முன்னுரை .....
என்னைப் பற்றி .......சில வரிகள் !
புதுக்கோட்டை மாவட்டம், வேந்தன்பட்டியில் , தமிழ்ச் சான்றோர் அமரர் , மெ .திரு . அரசு - நாச்சம்மை ஆச்சி அவர்களின் மூத்த புதல்வியாகப் பிறந்து , மிகச் செல்லமாக வளர்க்கப் பட்ட எனக்குப் பெற்றோர் முதலில் இட்ட பெயர் "கலையரசி" ஆகும். .எனது ஆரம்பக்கல்வியை வேந்தன்பட்டி திரு. வெங்கட்ராம ஐயர் அவர்களிடம் கற்றேன் .1957 வரை வேந்தன்பட்டியில் , பள்ளி வசதி, அவ்வளவாக இல்லை. சிவன் கோவில் தான் எங்கள் பள்ளிக்கூடம் !.பின்னர் மதுரை செயின்ட் ஜோசப் பள்ளியில் பெண்கள் விடுதியில் தங்கி இரண்டு ஆண்டுகள் கல்வி கற்றேன் .
என் தந்தையார் , சிங்கப்பூரில் வானொலியில் பணியாற்றியதால் , தாயகம் விட்டு எழில் கொஞ்சும் சிங்கப்பூர் சென்றேன் .சிங்கப்பூரில் 9 ஆண்டுகள் st .மேரி மௌன்ட் கான்வென்டில் பயின்றேன் . அப்போது எனக்கு சிங்கப்பூர் சிறார் குடியுரிமை கிடைத்தது ( Minor citizenship ). திருமண வயது ஆன பின்னர் மீண்டும் தாயகம் திரும்பினேன் . 1970 ம் ஆண்டு ஜனவரி மாதம் இந்தியன் ஓவர்சீஸ் வங்கியில் பெரும் பொறுப்பு வகித்த ,நெற்குப்பை, அமரர் .திருநாவுக்கரசு செட்டியார்,- சௌந்தரம் ஆச்சி அவர்களின் புதல்வர். திரு. இராமநாதன் அவர்களைக் கரம்பிடித்தேன் . என் கணவரும், கல்கத்தா இந்தியன் ஓவர்சீஸ் வங்கியில் காசாளராகப் பணியாற்றினார் . எனவே, சிங்கப்பூர் குடியுரிமையை இழக்க நேரிட்டது. பின்னர் ,எங்கள் இல் வாழ்க்கை இந்தியாவிலேயே ,கல்கத்தாவில் இனிதே தொடங்கியது. நியூமராலஜியில் பெரும் பற்றுக் கொண்ட என் தந்தையார், திருமணத்திற்கு பின், என் பெயரைக் கலைச்செல்வி ராமநாதன் என்று மாற்றி அமைத்தார்கள் .கல்கத்தாவில் வாழ்ந்த காலத்தில் , ஹௌரா தமிழ் சங்கம் , மற்றும், கல்கத்தா பாரதி தமிழ் சங்கம் ஆகிய சங்கங்களில் , பேச்சுப் போட்டி , பட்டிமன்றம் போன்ற நிகழ்வுகளில் பங்கேற்பதுண்டு .
பள்ளி பருவத்தில் , சிங்கையில் இருக்கும் போது தமிழ் முரசு, சிறுவர் மலருக்கு எழுதியுள்ளேன் . சிங்கப்பூர் தமிழ் வானொலி -சிறுவர் நிகழ்ச்சி , நாடகங்களில் பங்கேற்றுள்ளேன் .என் தந்தையாருக்கு , சிங்கப்பூர் வானொலி மற்றும் , சிங்கப்பூர் தமிழ்ச் சங்கம், ஆகியவற்றில் இருந்த தொடர்பின் காரணமாக ,எனக்கு இளமையிலேயே பல தமிழ் அறிஞர்களை அவ்வப்போது பார்க்கவும் , பேசவும் , நல் வாய்ப்புக் கிடைத்தது .சிங்கப்பூர் வரும் தமிழ் அறிஞர்களில், பெரும்பாலானோர், எங்கள் இல்லத்திற்கு விருந்தினராக வருகை தருவார்கள். அவர்களில் குறிப்பிடத் தக்கவர்கள் , Dr . மு. வரதராசனார் ,Dr . தெ .பொ .மீனாட்சி சுந்தரனார் , பாரதியாரின் பெயர்த்தி , விஜய பாரதி ,பண்டிதமணி கதிரேசன் செட்டியார் , Dr . சரஸ்வதி ராமநாதன் , திருமதி உமையாள் முத்து , திருமதி, சௌந்தர கைலாசம், போன்றவர்கள் ஆகும்.
