டு , கைகளில் வளையல்போட்டும் , கழுத்து நிறைய மாலைகள் அணிந்தும், காது களில் வளையம் போட்டும் Hindi பாட்டுக்கு அற்புதமாக ஆடிக்கொண்டிருந்ததை, நெடுநேரம் இமை மூடாமல் பார்த்தேன். எப்படி இவர்களால் இந்த பொம்மைகளை இவ்வளவு நேர்த்தியாக செயல் பட வைக்க முடிகிறது என்று எண்ணி எண்ணி வியந்தேன்.
Disney world கதாபாத்திரங்கள் முக்கியமாக, "மிக்கி மவுஸ்" க்கு மயங்காத குழந்தைகள் உலகில் உண்டா? Disney world ஒரே நாளில் பார்த்து முடிக்க முடியாது . எனவே இரவு நெடு நேரம் வரை அங்கேயே இருந்தோம் . இரவு 9 மணிக்கு, parade அணிவகுப்பு நிகழ்ச்சியை பார்க்க ஏகப்பட்ட கூட் டம் கூடியிருந்தது . அணிவகுப்பில் cenderella , மிக்கி mouse , Donald duck , போன்ற ஒவ் வொன்றுக்கும் ஒவ்வொரு வண்டி அலங்கரித்து வலம் வந்தன . அந்த கதா பாத்திரங்கள் நம்மையும் ,நம் குழந்தை களையும் பார்த்து கையசைத்து , flying kisses கொடுத்துக்கொண்டு செல்வது நன்றாக இருந்தது. இனிமையான இசையுடன் செல்லும் அலங்கார அணிவகுப்பின் இறுதியில் வான வேடிக்கை சிறப்பாக நடைபெற்றது . அவளவும் நம் சிவகாசி யில் தயாரித்த தாகத் தான் இருக்க வேண்டும் என்று நான் மனதுக்குள் நினைத்துக்கொண்டேன் . அவ்வளவு வெடி மத்தாப்பு !!
நான் சிறுவயதில் படித்த Robinson Crusoe கதையில் வரும் கதா பத்திரம் ஒரு கற்பனைப் படைப்பு என்றே இதுவரை நான் நினைத்திருந்தேன். Dysney world பார்த்த பிறகு தான் தெரிந்துகொண்டேன், உண்மையிலேயே வாழ்ந்த மனிதர் என்று ! அவர் வில் அம்பு வீரர் . வசதியான வர்களிடம் கொள்ளை அடித்து ஏழை எளியவர்க்கு உதவிய ஒரு வித்தியாசமான மனிதன். அவர் பயன் படுத்திய உடை உடைமைகள் , அவர் சாப்பிட்ட தட்டு , வில் அம்பு , எல்லாமே, இங்கு ஒரு மாடல் home செய்து , அதில் பத்திரமாக வைக்கப்பட்டுள்ளன . ஆக
ஒரு வழியாக வெளியே வர மனம் இல்லாமலேயே டிஸ்னி world பார்த்து முடித்து விட்டு Hotel Room க்கு இரவு நெடு நேரம் கழித்து களைத்துப் போய் வந்து சேர்ந்தோம்.
======================================================================
என் இனிய பின்லாந்து நினைவுகள் .
பயணக்கட்டுரை - பகுதி 8
அன்று , Paris மாநகரில், மாலை பொழுதில் , காலாற நடந்து கொண்டிருக்கையில் , நாங்கள் சற்றும் எதிர் பார்க்காமல் , திடீரென்று , ஈழத்து தமிழர் ஒருவர் கூடை நிறைய மல்லிகைப்பூ விற்றுக்கொண்டிருந்தார் . 30, 32 வயது மதிக்க தக்கவர், எங்களோடு நல்ல தமிழில் உரையாடினார் . அவர் வைத்திருந்த பிரம்புக் கூடையில் மணம் வீசும் மல்லிகை சரங்கள் இடை இடையே காகித ரோஜா மொட்டுக்கள் சேர்த்து கட்டப்பட்டிருந்தது . மல்லிகை வாசம் ஊரைக் கூட்டியது . வாங்காமல் இருக்கமுடியுமா என்ன ? ஒரு முளம் 2 Euro ; 4 Euro கொடுத்து (சுமார் 300 ரூபாய்) இரண்டு முளம் பூ வாங்கி நானும் என் மருமகள், பேத்தி அனைவரும் கொஞ்சம் கொஞ்சம் தலையில் வைத்துக்கொண்டோம், அலாதி சந்தோஷம் . Paris இல் மல்லிகை பூ வாங்கியதன் ஞாபகமாக உடனே கமெராவில் கிளிக் செய்து கொள்ள மறக்கவில்லை .
அதே போல் ஈழத்து காரர் கள் நடத்தும் கடை ஒன்றிற்குப் போனோம் . அங்கு இசை கருவிகள் , சுடிதார் , ஜிம்கி வேலை பாடுகளுடன் கூடிய சேலைகள் , பார்க்க முடிந்தது. அங்கும் தமிழ் பத்திரிக்கைகள் , குமுதம், கல்கி, விகடன், அவள் விகடன் , சினேகிதி , போன்ற தமிழ் வார, மாத இதழ்கள் விற்பனைக்கு இருந்தன . நாங்கள் ஒரே ஒரு அவள் விகடன் மட்டும் 2 Euro கொடுத்து வாங்கினோம் (130 ரூபாய்). Parisல் புலம் பெயர்ந்த ஈழத்துத் தமிழர்கள் பலர் வசதியாக வாழ்கின்றனர் . சொந்த மாக கடை நடத்தி நல்ல வருமானம் சம்பாதிப்போர் இருக்கின்றனர். ஒரு சிலர் அங்கேயே செட்டில் ஆகி , பிரான்ஸ் நாட்டு மக்களை கலப்பு மணம் புரிந்தும் வாழ்கின்றதைப் பார்க்க முடிந்தது.
Paris இல் நாங்கள் தேடிப்போய் உணவருந்திய இடம், ராஜ்புத் இந்தியன் ரெஸ்டாரன்ட் , சவுத் இந்தியன் காரைக்குடி ரெஸ்டாரன்ட் கூட இருக்கிறது!
இட்லி , தோசை, வடை, சமோசா , பிரியாணி, மற்றும் இந்திய அசைவ உணவு வகை அனைத்தும் கிடைகின்றன. இந் நாட்டு மக்கள் கூட இந்திய உணவகத்தில் வந்து இருந்து உணவு அருந்துவதை பார்க்க முடிந்தது. இது தவிர பக்கதிலேயே சார்டியர்ஸ் ரெஸ்டாரன்ட் என்று ஓர் உணவகம் இருந்தது. அதை முதலில் நான் ஆர்வக் கோளாறினால் , "செட்டியார் ரெஸ்டாரன்ட்" என்று தவறுதலாகப் படித்துவிட்டு , பின்னர் விழுந்து விழுந்து சிரித்தோம்.
பாரிஸ் நகரை ஒரு நாள் டூர் பஸ் மூலம் சுற்றி பார்த்தோம். டூரிஸ்ட் பஸ் ஸில் ear phone மூலம் 12 மொழிகளில் விளக்கம் அளிக்கிறார்கள் .
நமக்கு வேண்டிய மொழியை நாமே தெரிவு செய்து கேட்டுக் கொள்ளலாம்.
parisல் 20 அடுக்கு மாடி கண்ணாடி கட்டிடம் ஒன்று , தலைமை நூலகமாக உள்ளது . அதை டூரிஸ்ட் பஸ்லில் செல்லும்போது வெளியில் இருந்தே பார்த்தோம், ஒன்றோன்ரையும் உள்ளே சென்று பார்க்க எங்களுக்கு நேரமும் வாய்ப்பும் இல்லை .
இந்நகரில் பல் வேறு அருங்காட்சி அகங்கள் இருக்கின்றன . முக்கியமான அருங்காட்சி Delouvre museum . இங்கு la davinci வரைந்த ஒரிஜினல் Monolisa ஓவியம் வைக்கப்பட்டுள்ளது . மெல்லிய புன்னகை யுடன் நம்மை அமைதியாக பார்ப்பது போன்று வரையப்பெற்ற Monolisa ஓவியம் உலக பிரசித்தி பெற்றது. இந்த ஓவியத்தின் சிறப்பு என்னவென்றால் எந்த angle , கோணத்திலிருந்து பார்த்தாலும், ஓவியதின் கண்கள் நம்மையே பார்ப்பது போன்று தோன்றும்.
