சமீபத்தில் 2003ல் நானும் என் துணைவரும் ஒரு சில மாதங்கள் எங்கள் பிள்ளைகள் செந்தில்குமார்,திருநாவு ஆகியோருடன் தங்கி, அமெரிக்காவில் சுற்றுலா சென்று வந்தோம். Almost whole of U.S.A, ஆங்காங்கே 'flight' இல் சென்று சுற்றிப் பார்த்து விட்டு வந்தோம், என்று கூறினால் மிகையாகாது. நாங்கள் பார்த்து ரசித்த ஊர்களையும், இடங்களையும் சொல்லப் போனால், அப்பட்டியல் நீண்டு கொண்டே போகும். எனினும் சில முக்கியமான இடங்களையும், சம்பவங்களையும் அவசியம் குறிப்பிட விரும்புகிறேன்.
Washington இல் Dollars print பண்ணுகிற இடத்தையும் மற்றும் NewYork இல் சின்னத்தீவில் உள்ள Statue of liberty, சுதந்திர தேவியின் சிலையையும் படகில் மிக அருகில் சென்று பார்த்ததும் பிரமித்துப் போனோம். "Washington Lincoln Memorial"-(முன்னாள் அமெரிக்க அதிபர் ) அவர்களின் மிகப்பெரிய சிலை அமர்ந்த நிலையில் உள்ளது. அமெரிக்காவில் அப்போது நிலவிய அடிமைத்தளையை தகர்த்தெறிவதற்காக அரும்பாடு பட்டு கொடியவனின் குண்டுக்கு இரையானவர் 'லிங்கன்' என்ற அந்த மாமனிதர். 'அமெரிக்காவின் காந்தி' என்றே கூறலாம் என்று எண்ணுகிறேன். அங்கே அவர் கூறிய வாசகங்கள் "Each and everybody has a right to live their own live independently, as long as they don't interfere in the rights of others-life, liberty and pursuit of happiness should be equal to all" என்று பொறிக்கப்பட்டிருக்கின்றன. அந்த நெஞ்சைத் தொடும் வாசகத்தை பலமுறை படித்தேன். அந்த மாமனிதரின் உருவத்தை வணங்கி விட்டு வந்தேன்.
அதேபோன்று, தன் நாட்டு மக்களுக்காக தன் இன்னுயிரை நீத்து , கொடியவனின் குண்டுக்கு இரையான அமெரிக்க அதிபர் John F. Kennedy யின் சமாதியை Arlington என்ற ஊரில் பார்த்து, அங்கே 24 மணி நேரமும், நம் காந்தி சமாதியைப் போன்றே, எரியும் அந்த அணையா ஜோதியையும் பார்த்து வணங்கினோம். அப்பொழுது , "Ask not what your country did for you, ask what you did for the country", என்று பல ஆண்டுக்கு முன்னர் கென்னடி தன் நாட்டு மக்களுக்கு கூறிய அறிவுரை, " நாடு உனக்கு என்ன செய்தது என்று கேட்காதே. நீ நாட்டிற்கு என்ன செய்தாய் என்று கேள்" என்பது எனக்கு நினைவிற்கு வந்தது. கென்னடி என்றாலே நம் அனைவருக்கும் நினைவிற்கு வருவது அந்தப் பொன்னான வரிகள் தானே. ஒவ்வொரு குடிமகனும் தன் பங்களிப்பை தன்னை ஈன்று வளர்த்த தன் தாய் நாட்டிற்காக அவசியம் செய்தே ஆக வேண்டும் என்ற எண்ணமும் எனக்குள் அப்போது மேலோங்கியது.