எனக்கு ஒரு தம்பி (மெய்யப்பன்) , ஒரு தங்கை (நாச்சு ) இருவரும் முறையே, கனடா, அமெரிக்க வில் வசிக்கின்றார்கள். என் மூன்று தங்கமான புதல்வர்கள் திருநாவு, செந்தில், கண்ணன், மூவரும் சிறப்பான கல்வி கற்று முறையே Atlanta , Dallas , Wellington ஆகிய ஊர்களில் , அமெரிக்காவிலும் , நியூசிலாந்திலும் வசிக்கின்றனர் . சில ஆண்டு களுக்கு முன்னர் என் மகன் கண்ணன் பின்லாந்தில் வசித்து வந்தார்.ஒவ்வொரு முறையும் பிள்ளைகள் வசிக்கிற ஊர் களுக்கு செல்லும் வாய்ப்பு கிடைத்த போது என் அனுபவங்களை சுவைபட , நேருக்கு நேர் அமர்ந்து ஒரு கதை சொல்வதைப் போல , எளிமையாக பேச்சு நடையில் கொஞ்சமும் ரசனை குறையாமல் எழுதுவது எனக்கு பொழுது போக்கு.
என் போன்ற ஆச்சி மார்களின் எழுத்துத் திறமையை வளர்க்க வேண்டும் என்ற ஒரே நோக்கத்துடன் , நான் எழுதிய அனைத்து பயணக் கட்டுரைகளையும் ஓன்று விடாமல் நகரத்தார் மலரில் பிரசுரம் செய்து என்னை மேலும் மேலும் எழுத ஊக்குவித்த ஆசிரியர் , திருவாளர். இளங்கோவன் அண்ணன் அவர்களை செட்டியார் சமூகம் என்றென்றும் பாராட்டக் கடமை பட்டுள்ளது .
1995ல் எங்கள் மூத்த மகன் திருநாவு - Dr .மீனாட்சி திருமணம் நடந்தேறியது.மருமகள் , டாக்டர் மீனா திருநாவு , எம்.டி., ஹெமாட்டாலஜி மற்றும் மருத்துவ புற்றுநோயியல் ஆகியவற்றில் சான்றிதழ் பெற்றவர். அட்லாண்டாவில் உள்ள எமோரி பல்கலைக்கழகத்தின் வின்ஷிப் புற்றுநோய் நிறுவனத்தில் ஹீமாட்டாலஜி மற்றும் மருத்துவ புற்றுநோயியல் துறையில் Assistant Professor ஆக பணி யாற்றுகிறார் .
எங்கள் மூத்த பேரன் வினீத் ,இந்த ஆண்டு சிகாகோவில் உள்ள வடமேற்கு பல்கலைக்கழக ஃபைன்பெர்க் மருத்துவப் பள்ளியில், முதலாம் ஆண்டு மருத்துவம் பயில்கிறார்.
1996 டிசம்பரில் என் கணவர் அதுவரை வகித்த IOB vigilance officer, பதவியிலிருந்து விலகி , விருப்ப ஒய்வு பெற்றபின் , தொடர்ந்து அயராமல் கம்ப்யூட்டர் கற்றுக்கொண்டதுடன் , வட்டித் தொழில் மற்றும் , Edelweiss share broking ltd, கம்பெனியில் நிதி ஆலோசகர் / sub-broker ஆக பங்குச் சந்தை நிபுணராக விளங்குகிறார் . ஓய்வின்றி உழைப்பது-விடா முயற்சி - தன்னம்பிக்கை இவை மூன்றும் என் கணவரின் தாரக மந்திரம்
2003ல் ,. என் மூன்றாம் மகன் கண்ணன் - மீனாட்சி MBA , திருமணம் இனிதே நடைபெற்றது.
2015ல் , 8/8/2015 Dallas USA ல் எங்கள் பெயர்த்தி சிந்துவின் பரத நாட்டிய அரங்கேற்றம் முறைப்படி விமரிசை யாக நடைபெற்றது.
2016ல் , எங்கள் ஊரில் ,"calaisvilla " என்கின்ற அதி நவீன, கனவு இல்லம் ஒன்றைக் கட்டி புது மனை புகு விழா நடத்தினோம்
.
2019ல், எங்கள் வீட்டில், நெற்குப்பையில், பிள்ளையார் பட்டி மேதகு .பிட்சை குருக்கள் முன்னின்று, எங்களுக்கு பீமரத சாந்தி 70 ஆம் ஆண்டு நிறைவு விழா , விமரிசையாக நடைபெற்றது
தனித்தனிப் பூக்களாய் (உதிரிப்பூக்களாய் ) பிரிந்திருந்த என் கட்டுரைகளை எல்லாம் ஒரு சேர மாலை யாய் கட்டிப் பார்த்து மகிழ என் உள் மனம் பல காலமாக ஏங்கியதுண்டு.. அந்த ஆசை இன்று நிறைவேற்றப் பட்டிருக்கிறது . இந்த கட்டுரைத் தொகுப்பை புத்தகமாக உருவாக்கி , இடை இடையே எங்கள் குடும்ப நிகழ்வுகளின் புகைப்படங்களுடன் புத்தகத்திற்கு மெருகூட்டி என் நீண்ட நாள் ஆசையை நிறைவேற்றிய என் கணவருக்கும், பிள்ளைகளுக்கும், நன்கு வடிவமைத்து அசிட்ட நகரத்தார் மலர் ஆசிரியர் இளங்கோவன் அண்ணன் அவர்கட்கும் , என்னை பாராட்டி ஊக்குவித்த சொந்த பந்தங்களுக்கு மனமார்ந்த நன்றி !