மௌனமான , மென்மையான புன்சிரிப்புடன், அந்த மோனலிசா சித்திரத்தை பார்த்தவுடன் எனக்கு நினைவுக்கு வந்த திரைப்படப் பாடல் வரிகள் என்ன தெரியுமா?
" வாராயோ, வாராயோ , மோனலிசா , பேசாமல் பேசுதே கண்கள் லேசா "
ஓவியர் டாவின்சிக்கு மானசீகமாக நன்றி தெரிவித்துக்கொண்டேன் .
மறுநாள் பாரிஸ் லிருந்து Rome நகரிற்கு வந்தோம் . ரோமபுரி தேசம், வீரத்திற்கும், ஆண்மைக்கும் , பழமையான நாகரிகத்திற்கும் பேர் போன தேசம். Julius Caesar , Brutus , Augustus , ஆகியோர் ரோமானிய மாவீரர்கள் .பள்ளி யில் சரித்திரப் பாடத்தில் "Rise and Fall of Roman Empire " படித்த ஞாபகம் வந்தது. ஆனால் அப்போதெல்லாம், நானே நேரில் போய் அப்பேற்பட்ட அந்தச் சரித்திரப் புகழ் பெற்ற Rome நகரை பல ஆண்டுகள் கழித்து நேரிலே பார்த்துப் பரவசம் அடைவேன் என்று கனவில் கூட நினைக்கவில்லை !
=====================================================================
என் இனிய பின்லாந்து நினைவுகள்.....
பயணக்கட்டுரை பகுதி 9
Rome நகரம் ஒரு அழகிய டூரிஸ்ட் ஸ்பாட் . Hotel ரூம் புக் செய்வதை விட , guest House புக் செய்வது வசதியாக இருக்குமென்று என் மகன் , ஒரு வீட்டை (Guest House ) புக் செய்திருந்தான் . ஒரு அரை, சமைப்பதற்கு தேவையான பாத்திரங்களுடன் கிட்சென் , Fridge ,TV உட்பட compact ஆக இருந்தது. பால் bread , butter ஜாம் , சீஸ் , பழங்கள் , கேக் எல்லாம் வைக்கப் பட்டிருந்தன . நான் பல வேளை apple bread சாப்பிட்டு திருப்தி அடைந்தேன் . ஊர் சுற்றி பார்க்க வேண்டியிருந்ததால் அங்கு சமையல் ஏதும் செய்யவில்லை .
இத்தாலி யில் நாங்கள் முக்கியமாக பார்த்த இடங்கள் ரோமாபுரி மாநகரம், செயின்ட் பீட்டர் கதீட்ரல் (வாட்டிகன் நகரில் உள்ளது) புனித Pope Andavar வழிபாடும் பிரம்மாண்ட மான கதோலிக தேவாலயம் . பிசா tower , கிறிஸ்துவ பைபிளில் வரும் அத்தனை காட்சிகளும், வாட்டிகன் சர்ச்சில் சலவை கற்களால் ஆன மிக உயரமான சுவரில், வரையப் பெற்றுள்ளன. மைகேல் ஏஞ்சலோ போன்ற புகழ் பெற்ற ஒவியர்கள் பலர், இந்த வண்ண வண்ண சித்திரங்களைக் , கண்ணும் கருத்துமாக, பல ஆண்டுகளுக்கு முன், மிகச் சிரத்தையுடன் வரைந்துள்ளனர் . நம் தாஜ்மஹால் போன்று வெள்ளை சலவைக் கற்களால் ஆன , மிக கம்பீரமான , நூற்றுக்கணக்கான தூண்கள் இந்த தேவாலயத்தில் உள்ளன . தேவாலயத்தின் உள்ளேயும் , வெளியே உள்ள திடலிலும் , பல மணி நேரம் கியூ வில் நின்று தான் நாங்கள் உள்ளே செல்ல முடிந்தது . தேவாலயத்தின் உள்ளே பல வெண்கல செம்பில் எந்நேரமும் விளக்குகள் எரிந்து கொண்டிருக்கின்றன . நான்கு பக்கமும் வேலைப்பாட்டுடன் கூடிய கறுப்பு தூண் களுக்கு நடுவில் இயேசு கிறிஸ்துவின் சன்னதி அமைந்துள்ளது . மனதிற்கு இதமான அந்த சூழலில், எனக்கு " அன்பென்னும் மழையிலே அதிரூபன் தோன்றினானே , வைக்கோலில் வந்தொரு வைரமாய் மின்னினானே " என்று அனுராதா ஸ்ரீராம் மிக மென்மையாய் உணர்ச்சி பொங்க பாடிய பாடல் நினைவிற்கு வந்தது .
ரோமாபுரியில் முக்கியமான அம்சம் என்று குறிப்பிட்டு சொல்லபோனால் , அங்கு பழமை மாறாமல் , நினைவுச் சின்னங்களை எப்படி இருக்கிறதோ அப்படி அப்படி அங்கங்கே அழிக்காமல் பாதுகாத்து வைத்துள்ளனர். நகரின் மையப் பகுதியில் கூட பழமையும் புதுமையும் கை கோர்த்து அணிவகுத்து பெருமிதத்துடன் காட்சி அளிக்கிறது .பல்லாயிரம் ஆண்டு களுக்கு முன் கட்டப்பட்ட "Colosseum " என்ற புகழ் மிக்க அரங்கம் , நகரின் மையத்தில் வரலாற்றை பறைசாற்றி கொண்டு கம்பீர மாக உள்ளது . பழமைக்கு உதாரணமாக மட்டுமல்லாது , ரோமாபுரி பேரரசின் வரலாற்றை நினைவூட்டிக் கொண்டே இருக்கிறது . ரோமபுரி, நாகரிகத்திலும், கட்டிடக் கலையிலும், உலகின் பெயர் பெற்ற பழமை யிலும் பழமையானது . அந்த கோலோசியத்தை வியந்து பிரமித்து பார்த்தோம் . அதன் பின்னணி சரித்திரத்தை முழுவதும் விளக்குவதென்றால் , தனியாக ஒரு கட்டுரை எழுத வேண்டியிருக்கும் !
அந்த அரங்கத்தில் போர் கைதிகளை நடுவில் ஒருவரோடு ஒருவரை கொடிய ஆயுதங்களால் சண்டையிடச் செய்து அரங்கத்தில் அமர்ந்து ஆட்சியாளர்கள் வேடிக்கை பார்பார்களாம் .
இந்த அரங்கத்திற்கு ரோமபுரி பேரரசன் "நீரோ" வின் மிக பிரம்மாண்ட மான சிலை யின் பெயரான " colosseus " என்ற லத்தின் மொழி பெயரின், பொருள் படும்படியாக "colosseum " என்ற பெயர் வைக்கப்பட்டது. சுமார் 6 ஏக்கர் நிலப் பரப்புடையது . சுமார் 80000 மக்கள் ஒரே சமயத்தில் அமரும் வசதி பெற்றது. வெளிப்புற சுற்றளவு 1778 அடி , உயரம் 187 அடி . இந்த அரங்கில் ரோமானியர்களின் வெற்றிகளை பறைசாற்றும் வண்ணம் பல்வேறு நாடுகளிலிருந் து பல்வேறு மிருகங்கள் கொண்டுவந்து அடைக்கப்பட்டு வைக்கப்பட்டிருந்தனவாம் . இந்த அரங்கம் 76 நுழைவு வாயிலும் 4 மாடி களும் கொண்டது . 42 ரோமானிய அரசர்களின் முடி சூட்டு விழா இங்குதான் நடைபெற்றதாம் . இங்கு வீர விளையாட்டுக்கள் மல்யுதங்கள் நடைபெற்றன . Gladiator படத்தில் இந்த காட்சிகள் சித்தரிக்கப்பட்டுள்ளது . சந்தர்பம் கிடைத்தால் அவசியம் "Gladiator " படத்தை பாருங்கள்.
