Sunday, February 16, 2020

திருக்குறள் பரப்பிய திருநாவுக்கரசர் chappter 7

திருக்குறள் பரப்பிய திருநாவுக்கரசர் 
                                  "நாணல்" USA ல் வெளி வந்த கட்டுரை 
        இமயத்தின் எல்லை கண்ட எந்தமிழ் என்றும் வாழ்க !
                             *******************

எங்கள் ஐயா , தமிழ்ச்சான்றோர் , மெ. திரு.
அரசு  அவர்கள்,  சிங்கப்பூரில் வாழ்ந்த காலத்தில், "அரசு அண்ணன்" என்று எல்லோராலும் அன்புடன் அழைக்கப்பட்டார். அவர்களை அங்கு தெரியாத தமிழ் உள்ளங்களே இல்லை எனலாம். 

"அடிக்கடி குறளைக் கூறி , அதன்படி நின்று காட்டும், பிடித்த நும் நேர்மை கண்டு, பெருமகிழ்வெய்துகின்றோம்,  
தடித்ததோர் சொல்லை என்றும் தனைமறந்தேனும் கூறாய்"--என்று 
          (1923 -1995)                    மெ. திரு. அரசு அவர்களை வாழ்த்தி , அவர்தம் மாணாக்கர்,                                                                               பெரி.சிவனடியான்  அவர்கள்  எழுதியது  பொன்னான வரிகள்  ஆகும்.

குறளின்பால் பெரும்பற்றுக் கொண்டு, தினம் ஓர் அதிகாரம் என்று ,தம் மூன்று குழந்தைகட்கும் பயிற்றுவித்து,  மூவரும் 1330 குறட்பாக்களையும், முழுமையாக ஒப்புவித்து பரிசு பெற்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. அதனால் எங்கள் மாமா திருநா மெய்யப்பன் (canada), தனது எட்டாவது வயதிலேயே 1330 குறள்களையும்  ஒப்பிக்கும் ஆற்றல் பெற்றிருந்தார். எங்கள் ஐயா , இலங்கையில் வசித்த காலத்தில் ,  சென்றவிடமெல்லாம் குறளதனைப்  பரப்பியதால் , " திருக்குறள் பரப்பும் திருநாவுக்கரசர்"  என்ற பட்டப் பெயரையும்  பெற்றார்கள்.

"தமிழ்ச் சான்றோர்" என்ற பட்டமும் பெற்ற எங்கள் ஐயா, சிங்கப்பூரில் தமிழும் ஓர் ஆட்சி மொழியாக அமைய ,முன்னோடியாகத் திகழ்ந்த பலருள், முக்கிய அங்கம் வகித்தவர்கள். மிகப் பெரிய புத்தகப் பிரியர். ஏறத்தாழ இரண்டாயிரம்  தமிழ் , மற்றும் ஆங்கிலப் புத்தகங்களை, வீட்டில் சேகரித்திருந்தார்.  எந்நேரமும் கையில்  ஓரு  நூலோடுதான், அவர்களைப் பார்க்கலாம். தன்  இறுதி நாளில் கூட, "DAY  TO DAY WITH GANDHI"  என்ற மஹாதேவ் தேசாய் எழுதிய ஆங்கில நூலைப் படித்துக் கொண்டிருந்தார்கள். தன் இளமையில் காந்தி அடிகளைப் பின்பற்றி , தனது எட்டு மாணாக்கர்களுடன்  டெல்லி சென்று , காந்தியடிகளின்  உண்ணாவிரதத்திலும்  பங்கேற்றார். 

"கறந்த பால்த் தூய்மையும் , கனிந்த பழ நெகிழ்ச்சியும் அரசுவின் பண்பு " என அவர்களது நெருங்கிய நண்பர் தமிழ்ச் செம்மல் , டாக்டர். வ.சுப. மாணிக்கனார்  அவர்களால்  பாராட்டப்  பட்டவர். வலது கை கொடுப்பது, இடது கைக்கு  தெரியக்கூடாது, என்பது போல, விளம்பரமின்றி, தான தருமங்கள் செய்தவர். பத்து ரூபாய்க்கு ஒரு ரூபாய் தருமம் செய்யவேண்டும், என்று கூறி, இலங்கைத் தேயிலைத் தோட்டத்தில்,   மாதம் 130 ரூபாய் சம்பாதித்த காலத்திலும், 13 ரூபாயை , முன்னர், தான் தமிழாசிரியராகப் பணியாற்றிய, கண்டனூர் சிட்டாள்  ஆச்சி உயர்நிலைப்பள்ளிக்கு, நன்கொடையாக  அனுப்பியாவர்.  அந்தக் கொள்கையை இறுதி வரை பின்பற்றியவர். 

அன்னாரை அன்புடன் நினைவுகூரும் பேரன்கள்,
 1) திருநாவு (Atlanta); 2) செந்தில் (Dallas); 3)கண்ணன் (New Zealand);   
            "நாணல்" USA ல் வெளி வந்த கட்டுரை 











           (1923-1995)

No comments:

Post a Comment