1996ல் எங்கள் இரண்டாம் மகன் செந்தில் குமார் -ஹேமலதா BE ., திருமணம் நடைபெற்றது . செந்தில் குமார் வடமேற்கு பல்கலைக்கழகம் - கெல்லாக் ஸ்கூல் ஆஃப் மேனேஜ்மென்ட்ல் MBA
தேர்ச்சி பெற்று சொந்த மாக தொழில் செய்கிறார் . நேரடி அஞ்சல் சந்தைப்படுத்தல், மற்றும் கடன் இடர் அனலிட்டிக்ஸ் தலைவர், சப் பிரைம் கடன் துறையில் ஆழ்ந்த நிபுணத்துவம் பெற்றவர். செந்தில் ராமநாத், டி.எம் அனலிட்டிக்ஸ் என்ற தனது சொந்த கம்பனிக்கு , தலைமை நிர்வாக அதிகாரி, CEO , ஆக, பிளானோ, டெக்சாஸில் இருப்பதுடன் சொந்த மாகப் பாலர் பள்ளி,(Pre-school) ஒன்றையும் திறம்பட நிர்வகித்து நடத்துகிறார் .
1996 டிசம்பரில் என் கணவர் அதுவரை வகித்த IOB vigilance officer, பதவியிலிருந்து விலகி , விருப்ப ஒய்வு பெற்றபின் , தொடர்ந்து அயராமல் கம்ப்யூட்டர் கற்றுக்கொண்டதுடன் , வட்டித் தொழில் மற்றும் , Edelweiss share broking ltd, கம்பெனியில் நிதி ஆலோசகர் / sub-broker ஆக பங்குச் சந்தை நிபுணராக விளங்குகிறார் . ஓய்வின்றி உழைப்பது-விடா முயற்சி - தன்னம்பிக்கை இவை மூன்றும் என் கணவரின் தாரக மந்திரம்
2003ல் ,. என் மூன்றாம் மகன் கண்ணன் - மீனாட்சி MBA , திருமணம் இனிதே நடைபெற்றது.
பின்லாந்து குடியுரிமை பெற்ற கண்ணன், குடும்பத்துடன் தற்போது நியூஸிலாந்தில், வெல்லிங்டனில், Ericsson company ல் ( Head of service delivery,)சேவை வழங்கல் தலைவராக செம்மையாக பணி புரிகிறார் .
2009ல், எங்கள் வீட்டில், நெற்குப்பையில், பிள்ளையார் பட்டி மேதகு .பிட்சை குருக்கள் முன்னின்று, எங்களுக்கு சஷ்டியப்ப பூர்த்தி 60 ஆம் ஆண்டு நிறைவு விழா , விமரிசையாக நடைபெற்றது.
2009ல், எங்கள் வீட்டில், நெற்குப்பையில், பிள்ளையார் பட்டி மேதகு .பிட்சை குருக்கள் முன்னின்று, எங்களுக்கு சஷ்டியப்ப பூர்த்தி 60 ஆம் ஆண்டு நிறைவு விழா , விமரிசையாக நடைபெற்றது.
2015ல் , 8/8/2015 Dallas USA ல் எங்கள் பெயர்த்தி சிந்துவின் பரத நாட்டிய அரங்கேற்றம் முறைப்படி விமரிசை யாக நடைபெற்றது.
2016ல் , எங்கள் ஊரில் ,"calaisvilla " என்கின்ற அதி நவீன, கனவு இல்லம் ஒன்றைக் கட்டி புது மனை புகு விழா நடத்தினோம்
.
2019ல், எங்கள் வீட்டில், நெற்குப்பையில், பிள்ளையார் பட்டி மேதகு .பிட்சை குருக்கள் முன்னின்று, எங்களுக்கு பீமரத சாந்தி 70 ஆம் ஆண்டு நிறைவு விழா , விமரிசையாக நடைபெற்றது
தனித்தனிப் பூக்களாய் (உதிரிப்பூக்களாய் ) பிரிந்திருந்த என் கட்டுரைகளை எல்லாம் ஒரு சேர மாலை யாய் கட்டிப் பார்த்து மகிழ என் உள் மனம் பல காலமாக ஏங்கியதுண்டு.. அந்த ஆசை இன்று நிறைவேற்றப் பட்டிருக்கிறது . இந்த கட்டுரைத் தொகுப்பை புத்தகமாக உருவாக்கி , இடை இடையே எங்கள் குடும்ப நிகழ்வுகளின் புகைப்படங்களுடன் புத்தகத்திற்கு மெருகூட்டி என் நீண்ட நாள் ஆசையை நிறைவேற்றிய என் கணவருக்கும், பிள்ளைகளுக்கும், நன்கு வடிவமைத்து அசிட்ட நகரத்தார் மலர் ஆசிரியர் இளங்கோவன் அண்ணன் அவர்கட்கும் , என்னை பாராட்டி ஊக்குவித்த சொந்த பந்தங்களுக்கு மனமார்ந்த நன்றி !
=================================================================================

No comments:
Post a Comment