Rome நகரை பற்றிய புகழ் பெற்ற வாசகங்கள் :
1) All roads lead to Rome.
2) Nero was fiddling while Rome was Burning
3)One man"s life is not worth Rome
4) Present comes from past, and Past is always present in Rome.
5) Be a Roman while you are at Rome.
6) If there be a hell Rome is built over it.
7) Rome was not built in a day!
மறுநாள் TAXI எடுத்துக்கொண்டு Rome லிருந்து pissa நகரிற்கு சென்றுவந்தோம்.
அன்று July 9, என் பிறந்தநாள். பைசா கோபுரத்தின் மடியில் அமர்ந்து ஆடிப் பாடி, நான் என் பேத்தி கள் ஆர்த்தி, பார்த்தி யுடன் பிறந்த நாள் கொண்டாடியது மறக்கமுடியாத அனுபவம் . என் வாழ்நாளில் ஒரு பிறந்தநாள் USA யில் Neal Armstrong நிலவுக்கு பயண மான Huston நகர NASA அறிவியல் அரங்கத்தில் கொண்டாடினேன் . இப்படி வருட வருடம் பிறந்த நாளை ஒரு புகழ் பெற்ற இடத்தில் கொண்டாடும் வாய்ப்பு கிடைத்தால், அது மறக்க முடியாத தாக அமையுமன்றோ ? அதிலும் குறிப்பிட வேண்டியது என்னவென்றால் Pissa Tower (சாய்ந்த கோபுரம் ) ஓர் உலக அதிசயம் . ஏழு உலக அதிசயங்களில் New wonders உள்பட தாஜ் மஹால் , CN Towers , (Canada ), Empire State Building (USA ), பிசா டவர் , Effil Tower , இதனையும் பார்க்க முடிந்தது என் வாழ்வின் பாக்கியம் என்று கடவுளுக்கு நன்றி செலுத்துகிறேன் .
Pissa Tower என்ற சாய்ந்த கோபுரம் , 1173 ஆம் ஆண்டு கட்ட ஆரம்பித்து , 105 ஆண்டுகள் கழித்து, 1278 ஆம் ஆண்டு கட்டி முடிக்க பெற்ற கோபுரம் இது.
4 மாடி கட்டிவிட்டு, நீண்ட இடை வெளிக்குப் பின்னர், மற்ற 3 மாடி கட்டி பூர்த்தி செய்துள்ளார்கள். இதன் மேலே உள்ள Belfry என்ற மணி தொங்கும் பகுதி, 1360 ஆம் ஆண்டில் தான் கட்டி முடிக்கப் பட்டுள்ளது. கோபுரத்தின் அருகில், ஒரு பழமையான church உள்ளது. சுற்றிலும் பெரிய புல் வெளி திடல். . திடலில் எண்ணற்ற புறாக்கள் கூட்டம். அங்கே நின்று சாய்ந்த கோபுரத்தை கையால் தாங்கி பிடிப்பதை போல் போஸ் கொடுத்து எல்லோரும் புகைப்படம் எடுத்துக்கொண்டார்கள். நாங்களும் தான். !
மதியம் "Yogurt cheese cake " ( with cherries & plums ) என் மகன் வாங்கி வந்தான். பிறந்த நாள் கேக்கை , என் பேத்திகள் எனக்கு ஊட்டிவிட , நான் அவர்களுக்கும் ஊட்டிவிட்டு, Happy Birthday என்று என் பேத்திகள் பாட்டு பாட சந்தோசமாக என் பிறந்த நாளை அங்கு கொண்டாடினோம். என் பேத்திகள் இருவரும் பின்னிஷ் மொழியில் "ஃ பால்யா ஹான்னே ஹோவா " (பிறந்த நாள் வாழ்த்துக்கள்) என்று கூறி என் கையை பிடித்துக்கொண்டு சுற்றி சுற்றி ஆடி மகிழ்ந்தனர். வாழ்கையில் மறக்க முடியாத நாள் அது!

பயணக்கட்டுரை பகுதி 10
பைசா கோபுரம் பார்த்து , பிறந்த நாள் கொண்டாடி , கைகளை சாய்த்து வைத்து புகைப்படம் எடுத்துக்கொண்டு, அங்குள்ள "Hong Kong " என்ற சீன பெண்மணி நடத்தும் ஒரு ஹோட்டலில் மதிய உணவருந்தினோம் . "Fried Rice "(உடன் சிவப்பு மிளகாய் துவையல் - தொட்டுக்கொள்ள) கிடைத்தது. சாப்பிட்டு விட்டு அந்த பெண்மணியிடம் சாப்பாடு நன்றாக இருந்தது என்று கூறிவிட்டு வந்ததில் எனக்கும் மகிழ்ச்சி, அந்த சீன பெண்ணுக்கும் மகிழ்ச்சி !
அந்த உணவகத்தில் நடந்த இன்னுமொரு நிகழ்வு என்னவென்றால், நான் பாத் ரூமீர்க்குள் சென்று ,கதவை தாழ் போட்டுக்கொண்டு , திறக்கத் தெரியாமல் கதவை உடை உடை என்று உடைத்து தான் !. நல்ல வேளை , நான் போட்ட அலறல் சத்தம் கேட்டு , சிறிது நேரத்திலேயே அந்த சீன பெண் வந்து வெளியில் இருந்தவாறே கதவை திறக்க உதவினாள் . நான் வியர்த்து விறுவிறுத்து வெளியே வந்து நிம்மதி பெருமூச்சு விட்டேன் .
Italy யில் தான் piza முதன் முதலாக கண்டு பிடித்தார்களாம் ! எனவே ஒரு ஓட்டலுக்கு சென்ற போது ஒரிஜினல் பிசா சாப்பிட ஆசைப்பட்டு எல்லோரும் பிசா ஆர்டர் செய்தோம். அதுவும் சாதாரண ஓட்டல் இல்லை . ரெம்ப பெரிய ஓட்டல் . விசேஷமாக பிசா வரப்போகிறது என்று ஆவலுடன் காத்திருந்தோம் .
பிசா வருவதற்கு முன்னால் சற்றே கொறிப்பதற்கு Garlic Bread கொடுத்தார்கள் .
அது நான்றாக இருந்தது . அனால் ஆர்டர் செய்த பிசா கருகி , உப்பு தூக்கலாய் , ஒல்லியாய் , ஏதோ வித்தியாசமான ருசியாக வந்தது, எங்களால் ருசித்து சாப்பிட முடியாததால் , பாதி யை தட்டில் வேஸ்ட் செய்து விட்டு ஹோட்டல்காரனை திட்டிவிட்டு ( தமிழில் தான் திட்டினோம்...!) பணத்தையும் கொடுத்துவிட்டு வந்தோம்! (வேறு வழி ?)
உலக அதிசயமான பைசா கோபுரத்தை பார்த்து விட்டு , அந்த மோசமான பிசா வையும் சாப்பிட்டு விட்டு , அடுத்து நாங்கள் பார்க்க சென்ற ஊர் OSTIA ANTICA province of Rome . It was amazing Ruins . Ruins that are not ruined . தமிழில் சொன்னால் அழியா மலிருக்கும் அழிவுச் சின்னங்கள் அது ஒரு port கடற்கரை நகரம் .

பழைமையான OSTIA நகரம்
அங்கே ஒரு நகரமே பாழடைந்த நிலையில் ரோமபுரி கலா சாரத்தை சாட்சி சொல்லிக்கொண்டு காட்சி அளிக்கின்றன ! இடிந்த கட்டை சுவர்கள் பெரிய வீதிகள் கட்டிடங்கள் தூண்கள் மாளிகைகள் பொது கழிப்பிடங்கள் , அரங்குகள் எல்லாமே ரோமாபுரி நாகரிகத்தின் சாட்சி கள் !