மிக முக்கியமாக நாங்கள் பார்த்துப் பரவசமடைந்தது U.S.A. க்கும் Canadaவிற்கும் இடையே உள்ள border ல் அமைந்துள்ள உலகிலேயே மிகப் பெரிய நீர் வீழ்ச்சியான "Niagara Falls" தான். "Maid of the Mist", என்ற படகு மூலமும், "Cave of the Winds" எனும் டூரிலும் நீர் வீழ்ச்சியின் மிக அருகே செல்லும் போதும், அந்தச் சாரல் நம் மீது விழுவது பேரானந்தம் தரவல்லது. அது ஒரு , "நீர் வீழ்ச்சி" அல்ல; பொங்கி எழும் " நீர் எழுச்சி" என்றே எனக்குத் தோன்றியது ..
பாற்கடல் வானத்திலிருந்து அப்படியே நுரை நுரையாய் பொங்கிக் கீழே வீழ்ந்து, திரும்ப அந்த சாரல் மேலே வெண்மேகங்களாகப் பறக்கிறது. ஒரு நாள் முழுவதும் அங்கே தங்கி, பல வண்ணப் படங்கள் எடுத்துக் கொண்டதெல்லாம் நினைக்க நினைக்க ஆனந்தம். Niagara Falls இல் எழுதப்பட்டிருப்பது "Once a life-time journey" என்று "Niagara"வில் என்னால் மறக்க முடியாத நிகழ்வு, பல அமெரிக்கப் பெண்மணிகள், "I like you, I like your outfit, You are looking pretty, You look like a typical Indian, Shall I take a photo with you", என்று என்னுடன் சேர்ந்து என்னை அணைத்துக் கொண்டு, பல வண்ணப் படங்கள், தத்தம் கேமராக்களில் எடுத்துக் கொண்டது. என் வாழ்வில் மறக்க முடியாத அநுபவம்தான். நான் அணிந்திருந்த புத்தம்புது காஞ்சிபுரம் பட்டுச் சேலைக்கு அங்கே அவ்வளவு ஈர்ப்புத் தன்மை இருந்தது என்னவோ உண்மைதான்.
(போட்டோ: நயாக்ரா நதி அருகில் மூத்த மகன் திருநாவு வுடன் )
"Seratoga" (சேரடோகா) என்ற ஊரில் ஒரு சிறிய மலை மீது கட்டப்பட்டுள்ள என் அத்தை மகள் தமிழரசியின் எழில் மிகு வீட்டில் சில தினங்கள் தங்கியது இனிமையான அனுபவம். சுற்றிலும் செடி, கொடி, மரங்கள். ஆரஞ்சுப் பழ மரங்கள், பெரிய பெரிய கலர் கலர் ரோஜாப்பூச் செடிகளுடன் கூடிய இயற்கையுடன் அமைந்த சூழ்நிலை மனத்திற்கு மகிழ்வையும், அமைதியையும் தந்தது. அங்கே தமிழரசியின் சகோதரிகள், நாச்சம்மை, மற்றும் Dr. தில்லைக்கரசி தத்தம் குடும்பத்தினருடனும் 5 மணி நேரங்கள் கார் ஓட்டிக் கொண்டு மெனக்கெட்டு என்னைக் காண்பதற்காக, வந்ததும், பத்தாண்டுகள் கழித்து அவர்கள் மூவரையும் சந்தித்து, இரவு 2 மணி வரை மலரும் நினைவுகளாக, பழைய கதைகளைப் பேசி மகிழ்ந்ததும், 8 ஆண்டுகள் கழித்து என் தங்கை நாச்சு நடராஜனை (பல ஆண்டுகளாக U.S.A யில் வசித்து வரும் பிரசிடென்ட் அண்ணாமலை செட்டியார்-நாச்சம்மை ஆச்சி அவர்களின் மருமகள்) Davis இல், பெரிய வண்ண வண்ண ரோஜா மலர்கள் பூத்துக் குலுங்கும் தோட்ட அமைப்புடன் கூடிய அவர்களின் எழில் மிகு இல்லத்தில் சந்தித்து, அவர்கள் பிள்ளைகள் பாரதி, இளங்கோவுடன் விளையாடியதும், என் வாழ்வில் ஏற்பட்ட மிக மகிழ்வான அனுபவமன்றோ?