பல கிலோ மீட்டர் தூரத்திற்கு அடுத்தடுத்து பாதி பாதி உடைந்த நிலையில் செங்கல் தூண்கள் கட்டை சுவர்கள், உயரமாகவும், குட்டையாகவும் நிற்கின்றன. அவை மழையால் மேலும் சிதைந்து விடாதிருக்க, பாதுகாப்பிற்க்காக மேல் பகுதியில் மட்டும் சற்றே சிமெண்ட் வைத்து தற்போது பூசி உள்ளார்கள் . பார்வையாளர்களுக்கு புரியும் வண்ணம் ஆங்காங்கே விளக்கப் பலகைகள் வைக்கப்பட்டுள்ளன. "இங்கு தான் பொதுக் கூட்டங்கள் நடக்கும்.", " இங்கு வீரர்களுக் கிடையே சண்டை நடைபெறும் இடம்", "இங்கு கிணறு இருந்தது , இங்கு கோவில் இருந்தது, இங்கு விளையாட்டு திடல்" என்று பல்வேறு இடங்களில் எழுதி வைக்கப் பட்டுள்ளது. சுவர் களிலும், தரையிலும், சில கூடங்களில் சித்திர வேலைப் பாடுகள் அழியாமல் இன்னும் இருக்கின்றன. சவுண்ட் அண்ட் லைட் ஷோ , கண்காட்சி குறிப்பிட்ட நேரங்களில் இரவில் நடைபெறுகின்றது. அதில் ரோமானியர்களின் கலாச்சாரம் மற்றும் அந்த காலத்து போர், அந்த சப்தங்கள் , அந்த செய்திகள், படங்களுடன் விளக்கமாக தத்ரூபமாக ஸ்டீரியோ சவுண்ட் இல் வண்ண விளக்குகளுடன் நிகழ்ச்சி காண்பிக்கப் படுகிறது.
முதலில் "என்னடா , போயும் போயும் , இந்த உடைந்த கட்டிடங்களை , குட்டி சுவரை போய் , இவ்வளவு காசு செலவழித்துப் பார்க்கிறோமே, நம்மூரில் இல்லாத, நாம் பார்க்காத, இடிந்த கட்டிடங்களா?" என்றே அலுத்துக் கொண்டாலும் , பின்னர் உள்ளே சென்று, நடக்க, நடக்க, பார்க்க பார்க்க , ஒரே பிரம்மிப் பாயிற்று . எவ்வளவு தூரம் நடந்தாலும், கால் வலியும் தெரியவில்லை , அலுப்பும் தட்டவில்லை . அதிலே ஒன்றிப் போய் . அந்த காலத்து ரோமானிய வீதிகளில், அந்த பழைமையான OSTIA நகரத்திற்கே மானசீக மாக சென்று விட்டோம்!. அந்த இடங்களில் சில நம் தமிழ் திரைப் படங்களில் வந்தது போன்ற ஞாபகம். ஏதோ ஒரு படத்தில் ,பாடல் காட்சி களுக்கிடையே பார்திருக்கேறேன் என்று நினைக்கிறேன் . அதை முழுவதுமாக சுற்றிப்பார்க்க ஒருநாள் போதாது. கால் வாசி இடத்தில் கூட எங்கள் கால் தடம் பதிந்திருக்காது !, அந்தக் கடல் போன்ற இடப் பரப்பில், எங்களால் முடிந்தவரை சுற்றிப் பார்த்துவிட்டு , வேண்டிய இடங்களில் மறக்காமல் "கிளிக்" பண்ணிக்கொண்டு , அடுத்தார் போல் நாங்கள் பார்க்க சென்ற இடம் , Ostica New town & beach .
இந்த ostia new town க்கு காரில் செல்லும் போது வழி எங்கிலும் மிக தூய்மையாகவும் தெருக்கள் அழகாகவும் வீடுகள் பங்களா கள் அழகானவையாகவும் இருந்தன. என் மகன் 'சல்' லென்று அதி வேகமாக கார் ஓட்டுவதற்கு, மிகவும் தோதாக இருந்தது. அங்காங்கே பூத்துக் குலுங்கும் மரம், செடி, கொடிகளும் இருந்தன. அப்போது தண்ணீர் பாட்டில் இல்லாததால் , ஒரு வீட்டின் முன்னால் காரை நிறுத்தி அவர்களிடம் தண்ணீர் கேட்டோம். இரண்டு பாட்டில் பிர்ட்ஜில் இருந்த குளிர்ந்த நீரைக் கொடுத்தார் அந்த வீட்டு உரிமையாளர் . நாங்கள் பணம் கொடுத்ததை வாங்க மறுத்து மேலும் தண்ணீர் வேண்டுமா? என்று கேட்டார்! அந்த நெகிழ்வான சம்பவம் மறக்க முடியாத ஒன்று. நாம் ஒருவருக்கு உதவினால், வேறு ஒருவர் மூலமாக நமக்கு உதவி கிட்டும் என்று அப்பா கூறியது எனக்கு இப்போது நினைவிற்கு வந்தது.
அந்த மனிதர் வீடு ஒரு Farm House ; அதற்கு அருகிலேயே பல ஏக்கர் நிலப் பரப்பில் சூரிய காந்தி செடிகள் பயிறிட்டிருந்தார் . அவர் அனுமதி பெற்று அந்த பூத்துக் குலுங்கும் சூரிய காந்தி தோட்டத்திற்குள் சென்று புகைப்படம் எடுத்துக்கொண்டோம். என் பேத்தி பூக்களை பிடித்துக்கொண்டு போஸ் கொடுத்து படம் எடுத்துக்கொண்டாள் . அந்நியன் படத்தில் வந்த சீன் படம் போல் அது அமைந்தது. வழியில் பல வீடுகளின் முன் "Bed & Breakfast " என்று போர்டு போட்டிருந்தது . சுற்றுலா பயணிகள் தங்க இந்த வீடுகள் வாடகைக்கு விடப்படுகின்றன போலும் . அந்த மாதிரி வீடுகளின் வெளியில் தோட்டத்தில் வட்டமாக அமர்ந்து தேநீர் அருந்திக்கொண்டிருந்த சிலர் எங்களை பார்த்து புன்முறுவலுடன் கையசைத்தது , எனக்கு மகிழ்ச்சியாக இருந்தது.
Ostia beach மிகவும் தூய்மையாக இருந்தது. கடல் அலைகளில் (North Atlantic ocean ) நீண்ட நேரம் காலை நனைத்துக் கொண்டிருந்தேன். புத்துணர்ச்சி பெற்று அந்த அனுபவம் சுகமாக இருந்தது. அடிக்கடி பார்த்த, சென்னை மெரீனா, கன்னியா குமரி, நினைவில் தோன்றி மறைந்தன . என் கணவர், மகன், பேத்திகள் அனைவரும், ஆசை ஆசையாக கடலில் குளிக்க ஆரம்பித்து விட்டனர். அலைகள் மிகுதியாய் இல்லை. இருப்பினும், அது மாலை நேரமானதால் , குளித்துவிட்டு வெடு வெடு வென்று நடுங்கிக் கொண்டிருந்த , அவர்கள் கரைக்கு வந்து டிரஸ் மாற்றிக் கொண்ட பின்னர் தான் எனக்கு நிம்மதி!
அப்போது, மூன்று இத்தாலியப் பெண் மணிகள், ஒரு நீளமான பெஞ்சில் அமர்ந்து, காற்று வாங்கிக் கொண்டிருந்தனர் .கையில் கடலையைக் கொரித்தவாரே எங்கள் பேத்திகள் , என் மகனுடன் பந்தைத் தூக்கி போட்டு விளையாடுவதை எல்லாம் வேடிக்கை பார்த்துகொண்டு , அவர்கள் வைத்திருந்த சிறிய கேமரா வில், இதையெல்லாம் அமைதியாக படமும் எடுத்துக் கொண்டிருந்தனர். இவற்றையெல்லாம் பார்த்துக்கொண்டிருந்த எனக்கு , அவர்களுடன் ஏதாவது நாலு வார்த்தை பேசியே ஆக வேண்டும் என்ற ஒரே தவிப்பு.
அவர்கள் மூன்று பேரும் ஒரே மாதிரி வெள்ளை பேண்ட் வெள்ளை சட்டை அணிந்திருந்தது என்னை வெகுவாக ஈர்த்தது . அவர்கள் மூவருக்கும், சுமார் 45 அல்லது, 50 வயதுக்குள் இருக்கலாம் . அவர்கள் மூவரும் உறவினர்களோ , சினேகிதர்களோ, தெரியாது . ஆனால் பார்க்க நல்லவர்களாகத் தெரிந்ததால் அருகில் சென்று " we are from India " என்று கூறி அறிமுகம் செய்து கொள்ள முயற்சித்தேன் . "Oh " என்று தலை அசைத்தார்கள் , ஆனால் திருப்பி என்னோடு பேச்சுக் கொடுப்பதற்கு, அவர்களுக்கு சுத்தமாக ஆங்கிலம் தெரியவில்லை . என் மகனை பார்த்து கைகளினால் சைகை செய்து , "Hawaian " என்று கூறிச் சிரித்தார்கள் . அதாவது என் மகன் பார்பதற்கு வாட்ட சாட்டமாக ஹவாயியன் போல இருக்கிறானம்!. மேலும் என் மருமகள் போட்டிருந்த சுரிதார் , என் சேலை , என் பேத்திகள் போட்டிருந்த Frock , எல்லாவற்றையுமே தொட்டு தொட்டு பார்த்து "nice ,nice " என்று கூறி மகிழ்ந்தனர் . என் மருமகள் அணிந்திருந்த கொலுசு , செயின் ,தோடு , எல்லாவற்றையும் தொட்டு தடவி பார்த்து , எங்கள் நெற்றியில் வைத்திருந்த sticker பொட்டை கூட மெதுவாக தொட்டுப் பார்த்து "Beautiful , Beautiful " என்று கூறினர் . அவர்கள் இப்போது தான் முதன் முதலாக இந்தியர்களை பார்த்திருப்பார்கள் போலும் .அவர்களுக்கு தெரிந்த ஓரிரு ஆங்கில வார்த்தைகளை மட்டும் கூறினாலும் , அது எங்களுக்கு மகிழ்வை உண்டாக்கியது . அவர்களுடன் மூவரும் கை குலுக்கி , மறக்காமல் புகைப் படமும் எடுத்துக்கொண்டோம் . கிளம்பும் போது அவர்கள் அவர்கள் என் கன்னத்தை தொட்டு அன்புடன் வருடியது இன்னமும் Flash back ஆக என் நினைவில் நிற்கிறது . இனி என்று அந்த ரோமாபுரி ராணி களைக் காண்பேனோ?. "எந்த நாட்டில் எந்த வூரில் என்று காண்போமோ ? " என்ற பாடல் வரிகளை என் மனம் அமைதியாக பாடுகின்றது . எப்போதாவது நினைவு வந்தால் புகை படங்களை புரட்டிப் பார்த்து எல்லோரும் நன்றாக இருக்கட்டும் என்று வேண்டிக்கொள்வேன்.
இத்தாலி நாட்டிலும் , பிரான்ஸ் நாட்டிலும் , நம் வட இந்திய இளைஞர்கள் பலர் உணவகங்களிலும் , மளிகை கடைகளிலும் பணியாற்றுவதை பார்க்க முடிந்தது . அவர்களுடன் பேச்சுக் கொடுத்து பார்த்த போது , அவர்கள் அங்கே கல்லூரிகளில் மேல் படிப்பு படிப்பதாகவும் , படிப்பு செலவை ஈடுகட்ட , பகுதி நேர பணி செய்வதாகவும் கூறினர் . அவர்கள் வாழ்க்கை பிரகாசிக்கட்டும் .
இடையில் ஒரு செய்தியை எழுத மறந்து விட்டேன். நாங்கள் பாரீசில் உள்ள Eiffel Tower சென்ற போதும் சரி, மற்றும் Italy யில் உள்ள Pizza Tower சென்ற போதும் சரி, அது என்னவோ சொல்லி வைத்தாற்போல், ஒரே சைனாகாரக் குடும்பத்தினரை (கணவன், மனைவி, அவர்கள் டீன்-ஏஜ் பெண், பையன்) பார்க்கமுடிந்தது.
'Eiffel Tower' இல் 'No - graffiti Please ' என்று ஆங்காங்கே எழுதியிருந்தாலும், பலர் அதைப் படித்தும், அதைச் சிறிது கூடச் சட்டை செய்யாது, தாங்கள் பெயர்களை அந்த அந்தக் கைப்பிடியில், எழுதி வைத்துக் கொண்டிருந்தனர். அப்போது அந்தச் சீனாக்காரர் " This is wrong" என்று கூறினார். மேலும் அவர், தாங்கள் மலேசியாவில் லிருந்து tour வந்திருப்பதாகக் கூறினார். அவர் கைகூப்பி விடை பெறும் போது எங்களைப் பார்த்துக் கூறிய வார்த்தை , " ஓம் ஷாந்தி, ஷாந்தி" என்பதாகும். சிங்கப்பூர், மலேசியாவில் வாழும் சீனர்கள், மலேஷியர்கள், நம்மவர்களுடன் பழகி ஒரு சிலர் தமிழில் செல்லமாக
உரையாடுகின்றனர். பலர் ஒரு சில தமிழ் வார்த்தைகளையாவது தெரிந்து வைத்திருக்கின்றனர். அதன் வெளிப்பாடு தான் அந்தச் சீனாக்கரார் கூறிய
வார்த்தைகள் . அவர் , உங்கள் கோயில்களுக்கெல்லாம் நான் செல்வ துண்டு," என்று மேலும் கூறியது எங்களுக்கு மகிழ்ச்சியை உண்டு பண்ணியது.
மலேஷியா “பத்து கேவ்ஸ்” (முருகன் கோயில் - கோலாலம்பூர் ) பினாங்கு தண்ணீர் மலை முருகன் கோயில் செல்லாத சீனர் உண்டா? பினாங்கில் தைப் பூசத்தன்று காவடி எடுக்கும் சீனர்கள் பலர் உள்ளனரே. ஆக அவர்கள் எல்லாரும் இயல்பாகவே ஒரு சில நல்ல தமிழ் வார்த்தைகளைத்
தெரிந்து வைத்திருப்பது நல்லதுதானே.
பிரான்ஸ், இத்தாலி தேசமெல்லாம் சுற்றிப் பார்த்து விட்டு ஃபின்லாந்து திரும்பி வந்த போது, Latwia என்ற Latin - லத்தின் மொழி பேசும் தேசத்தில்
Riga என்ற ஊரில் இறங்கி, அங்குள்ள சிறிய Airport இல் சில மணி நேரங்கள் தங்கி விட்டு, அடுத்த flight இல் பின்லாந்து திரும்பி வந்தோம்.
அங்கு Riga ஏர்போர்ட்டில் உள்ள உணவுவிடுதியில் பிஸா வாங்கிச் சாப்பிட் டோம். அற்புதமாக இருந்தது. அது தான் ஏற்கனவே எழுதியிருக்கேனே. அதாவது , பிஸா கண்டுபிடிக்கப்பட்ட இத்தாலியில் ஏனோ நாங்கள் சாப்பிட்ட
உணவகத்தில் பிஸா மிக மோசமாகயிருந்தது என்று, அந்த இத்தாலிய உணவின் (formula) அடிப்படையை நன்கு தெரிந்து செய்யப்பட்ட
இந்த வேற்றூரில் இவ்வுணவு தேவாமிர்தமாக இருந்தது. ஆக இதிலிருந்து நாம் தெரிந்து கொள்ள வேண்டியது என்ன வெனில், எந்த ஒரு செயலையுமே நாம் சிரத்தை எடுத்துச் செய்தால் அது சமையலாக இருக்கட்டும், ஓவியமாக இருக்கட்டும், பின்னலாக இருக்கட்டும், எழுத்தாக இருக்கட்டும் நிச்சயம் அது சோபிக்கும் என்பதே. இன்னும் ஒரு சில சுவாரஸ்யமான செய்திகளைத் தங்களுடன் பகிர்ந்து கொண்டு, இந்த என் நீண்ட கட்டுரையை நிறைவு செய்கிறேனே.
=====================================================================
என் இனிய பின்லாந்து நினைவுகள் ...