'Niagara' விற்கு அடுத்தபடியாக, நான் குறிப்பிட வேண்டியது, "Florida" மாகாணத்தில் உள்ள மிகப் பிரம்மாண்டமான "Walt Disney World" ஆகும். Disney World ஒரு தனி உலகம். அதை முழுவதும் சுற்றிப் பார்ப்பதென்றால், ஒரு வாரம் கூடப் போதாது. அந்ந கேளிக்கைகள் நிறைந்த இடம் மிக அதிசயமான, அற்புதமான உலகம். சிறுவர்களும் மற்றும் அனைத்து வயதினரும் பொழுதுபோக்குவதற்கு ஏற்ற மிக மகிழ்ச்சியான, உள்ளத்தைக் கொள்ளை கொள்ளும் இடம். பல வண்ண வண்ண, கலை நயத்துடன் கூடிய பொம்மைகள், குதூகலிக்க வைக்கும் , மோர்ட்டோர் அணிவகுப்பு, பல நாட்டு பெவிலியன்கள் என்று, எதை எழுத, எதை விட?. ஜப்பான் பெவிலியனில் நம் கண் முன்னரே சிப்பியை வெட்டி, அதன் வயிற்றைக் கீறி, முத்து எடுத்து தருகிறார்கள். அந்த முத்துவின் விலை 17 Dollar ( ஒரே ஒரு சிறிய முத்துவின் விலை கிட்டத்தட்ட 850 ரூபாய் ஆகிறது. இந்த முத்துக்களை பலரும் போட்டி போட்டுக் கொண்டு வாங்குகின்றனர்.(Disney World வந்து சென்றதன் நினைவாக).
40 ஆண்டுகட்கு முன்னர், எங்கள் அன்பு அப்பா அமரர் (வேந்தன் பட்டி தமிழ் ச் சான்றோர்) மெ. திரு. அரசு அவர்கள், தொலைக்காட்சியின் நுட்பங்களைப் படிப்பதற்காக ஜப்பான் சென்று வந்த போது, String of pearls (Mikimato pearls) (முத்து மாலைகள்) வாங்கி வந்து, அதை சிங்கப்பூரில் தங்கத்தில் சேர்த்து முத்து மாலைகளாகக் கட்டி, நானும், என் தங்கையும் தற்போதும் அணிந்து வருவதையும் நினைத்த போது, கண்கள் பனித்தன. தற்போது அந்த ஒரு 'Mikimoto pearls' இன் விலை 100 U.S Dollars என்று அறிந்த போது கண்கள் வியப்பில் விரிந்தன.
Walt Disney Worldஇல் 4D film பார்த்த போது, அந்தத் திரையில் வரும் மிகப்பெரிய பாம்பு, நம்மை உண்மையிலேயே கடிக்க வருவது போன்ற காட்சி வந்த போது, பயத்தில் கண்களையும், கைகளையும் இறுக்க மூடிக் கொண்டேன் , என் 6 வயது செல்லப் பேரன், பேர்த்திகள் வினீத், சிந்து தைரியமாக அந்த நிகழ்ச்சியைப் பார்த்ததுடன்,"அப்பத்தா, பயப்படுறீங்க, ஐயா கையைப் பிடிச்சுகங்க", என்று என்னைப் பார்த்து கேலி செய்ததும் என்னால் எளிதில் மறக்க முடியுமா என்ன?
July 4th U.S, சுதந்திர தினத்தன்று, வெட்ட வெளியில் அமெரிக்கர்களுடன், ஒரு பெரிய திடலில் புல் வெளியில் அமர்ந்து, வானை வேடிக்கை பார்த்தது மன நிறைவாக இருந்தது.