- பயணக்கட்டுரை பகுதி 11
நாங்கள் ஃபின்லாந்திலிருந்து ஊர் சுற்றிப் பார்ப்பதற்காகச் (France, Italy) சென்ற போது என் மகனுடன் பணியாற்றும் மிக உயரமான சென்னையைச் சேர்ந்த பார்த்திபன் (கலைமாமணி விருது பெற்ற நடிகர்- அமரசிகாமணியின் மைந்தன் தன் அப்பா, அமர சிகாமணியைப் போலவே, தோற்றமுள்ளவர்) என் மகன் மீன் தொட்டியில் சிரத்தையுடன் வளர்த்து வரும், வண்ண வண்ண மீன்களுக்கு மறவாமல் தினம் தோறும் உணவு (Fish food) அளித்தார். இவர்கள் இல்லம் என் மகன் வீட்டிற்கு அருகாமையில் தான் உள்ளது. விரைவில் இவர் அழகான பெண்ணை மணம் செய்ய விருக்கிறார்.
Advance வாழ்த்துக்கள். இவர் முதன் முதலில் கார் வாங்கியவுடன்(அது ஒரு race car ) செய்த முதல் காரியம், என்னையும், என் மகனையும், பேத்திகளையும் அந்தக் காரில்அமரச் செய்து, பல கிலோ மீட்டர், மிக வேகமாக ரவுண்டு வந்தது தான்!
அடுத்தாற்போல் நாங்கள் சந்தித்து வேந்தன்பட்டி நாகராஜ் - அலமு தம்பதி களை, அவர்கள் 4 வயதுப் பையன் கெளசிக், மற்றும் 1 வயதுப் பையன் கார்த்திக்.
அந்த 4 வயதிலேயே அந்த கௌசிக் என்னமாய் Computer games விளையாடுகிறான்?! . இந்தக் காலத்துப் பிள்ளைகள் பிறக்கும் போதே எல்லாம் தெரிந்து கொண்டு, வந்து பிறந்து விடுகின்றனர் . Very smart indeed.
ஆ...! எழுத மறந்து விட்டேனே!. அவர்கள் வீட்டுப் பொன் நிறமான, பஞ்சு பஞ்சான வடையும், மல்லிப்பூ இட்லியும் மணக்கும் சாம்பாரும் "சூப்பர் ஓ ...சூப்பர்". எங்களுக்கு அறுசுவை விருந்தளித்த அலமுவிற்கு நன்றி. அடையாறு ஆனந்த பவனை நினைவு படுத்தியது, அலமுவின் கைவண்ணம்!.
அரவிந்த்-அனிதாவின் பையன் மிதூன் முதல் பிறந்த நாளுக்கு ஒரு உணவகத் திற்குச் சென்றிருந்தோம். (July 27, 2009 ல்) குழந்தைக்கு நகையெல்லாம் போட்டு, பிரமாதமாக சட்டையெல்லாம் போட்டு, கேக் எல்லாம் வெட்டி, குழந்தைக்கு ஊட்டி விட்டு பாட்டெல்லாம் பாடி,நன்றாக கொண்டாடினர் . நாங்கள் எல்லாரும் உணவருந்திய பின்னர், ( அங்கேயும், எனக்கும் இன்னும் ஒரு சிலருக்கும்,Veg food கிடைத்தது!) சிறிது நேரம் அங்கு வந்திருந்தோரிடம் உரையாடினோம். அப்போது தெரிந்து கொண்ட, காதில் விழுந்த சில சுவையான தகவல்கள்.
அங்கு ஒரு மூன்று வயது "புஸ் புஸ்" என்ற முடியுடைய, குண்டுத் தெலுங்குப் பையன் - பெயர் சித்தார்த் (பையனின் அப்பா, அம்மா பெயர் தற்போது நினைவில் இல்லை. அந்தப் பையனைப் பற்றி அவர்கள் அம்மா கூறியது.
"நாங்கள் 6 மாதத்திற்கு முன்னர் பாலர் பள்ளியில் இவனை சேர்த்தோம். அதிலிருந்து என்ன ஆயிற்று என்றால் சித்தார்த் ஃபின்னிஷ் மொழியிலேயே வீட்டிலும் பேச ஆரம்பித்துவிட்டான், நாங்கள் தெலுங்கில் பேசினாலும், அதைப் புரிந்து கொண்டு ஃபின்னிஷ் மொழியில் தான் பதில் கூறுவான். தெலுங்கே தெரியாமல் போய்விடுமோ என்று நாங்கள் பயப்பட ஆரம்பித்துவிட்டோம். சமீபத்தில் நான் இரண்டு மாதம் சித்தார்த்துடன் ஹைதராபாத் சென்று வந்தேன். அங்கே என் உறவினர் பிள்ளைகள், அக்கம் பக்கத்து வீட்டுப்பிள்ளைகள் என எல்லாருடனும் சித்தார்த் விளையாடியபோது கொஞ்சம் கொஞ்சமாகத் தெலுங்கு பேசத்துவங்கி, இப்போது நன்றாகத் தெலுங்கு பேசுகிறான்," என்று மனநிறைவுடன் சித்தார்த் அம்மா கூறினார்கள்.
நம்மவர்கள் வீட்டுப் பிள்ளைகள் (அமெரிக்கா, இங்கிலாந்து போன்ற நாடு களிலேயே பிறந்து வளர்ந்த பிள்ளைகள் பலர் ஆங்கிலம் மட்டுமே பேசுவதும், தமிழ் சுத்தமாக எழுதப் படிக்கத் தெரியாது இருப்பதும் வருத்தமான
செய்தி தான். பெற்றோர்கள் தான், வீட்டில் மெனக்கட்டு தாய்மொழியைப் பிள்ளைகட்குக் கற்றுக் கொடுக்க வேண்டும். நம் இனப் பெண்கள் பலர், அங்கே அலுவலகம் சென்று, பெரிய பெரிய பணிகளில் எல்லாம் பணியாற்றிக் கை நிறையச் சம்பாதிக்கிறார்கள், வரவேற்போம். அதே சமயம் பிள்ளைகட்கு
ஓய்வு நேரத்தில், அதற்கென சிறிது நேரத்தை ஒதுக்கி, நம் ஊரிலிருந்து தமிழ்ப் புத்தகங்கள் வாங்கிக் கொண்டு சென்று, அதன் மூலம், நம் பிள்ளைகட்கு சிறுவயதிலிருந்தே, தமிழ் பயிற்றுவிக்கத் துவங்கினால், நிச்சயம் வெளி நாட்டில் வாழும் நம் பிள்ளைகளும், நம் தாய் நாட்டிற்கு வரும் போது அப்பத்தா, ஆயா, ஐயாவுடன் தமிழிலேயே உரையாடுவார்கள் அல்லவா?. நம் தாய்மார்கள் கவனத்திற்கு இதைக் கொண்டு வந்திருக்கிறேன். செய்வார்களா?
======================================================================
என் இனிய பின்லாந்து நினைவுகள் ...
பயணக்கட்டுரை பகுதி 12
-
அடுத்து இன்னொரு முக்கியமான விஷயம்.மிதுன் பிறந்த நாள் விழாவில் ஒரு பின்னிஷ் தம்பதிகளையும் அவர்களின் ( சுட்டி டிவி யில் வரும் டோராபொம்மை போன்ற hair-cut உடன் கூடிய ஒரே மாதிரி கட்டம் போட்ட ஊதா frock அணிந்தத) சுமார் 8 வயது,10 வயது பெண்களையும் பார்க்க நேர்ந்தது. அந்தத் தம்பதிகளுடன் உரையாடிய போது அவர்கள் கூறியது, “We are not married, but we are living together for the past twelve years. We have no regrets, we are happy”, எனக்கு வியப்பையளித்தது .
இந்த மாதிரி “living together without marriage” என்பது வெளிநாட்டில் சகஜமாக நடந்து வருகிறது. இந்த கலாச்சாரத்தை நினைத்து ஒரு புறம் வேதனையாக இருக்கிறது. இருப்பினும் , 'திருமணம்' என்ற பந்தத்திற்குக் கட்டுப்படாவிடினும், அவர்கள் இருவரும் கடைசிவரை பிரியாது,. மன மொத்த தம்பதிகளாக, அந்த நீலநிறக் கண்களைடைய , டோரா பொம்மை போன்ற இரண்டு அழகான பெண்களுக்கு சிறந்த தாயாக, சிறந்த தந்தையாக இருந்து நல்லதொரு வாழ்க்கை வாழட்டுமே என்று மனதிற்குள்ளேயே வேண்டிக்கொண்டேன்.
நம் நாட்டிலும் மெள்ள மெள்ள வடநாட்டில் ஒரு சில இடங்களில் இந்த "living together" கலாச்சாரம் பரவி வருவதாகக் கேள்விப்பட்டு வேதனை யடைந்தேன். நம் நாட்டுக் கலாச்சாரத்திற்கு இதெல்லாம் ஒத்து வருமா? மேல் நாட்டினரிடமிருந்து நல்லவற்றை மட்டும் எடுத்துக் கொள்வோம். பின்பற்றுவோம். இதெல்லாம் வேண்டாமே.
அந்தப் பிறந்த நாள் விருந்தில், அங்கு வந்திருந்த Finish இளைஞர் (என் மகனுடன் பணியாற்றுபவர்) என் பேர்த்திகள் ஆர்த்தி, பாரதி யின் பெயரைக்
கேட்டவுடன் அந்தப் பெயர்களுக்கு அர்த்தம் என்ன என்று கேட்ட போது, என் மகன் Aarthi means light, Bharathi means Goddess for Education. ஆர்த்தி என்றால் விளக்கு, பாரதி என்றால் கல்விக்குத் தெய்வம், என்று அர்த்தம் கூறியவுடன் "Ok, Really great', என்று அந்தப் பையன் கூறியது மகிழ்வாக இருந்தது. இதே போல் மற்றுமொரு பினிஷ் பெண்மணி , "Aarthi means light" என்று கேட்ட மாத்திரத்திலேயே " YAH ... She looks like sun shine " என்று கூறியது நினைவிற்கு வந்தது .
பிறந்தநாள் கொண்டாட்டம் எல்லாம் முடிந்து (27.7.2009 அன்று) எல்லாரிடமும் Bye சொல்லிவிட்டு இரவு வீட்டிற்கு வந்து எல்லாம் Pack பண்ணி மறுநாள் தாயகம் திரும்பிவந்தோம். கடைசியாக ஒன்று ! , அந்த "சிவா" வைப் பற்றி எழுதாவிட்டால் என் இந்தக் கட்டுரை முழுமை பெறாது!!. என் மகன் வீட்டிற்கு மிக அருகிலேயே "சிவா (siva)" என்றொரு மளிகைக் கடை இருக்கிறது. அங்கே தினந்தோறும் நானும் என் பேர்த்தியு மாகப் போய் Bread, Butter, Jam பால் மற்றும் காய்கறி, மளிகைச் சாமான்கள் வாங்கி வருவதுண்டு. அங்குள்ள தரமான fresh ஆன சாமான்களும் பிடித்திருந்தன. பணியாற்றும் பெண்களையும் பிடித்திருந்தது. முக்கியமாக 'சிவா' என்ற அந்தப் பெயரும் பிடித்திருந்தது. அதென்ன, பின்லாந்து நாட்டில் நம் ஈசன் பெயர், அந்த மொழியில் 'சிவா'
என்றால் என்ன அர்த்தம். தெரியாது. ஆனால் அடிக்கடி 'சிவாவுக்குப் போவோமா' அப்பத்தா என்று ஆர்த்தி கூப்பிடும் போது மகிழ்ச்சியாக இருக்கும்.
சிவாவிற்குப் பக்கத்திலேயே முடி திருத்தும் கடை பற்றி ஏற்கனவே எழுதியுள்ளேன். இங்கு பெண்கள் தான் பல இடங்களில் முடி வெட்டி விடுகின்றனர். என் பேர்த்திகள் இருவரையும் Appointment உடன் என் மருமகள் Saloon ற்குக் கூட்டிச் சென்ற போது, நானும் உடன் சென்றேன். அது ஒரு சின்ன கண்ணாடிக் கதவுகளுடன் (4 பக்கங்களிலும் கூடிய சுத்தமான அறை. அங்கு விளையாடுவதற்கு ரப்பர் மற்றும் மரப் பொம்மை களும், படிப்பதற்கு ஃபின்னிஷ் நூல்களும், குடிப்பதற்கு நல்ல தண்ணீரும் வைக்கப்பட்டிருக்கின்றன.
என் பெரிய பேர்த்திக்கு அந்த அம்மையார் முடி வெட்டும் போது, சின்னப் பேர்த்தி பொம்மைகளுடன் விளையாடிக் கொண்டிருந்தாள். நாங்கள் வழுவழுப்பான அந்த Finnish புத்தகங்களை புரட்டிப் படம் பார்த்துக் கொண்டிருந்தோம்.
வேறு என்ன செய்வது, Finnish மொழி தான் தெரியாதே) Finnish மொழியில் எனக்குத் தெரிந்த ஒரே வார்த்தை "கீட்டோஸ்" எந்தக் கடைக்குச் சென்றாலும், நம்மிடம் பில்லுக்கான பணத்தைப் பெற்றுக்கொண்டவுடன், அவர்கள் மெல்லிய புன்முறுவலுடன் கூறும் ஒரே வார்த்தை "கீட்டோஸ்" இந்த வார்த்தைக்கு அர்த்தம் "நன்றி".
முடிதிருத்தும் அம்மையார் 2 பிள்ளைகளுக்கும் 20 Euro 1300 ரூபாய்) பெற்றுக் கொண்டார். பழக்க தோஷத்தினால், (நம்மூரில் பேரம் பேசிப் பழக்கம் சற்றுக் குறைத்து வாங்கிக் கொள்ளலாமா என்று நான் கேட்டுப் பார்த்தற்கு "No" என்று ஒரே வார்த்தையில் பதில் கூறி, அவர் கேட்ட தொகையைப் பெற்றுக்
கொண்டு தான் ஆளைவிட்டார். அந்த அம்மையார். நான் நூலகத்திலிருந்து பல ஆங்கிலப் புத்தகங்கள் எடுத்துப் படித்தது ஒரு இனிமையான நிகழ்வு, தினம்தோறும் அரை மணி நேரம் நடந்து சென்று அந்த நூலகத்திலிருந்து எனக்குப் பிடித்த புத்தகங்களை எடுத்து வந்து படிப்பதை ஒரு வழக்கமாக வைத்திருந்ததால், அந்நூலகத்தில் பணி புரிந்த அந்த இளைஞன் செபாஸ்டியன், மற்றும் அந்தப் பெண்மணிகள் அனைவருமே எனக்கு இனிய நண்பர்களாகிவிட்டனர். அவர்களிடமிருந்தெல்லாம் விடைபெற்றுக் கொண்டுதான் தாயகம் திரும்பி வந்தேன்.
அங்கு படித்த ஒரு புத்தகத்திலிருந்து எனக்குப் பிடித்த ஒரு பகுதியை எழுத விரும்புகிறேன். அப்புத்தகத்தின் பெயர் "Leading the life times". "The point of earning money is different from person to person. Some people say, " Money is the cause of all evil, but its not so, Its the love of money, that is the cause of all evil." when money is earned just, normally and ethically and spent just its good. தங்களுக்கு இந்த வரிகள் பிடித்திருக்கும் என்று நம்புகிறேன்.
ஆர்த்தி, பாரதி மற்றும் என்னுடனும் குறும்புச் சேட்டைகள் செய்து என் சேலை யையெல்லாம் பிடித்திழுத்து விளையாடிய அந்தச் சின்னஞ்சிறு ரோஸ் நிற ரேக்கா, இன்க்கா, குண்டு குண்டு நிக்கோலா, ஒரு நாளைக்கு ஒரு தலைப் பின்னலுடன், ஒவ்வொரு ஹேர் கிளிப்புடன் வந்து விளையாடும் ஒலிவியா, அந்த 80 வயதுப் பாட்டி என்னைப் பார்க்கும் போதெல்லாம் கையசைக்கும் மூதாட்டி) குண்டு நிக்கோலாவின் அப்பா, அம்மா (wish you all the best என்று வாழ்த்தியவர்கள்) கன்னத்தைத் தொட்டால் சிணுங்கும் நிக்கோலாவின் ஒரு வயது தம்பி, அந்த ஆப்பிரிக்கத் தம்பதிகள் (கணவர் from Africa மனைவி Finnish காரப் பெண்மணி. கணவர் Bus driver ஆகப் பணியாற்றுவர்) மற்றும் நான் சந்தித்த பல அன்பு உள்ளங் களையும் என்னால் ஒரு போதும் மறக்க இயலாது. என் மகன் இல்லத்தையும், அங்கே முன்னால் இருந்த மிகப் பெரிய பச்சைப் பசேலென்ற திடலையும். அந்தப் பூத்துக் குலுங்கும் செடி கொடிகளையும் வண்ண வண்ண மலர்களையெல்லாம் இந்த ஜென்மத்தில் என்னால் மறக்க இயலாது.