Austinஇல் நடந்த தமிழ்ச்சங்கத்தில் ஒரு மீட்டிங்கில் பல ஆண்டுகள் கழித்து என் மிக நெருங்கிய தோழியான 'இன்னிசை அரசி', 'பட்டிமன்றப் பேச்சாளர்' திருமதி. சரஸ்வதி இராமனாதன் அவர்களைச் சந்தித்து மகிழ்ச்சியுடன் உரையாடியது நான் பெற்ற பேறாகும்.
அப்போது அவர்கள் "கம்பனும், கவியரசு கண்ணதாசனும்" என்ற தலைப்பில் சுவையாக உரையாடினார்கள். அந்த நிகழ்ச்சியின் போது, வளர்ந்து வரும் இளம் பின்னனி பாடகி மதுமிதா, மற்றும் கர்நாடக இசைக் கலைஞர் சாருலதா ஆகியோரின் இன்னிசைக் கச்சேரியும் நடைபெற்றது. அப்போது சாருலதா அவர்கள் மூதறிஞர் 'இராஜாஜி' அவர்களின் "குறையொன்றுமில்லை மறைமூர்த்தி கண்ணா", என்ற பாடலையும், ஊத்துக் காடு வேங்கட சுப்பையரின் "அலைபாயுதே கண்ணா" என்ற பாடலையும் உணர்ச்சி ததும்பப் பாடியது, இன்று நினைக்கும் போதும், உள்ளத்தை பரவசமாக்குகிறது. அன்று இவர்கள் மூவருடனும் சேர்ந்து புகைப்படமும் எடுத்துக் கொண்டேன்.
‘Detroit' இல் உள்ள என இன்னொரு தோழி திருமதி. உமையாள் முத்து அவர்களை நேரில் பார்க்க இயலாவிடினும், phone இல் அவர்களுடன் மணிக்கணக்காக உரையாடியது மகிழ்ச்சியைத் தந்தது மற்றொரு அநுபவம்.
அமெரிக்கர்களைப் பற்றிப் பொதுவாக "அமெரிக்காவில் "Divorce" என்பது சர்வ சகஜம். ஒருத்திக்கு ஒருத்தன் என்ற கட்டுப்பாடெல்லாம் கிடையாது. சட்டையைக் கழற்றி எறிவதைப் போல், தத்தம் கணவனை, மனைவியை Divorce பண்ணிவிட்டு இரண்டாவது, மூன்றாவது திருமணம் செய்து கொண்டு வாழ்க்கை நடத்துகிறார்கள். இதெல்லாம் ஒரு வாழ்க்கையா? " என்று நாம் ஏளனமாகப் பேசுகிறோம். அது அவர்களின் தனிப்பட்ட வாழ்க்கை. அது அவரவர்கள் மனநிலையைப் பொறுத்தது. கூடி வாழ்வதும், பிரிந்து வாழ்வதும் அவர்களே முடிவு செய்து கொள்ள வேண்டிய ஒன்று. ஆனால் ஒன்று நிச்சயம். அமெரிக்கர்கள் பண்புள்ளவர்கள். நாங்கள் walking செல்லும் போது கூட, பலரும் எங்களைப் பார்த்து, சிநேக பாவத்துடன், முகமலர்ச்சியுடன் நெடுநாள் பழகியவர்களைப் போன்று, கைகளை உயரே அசைத்து "Hai"என்றும் "Bye" என்றும், "Have a nice day" என்றும், "Have a good day" என்றும் இன்முகத்துடன் கூறியதும் என்னால் வாழ்வில் என்றைக்குமே மறக்க இயலாத இனிமையான, அற்புதமான அநுபவங்களாகும்.
"அன்புதனில் செழித்திடும் இவ்வையகம்",
என்று மகாகவி பாரதி அன்று பாடியது, அமெரிக்காவில் வாழும் மனிதர்களின் செயல்களை நடைமுறையில் இன்று பார்த்ததும் நினைவிற்கு வருகிறது. அமெரிக்கர்கள் எங்களிடம் முகமலர்ச்சியுடன் பேசும்போது
"சின்னச் சின்ன அன்பில் தானே ஜீவனிருக்கு
பின்னர் காசு பணம் என்னத்துக்கு"
பின்னர் காசு பணம் என்னத்துக்கு"
என்ற திரைப்படப் பாடல் வரிகள் தான் நினைவிற்கு வருகின்றன.