=======================================================================
என் இனிய பின்லாந்து நினைவுகள் ...
பயணக்கட்டுரை பகுதி 13
-
“ஏதோ ஒரு பாட்டு என் காதில் கேட்கும்

கேட்கும் போதெல்லாம்
சில ஞாபகங்கள் தாலாட்டும்
நான் சுவாசிக்கும் மூச்சினிலே,
இந்த ஞாபகங்கள் கலந்திருக்கும்
ஞாபகங்கள் மழையாகும்
ஞாபகங்கள் குடையாகும் "
என்ற திரைப்படப் பாடல் வரிகள் என் காதில் ரீங்காரமிடுகின்றன.
“மக்கள் நம் சொந்தமே
உலகம் நமதாகுமே
இது கவிவேந்தன் சொன்னதே”
என்று நம் கவியரசு கண்ணதாசனின் வரிகளும் நினைவிற்கு வருகின்றன.
நான் இதுவரை ஜெர்மனியின் தலைநகரமான Frankfurt Airport ஐ 8 முறை கடந்து செல்லும்படி நேர்ந்துள்ளது. ( இரண்டு முறை USAசெல்லும் போதும், திரும்பி வரும்போதும், மற்றும் இரண்டு முறை Finland சென்று திரும்பி வந்தபோதும் )
Frankfurt Airportல் பலமணி நேரங்கள் தங்கும் சூழ்நிலை வந்துள்ளது. Frankfurt Airport என்பது மிகப் பிரமாண்டமானது. நம் முதல் flight இலிருந்து இறங்கி அவர்கள் குறிப்பிட்ட இடத்திற்கு வேகவேகமாக நடந்து அந்த குறிப்பிட்ட இடத்தில் அமர்ந்து விட்டால் பின் நிம்மதிப் பெருமூச்சுவிடலாம். அதுவரைக்கும் படும் அவஸ்தை. ஒவ்வொருத்தரிடமும்
கேட்டுக்கேட்டுப் போய்ச் சேர்வதற்குள் அப்பாடா என்றாகிவிடுகிறது. ஜெர்மனியில் flightல் ஏறியவுடன்,

"ஜெர்மனியின் செந்தேன் மலரே,
தமிழ் மகளே
பெண்ணே சிலையே,”
என்ற பாடல் வரிகள் அந்த 6 முறையும், அந்த தேசத்தின் சிறப்பைக் குறித்துப் பாடுவது போல் தோன்றும்.
இன்னொன்றை எழுத மறந்துவிட்டனே.
அதாவது, " tourist bus களில் head-phone மூலம் நாம் அந்த ஊர் பற்றிய விவரங்கள் தெரிந்து கொள்ளலாம்", என்று கூறினேன் அல்லவா?, அதில் ஒரு வேடிக்கை என்னவெனில், எல்லார் காதிலும் head-phone stand still ஆக இருக்கும். ஆனால் அது என்னவோ என் ராசி, எந்த head-phoneம் என் காதில் fixed ஆக நிற்கவில்லை!!. வேறு வழி? head phone ஐக் காதில் வைத்து அழுத்திப் பிடித்துக் கொண்டு தான் கடைசி வரை explanation கேட்டுக்கொண்டு வந்தேன். ஆனால் அந்த busகளில் வந்த சுற்றுலாப் பயணிகள் யாரும் என்னை வினோதமாகவெல்லாம் பார்க்கவில்லை!
நான் சிறுமியாக இருந்த போது சிங்கப்பூரில் 9 ஆண்டுகள் வசித்துள்ளேன். USA, Finland, Sweden, Estonia, France, Italy, Malaysia எல்லா நாடுகளையும் இறையருளால் கண்டுகளிக்கும் பேறு பெற்றுள்ளேன். நம் தாயகத்தில் காஷ்மீரிலிருந்து கன்னியாகுமரி வரை முக்கியமான கோயில்கள், மலை வாசஸ்தலங்கள், சுற்றுலா தலங்கள் எல்லாமே பார்த்துள்ளேன். நம் தாஜ்மஹாலை இரண்டு முறை பார்த்து, அந்த சலவைக் கற் களால் ஆன மிகப் பெரிய தூண்களையெல்லாம் தொட்டுத் தடவிப் பார்த்து,எப்படி ஷாஜஹான் இப்படி ஒரு காலத்தால் அழியாத நினைவுச் சின்னத்தை , தன் காதல் மனைவி மும்தாஜிற்கு யமுனை ஆற்றின் அருகில் கட்டினார், என்று வியந்திருக்கிறேன்.

நம் தாஜ்மஹாலை (உலக அதிசயங்களுள் ஒன்றான) பெளர்ணமியன்று, அந்தத் தங்க நிலவொளியில் காணக் கண் கோடி வேண்டும்.
அதே போல் ஜெய்ப்பூர் மாளிகையின் மிக நுண்ணிய சித்திர வேலைப்பாடுகள்
(geometrical design) நம்மை அசர வைக்கின்றன.
ஆக அந்தக்காலத்திலேயே பல நுட்பங்களை, கலைகள், ஓவியங்கள், எல்லாவற்றிலும் தேர்ச்சி பெற்ற விற்பன்னர்கள் நம் நாட்டில் இருந்திருக்கிறார்கள் என்பதற்கு, இக்கட்டடங்கள் எல்லாம் தக்க சான்று அல்லவா ? ஆக Eiffel Tower, Pizza Tower, Taj Mahal என மூன்று உலக அதிசயங்கள் பார்த்து விட்டேன். பாக்கி நாலும் பார்ப்பேனா??. காலம் தான் பதில் சொல்லும்!!.
“ சின்னச் சின்ன ஆசை
சீனப் பெருஞ்சுவரைப் பார்க்க அசை "
சீனப் பெருஞ்சுவர் great wall of china) உலக அதிசயங்களுள் ஒன்றல்லவா?
Pizza Tower, Eiffel Tower ஐ பார்க்கும் போது, ஜீன்ஸ்' படத்தில் பிரசாந்த், ஐஸ்வர்யா ராய் இருவரும்
"பூவுக்குள் ஒளிந்திருக்கும் கனிக் கூட்டம் அதிசயம்
வண்ணத்துப் பூச்சி உடம்பின் ஓவியங்கள் அதிசயம்...."
என்று ஒயிலாய், மயிலாய் ஆடுவது, விதவிதமாய் உடையணிந்து
பாடுவது, நினைவிற்கு வந்தது. ஊருக்கு வந்தவுடன் மறுவாரமே TVயில் ஜீன்ஸ் படம் போட்ட போது, முழுப்படத்தையும் மகிழ்வுடன் பார்த்தேன். இதுவரை என் பயணக் கட்டுரையை பொறுமையாகப் தொடர்ந்து பல மாதங்கள் படித்த தங்கள் அனைவர்க்கும் இக்கட்டுரையை நல்ல விதமாக வெளியிட்ட ஆசிரியர்க்கும் மனமார்ந்த நன்றிகள்.
" எத்தனை கோடி இன்பம் வைத்தாய் இவ்வுலகில்
இறைவா,............ இறைவா...........",
அத்தனையும் மனம்கனிந்து அனுபவிக்க வழி செய்த
இறைவா........உனக்கு நன்றி! நன்றி!!.
வாழ்க வளமுடன். வாழ்க வையகம்.
என்றும் அன்புடன் ,
உங்கள் கலைச்செல்வி இராமநாதன்
============================