மிக முக்கியமாக அமெரிக்காவில் எனக்கு மிகவும் பிடித்திருந்தது, நம் பாரம்பரிய மிக்க இந்துக் கோயில்கள் தான். பல ஊர்களில் வட இந்திய அமைப்பில், பளிங்கினால் கட்டப்பட்ட பெருமாள் கோவில்களும் (அசல் திருப்பதி போன்றே) மேலும் Houstonஇல் உள்ள மீனாக்ஷி அம்மன் கோவிலும் என்னை மட்டுமல்ல, நம் இந்தியர்கள் அனைவரையுமே ஈர்க்கும் தன்மை வாய்ந்ததுதான். ஆங்கே நிலவிய அமைதியும், தூய்மையும், தெய்வீகமும் அளவிடற்கறியது. அதே மாதிரி சூழ்நிலை அமைந்த தெய்வீக ஸ்தலம், திருச்சியில் அமைந்துள்ள புத்தூர் கன்டோன்மென்ட், சுவாமி ஐயப்பன் கோவில் என்பது எல்லாரும் ஏற்றுக் கொள்ளக் கூடிய ஒன்று.
நாங்கள் அமெரிக்காவில் பல ஊர்களுக்குச் சென்றபோது நான் சுத்த சைவமானதால், உணவுப் பிரச்சினை வரும் என எதிர்பார்த்தேன். ஆனால் நான் எண்ணியதற்கு மாறாக, பல பெரிய நகரங்களில் கூட (even in New York) நம் தென்னிந்திய உணவு வகைகளான பொங்கல், இட்லி, வடை, மசால் தோசை, சாம்பார் சாதம், தயிர் சாதம் (ஊறுகாயுடன்) கிடைத்து, நான் விரும்பிச் சாப்பிட்டு மகிழ்ந்தேன் .. அங்கே, New York இல் ஒரு பெரிய கடையில், "Save a cow, be a vegetarian", என்று ஒரு slideல் எழுதப்பட்டிருந்தது". அமெரிக்கர்கள் பலர் சைவ உணவின் மகத்துவத்தை உணர்ந்து (vegetarian diet is good for the body as well as the mind) என்பதை அறிந்து, தற்போது சைவ உணவிற்கு மாறி வருவது அறிந்து மகிழ்ச்சியடைந்தேன்.
"கொல்லான் புலாலை மறுத்தானைக்
கை கூப்பி எல்லா உயிரும் தொழும்",

என்று இரண்டாயிரம் ஆண்டுகட்கு முன்னர் வள்ளுவர் பாடிய குறள் தற்போது நினைவிற்கு வருகிறது.
அங்கே வேறு ஒரு slide இல், ""A women always gives sound advice, sound 99% and advice 1% என்று எழுதியிருந்ததைப் பார்த்துப் பலரும் சிரித்தனர்.
இடையே ஒரு வேதனையான காட்சியை தங்களிடையே பகிர்ந்து கொள்ளவே விரும்புகிறேன். நல்லதை மட்டுமே எழுதாமல் இதையும் எழுதுகிறேன். Washingtonஇல் Holocaust museum" என்ற ஒன்று உள்ளது. அங்கே ஜெர்மானிய அதிபர், கொடுங்கோலாட்சி அதிபர், மக்களை, ஒரு பெரிய ஹாலில் தள்ளி, கீழே gas chamber ஐத் திறந்து விட்டு, அத்தனை பேரையும் சாகடித்ததையெல்லாம், விளாவாரியாக பல சித்திரங்கள் மூலம் விவரித்திருக்கின்றனர். அப்போது T.V.Screen இல் ஒரு 80 வயது மூதாட்டி Hitler பிடியிலிருந்து அதிர்ஷ்டவசமாகத் தப்பியவர் பேசியதைப் பார்வையாளர்களுக்குப் போட்டுக் காட்டினார்கள். "Have you heard any one punished for no reason? Yes. We were punished for no reason at all, just because we followed our own religion.
I will never forget and forgive", என்று அந்தமூதாட்டி கண்களில் நீர் மல்கக் கூறியதை, screenல் போட்டுக் காட்டியபோது, அதைப் பார்த்த அத்தனை பேர் கண்களும் குளமாகியது. அந்த மூதாட்டி பேசியதை இப்போது நினைத்தாலும் மனது உருகுகிறது. தற்போது உலகில் இந்த மாதிரி நிலைமை எங்குமே இல்லை என நினைத்து ஆறுதல் அடைவோம். எம்மதமும் சம்மதம், எந்த இனத்தவரும் நம் சகோதரர்", என்ற ஒற்றுமை உணர்வுடனே நாம் அனைவரும் மன நிறைவுடன் வாழ்ந்து வருகின்றோம்.
அமெரிக்கர்கள் பலர், தங்கள் இல்லங்களில் தேசியக் கொடியைப் பறக்கவிட்டிருக்கின்றனர். அது அவர்கள் தேசப்பற்றை வெளிக் கொணர்கிறது.
'நாணல்' என்ற வழுவழுப்பான மாதப் பத்திரிக்கை நம் இனத்தோருக்காக வெளிவருவதும், பலர் அதை விரும்பிப் படிப்பதும், நம் பாரம்பரிய மிக்க "பிள்ளையார் நோன்பை மார்கழி மாதம் ஆண்டுதோறும் நம்மவர்கள் ஒற்றுமையுடன் ஒன்று சேர்ந்து கொண்டாடி வருவதும் மனநிறைவான, மகிழ்வான விஷயங்கள். அமெரிக்காவில் பல ஆண்டுகளாக, பல இலட்சக்கணக்கான நம் இந்திய சகோதர சகோதரிகள் பல்வேறு உயர் பதவிகளை நேர்மையுடன் வகித்து, போராடி, புகழோடு, பங்களா, கார், வேன் என்று அனைத்து வசதிகளுடன் வாழ்ந்து வருவது உண்மையிலேயே போற்றுதலுக்குறிய, மகிழ்வான அம்சமாகும். அந்த இந்தியர்கள் தாம் மட்டும் வசதியான வாழ்க்கை வாழாது, தம்மை ஈன்றெடுத்த தாய் வீடான தாயகத்தை, தமது பாரத தேசத்தை, மறவாது, இந்த மண்ணில் வசித்து வரும் நலிவு ற்றோர்க்குத் தயங்காமல், தங்களால் இயன்ற வரை நல்ல மனத்துடன் பொருளுதவி செய்து வருவதும், நெகிழ்வான, பாராட்டப்படட வேண்டிய விஷயங்கள் தான்.
அமெரிக்காவின் அதிசயங்களைக் காணக் கண்கோடி வேண்டும். இந்த மாதிரி ஒரு அரிய வாய்ப்பு எங்களுக்குக் கிடைத்ததற்கு, அந்தப் பரம்பொருளுக்கு நன்றி செலுத்துகிறேன்.
'Flight' இல் நாங்கள் தாயகம் திரும்பி வந்தபோது, எங்கிருந்தோ தென்றலில் தவழ்ந்து, தேனாய் ஒலித்து, எங்கள் உள்ளத்தை கிறக்கத்தில் ஆழ்த்திய பாடல்,
"ஆனந்தம் ஆனந்தம் பாடும்
மனம் ஆசை ஊஞ்சலில் ஆடும்.
ஆயிரம் ஆயிரம் காலம்
இந்த ஞாபகம் பூ மழை தூவும்".
May God Bless America
May God Bless the whole Universe.